வெள்ளி, 6 ஜூன், 2014

மனித உறுப்பு மாற்றுச் சட்டம் 1994

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் வலைப்பக்கம் தங்களை இனிதே வரவேற்கிறோம். மனித உறுப்பு மாற்றுச் சட்டம் 1994 பற்றி தெரிந்து கொள்வோம்.


மனித உறுப்பு மாற்றுச் சட்டம் 1994

மனித உறுப்புகளின் தானம் வியாபார ரீதியில் நடப்பதைத் தடுப்பதற்காக மனித உறுப்பு மாற்றுச் சட்டம் 1994-ல் அமலாக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி நெருங்கிய உறவினர்கள், (பெற்றோர்கள், தம்பிகள், சகோதர சகோதரிகள்) உறுப்பு தானம் செய்யலாம். இச்சட்டத்தின் பிரிவு 9(3)-ன் படி நெருங்கிய உறவினர் அல்லாதவர்களும் நோயாளிடம் கொண்டுள்ள அன்பு, பாசப்பிணைப்பு மற்றும் இதர சிறப்பு தானத்தை அங்கிகரிக்கும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தானம் செய்பவர் உரிய அங்கிகாரத்தை மாநிலம் அங்கிகரிக்கும் குழுவிடம் பெற வேண்டும். இக்குழு திறமையான செயல்பட்டால் மனித உறுப்பு வியாபாரம் குறித்து காவல்துறை சரியான நடவடுக்கை எடுக்க இயலாது. இது தொடர்பாக அதிகாரம் கொண்ட குழுவோ அல்லது பாதிக்கப்பட்ட நபரோ நீதிமன்றத்தில் புகார் செய்தால் அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக