மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
கண்தான மாவட்ட தலைவர் அரிமா Dr.J. கணேஷ் ஐயா அவர்களது கண்தான விழிப்புரை ஜெயா தொலைக்காட்சியில் காண்க..
(1) Dr J Ganesh in Jaya Tv about Eye Donation Awareness Part 1
(2) Dr J Ganesh in Jaya Tv about Eye Donation Awareness Part 2
(3) Dr J Ganesh in Jaya Tv about Eye Donation Awareness Part 3
(4) Dr J Ganesh in Jaya Tv about Eye Donation Awareness Part 4
(5) Dr J Ganesh in Jaya Tv about Eye Donation Awareness Part 5
மரியாதைக்குரிய அம்மையார் ஹெலன்கெல்லர் அவர்கள்.(அம்மையாரைப்பற்றி இந்தப்பக்கத்தில் இறுதியில் பதிவிட்டுள்ளேன்.)
திருமிகு.ஹெலன்கெல்லர் குழந்தையாக இருந்தபோது அவருக்கு உதவிய ஆசிரியை மரியாதைக்குரிய ஆனி சல்லிவன் அம்மையார் அவர்கள்.
ஹெலன்கெல்லர் என்னும் உலகமகா மேதை,அனைவருக்கும் முன்னுதாரணமான அம்மையார்..........
உடலில் சிறிய அடியோ, காயமோ பட்டாலே ஊரையே கூட்டுபவர்கள் பலர். உடலில் சிறிய ஊனம் ஏற்பட்டுவிட்டால், உலகமே முடிந்து விட்டதை போல சோர்ந்து உட்கார்ந்து விடும் பலருக்கு நடுவில், ஹெலன்கெல்லர் துணிவும் விடாமுயற்சியும் உள்ள மங்கை... மற்றவர்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டியவர்.
காது கேட்காமல், கண் பார்க்க முடியாமல் அவதிப்பட்டார். ஆனாலும், முடங்கிப் போய் உட்கார்ந்து விடவில்லை. பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் சாதித்துக் காட்டினார். அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் டஸ்கம்பியா என்ற இடத்தில் ஹெலன்கெல்லர் பிறந்தார். 19 மாதம் (ஒன்றரை வயது) வரை திடகாத்திரமான ஒரு பெண்ணாகத்தான் வளர்ந்தார்.
திடீரென்று மூளையிலும், வயிற்றிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அது தீவிரமான காய்ச்சலில் கொண்டுபோய் விட்டுவிட்டது. அதனால் பார்க்கும் சக்தியும், கேட்கும் சக்தியும் அவரை விட்டு மறைந்தன.
1887ல் ஹெலன்கெல்லரின் பெற்றோர், அறிவியல் மேதைஅலெக்சாண்டர் கிரகாம்பெல்லை சந்தித்தனர். அவர் பார்வையிழந்தவர்களுக்கான பெர்க்கின்ஸ் பள்ளியில், ஹெலனை சேர்த்துவிட்டார். அங்கே, ஆனி சல்லிவன் என்ற பெண் ஹெலன்கெல்லரின் ஆசிரியையாக நியமிக்கப்பட்டார். இவர்களின் நட்பு 49 ஆண்டுகள் நீடித்தன.
மற்றவர்கள் பேசும்போது, அவர்கள் உதட்டின் மேல் கை வைத்து உணரும் அதிர்வுகள் மூலம், மற்றவர்கள் சொல்வதை ஹெலன் புரிந்து கொண்டார். இதை ஆனி சல்லிவன்தான் ஹெலனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தின் மொழிகளை கற்றறிந்தார்.
1894ல் ஆனி சல்லிவன் ஹெலனை நியூயார்க் அழைத்து சென்றார். அங்கு காது கேளாதோர் பள்ளியில் பயிற்சி பெற்றார். 1904ல் ஹெலன் கெல்லர் பி.ஏ.,பட்டம் பெற்றார். பார்வையற்ற, காது கேட்காத ஒரு பெண் பட்டம் பெற்றது அதுவே முதல் முறை.
ஆஸ்திரேலியா தத்துவவாதி வில்ஹெய்ம் ஜெருசலேம், ஹெலனின் இலக்கிய புன்னகையை கண்டறிந்தார். அவரை எழுத்தாளராக மாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டார். மற்றவர்களின் உதட்டசைவை உன்னிப்பாக கவனித்து, அதைப் போலவே பேசிப் பேசி பழகினார். இதன் விளைவாக, பெரிய பேச்சாளராக மாறினார்.
மார்க்ட்வெய்ன், சார்லி சாப்ளின், கிரகாம்பெல் போன்ற கலை, இலக்கிய மேதைகளிடம் நட்புறவு கொண்டார். அமெரிக்க ஜனாதிபதியுடனும் நட்பு கொண்டார். ஊனமுற்றோருக்கான பல அமைப்புகள் உருவாக காரணமானார்.
திப்ரோஸ்ட் கிங், த ஸ்டோரி ஆப் மை லைப், மை ரிலிஜன், லைட் இன் மை பார்க்னெஸ் உள்ளிட்ட உலகம் போற்றும் 12 புத்தகங்களை எழுதினார். அரசியல், வரலாறு, தத்துவம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை எழுதினார். பார்வை இழந்தும், கேட்கும் திறன் இழந்தும், மாபெரும் எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், சமூக ஆர்வலராகவும் வாழ்ந்து காட்டிய அதிசய பெண்தான் ஹெலன்கெல்லர். தனது 84வது வயதில், 1968ம் ஆண்டில் அவர் மரணமடைந்தார். முடியும் என்றால் எதுவும் முடியும் என்பதற்கு, ஹெலன்கெல்லர் முக்கிய முன்னுதாரணம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக