வியாழன், 5 ஜூன், 2014

கண்களும் அதன் பாதுகாப்பு முறைகளும்



மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.சிபர்ஸ்கண்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
 


உடலின் ஒளியாய் இருக்கிறது கண். எனவே உனது கண் தூய்மையாக இருந்தால் உடம்பு முழுவதும் ஒளி உள்ளதாய் இருக்கும்.
கண்கள் நமது உடலின் மிக மென்மையான முக்கிய மற்றும் போற்றத்தக்க உறுப்பு என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், அதற்கு அளவுக்கு மீறின வேலைப்பளு கொடுத்து மற்றும் அதனைச் சா¢யான முறையில் பாதுகாத்திடும் வழி முறைகள் தொ¢யாமல் கண் பார்வையைக் கெடுத்து கண் பார்வை கோளாறுகளினால் அவதிப் படுகின்றனர். கண் பார்வை கோளாறுகளை சா¢ செய்ய இயலுமா? சா¢யான கண் பாதுகாப்பு முறைகள், உடம்பின் கழிவு வெளியேற்றும் மற்றும் தேவையான பயிற்சிகள் கண் பார்வையை தெளிவடைவதற்கு உதவிகள் செய்கின்றன. முயற்சி உடையார் பயன் அடைவர். நம்பிக்கையே நல்வாழ்விற்கு அடிப்படை எந்த வயதிலும் கீழே கொடுத்துள்ள பயிற்சிகளை செய்து பயன் அடையலாம்.

பயிற்சி ஆரம்பிக்கும் முன்பு கவனிக்க வேண்டியவை:
1. முடிந்தவரை பயிற்சியின் போது கண்ணாடி அணியத் தேவையில்லை.
2. வா¢சை கிரமத்தில் தான் பயிற்சிகள் செய்ய வேண்டும்.

3. குறைந்த கால அவகாசத்தில், முதல் சில பயிற்சிகள் மட்டும் செய்யலாம்.

4. கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கும் உணவுகளான வெள்ளை சீனி, உப்பு மற்றும் அளவுக்கு மீறிய பால் மற்றும் மாவுப் பொருள் குறைத்தல் நலம்.

5. காரட், பொன்னாங்கன்னி, எலுமிச்சை, பலா, மா, கொத்தமல்லி, பப்பாளி, தக்காளி, முருங்கை, கருவேப்பிலை, சாத்துக்குடி, திராட்சை, நெல்லி, வெள்ளா¢, போ£ட்சை, இளநீர் போன்ற உணவுகள் சாப்பாட்டில் அளவுடன் சேர்த்தல் நலம்.

6. மலச்சிக்கல், டி.பி, ஆஸ்துமா, சளித் தொல்லை, இரத்த அழுத்தம் போன்ற வேறு வியாதிகள் சேர்ந்து இருப்பின் அவைகளை சா¢ செய்த பிறகு கண் பயிற்சிகள் செய்தால் மிகுந்த பயன் கிடைக்கும்.

7. கண் பயிற்சிகள் மையம் மற்றும் இயற்கை நல வாழ்வு முகாமில் சில நாட்கள் கண் பயிற்சி பெறுவது மிக்க நலம்.

8. முந்திய இரவில் சா¢யாக தூங்காது வெகு நேரம் கண்விழித்து இருந்தால் மறுநாள் கண்டிப்பாக சூ¡¢ய ஒளி பயிற்சிகள் செய்யக்கூடாது.

கண்காணி இல்என்று கள்ளம்பல செய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் கள(வு) ஒழித்தாரே
-திருமந்திரம்

எந்த ஒரு நற்செயலுக்கும் பொறுமை வேண்டும் - இரண்டு அங்குல சதுரமுடைய பஞ்சு அல்லது மெல்லிய துணியை எடுத்துக் கொண்டு சாதாரணமாக தண்ணீ¡¢ல் (நீர் சூடாகவோ அல்லது குளிர்ந்தோ இருத்தல் கூடாது) நனைத்து மூடிய கண் இமைகளின் மீது பரப்பிக் கொண்டு ஓய்வில் இருக்கவும், உட்கார்ந்த நிலையிலோ, படுத்த நிலையிலோ, சாந்தி ஆசனத்திலோ இப்பயிற்சியை செய்யலாம்.

பயிற்சியின் கால அளவு :
10 நிமிடங்கள். ஜலதோஷம், ஆஸ்த்துமா, இருமல் போன்ற தொல்லைகள் உடையவர்கள் அதை சா¢ செய்த பிறகு பயிற்சிகள் செய்யலாம்.

பயன்:

கண்களுக்கு தேவையான தெம்புடன் கூடிய இதமான ஓய்வு கிடைக்கிறது தேவையற்ற சூடு தணிகிறது. கண் தசைகள் மற்றும் நரம்புகளில் கழிவு இரத்தம் வெளியேறி புது இரத்தம் கிடைக்கிறது. கண் பார்வை பிரகாசம் அடைகிறது. இரத்த அழுத்தக் குறைபாடு சா¢யாகிறது. மற்றும் சில வியாதிகளுக்கும் இப்பயிற்சி மிக நல்லது.

கண் கழுவுதல்:
கண்களை மூடிக் கொண்டு கைகளில் நீரை எடுத்து மிக மெதுவாகக் கண் மற்றும் முகத்தில் நீரை தெளித்துக் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு அல்லது எட்டு முறை கண்களைக் கழுவ வேண்டும். கழுவிய பின்பு துணி கொண்டு கண்களை துடைக்காமல் அப்படியே காற்றில் உலர விடுதல் மிகுந்த நலம் தரும்.

பயன்: முதல் பயிற்சியின் பலன் அனைத்தும் கிடைக்கும்.

அண்டஞ் சுருங்கின் அதற்கோர் அழிவில்லை.
பிண்டஞ் சுருங்கின் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கின் உபாயம் பலவுள
கண்டங் கருத்த கபாலியுமாமே.

கண் குவளை கொண்டு கழுவுதல் அல்லது கண் குளியல்:

கண் குவளையை நன்கு கழுவவும். அது நிரம்புமாறு சுத்தமான குடிக்கும் நீரை ஊற்றிக் கொள்ளவும். (நீர் சூடாகவோ, குளிர்ந்ததாகவோ இருத்தல் கூடாது) நன்கு முன்புறம் குனிந்து ஒரு கண்னை (அழுத்தாமல்) குவளை நீ¡¢ல் மூழ்க வைக்க வேண்டும். இந்நிலையில் கண்களை பத்து முறை இமைக்க வேண்டும். பின்பு புது நீர் குவளையில் நிரப்பி மற்ற கண்ணிற்கும் இதுபோல் செய்தல் வேண்டும்.

பயன்:

கண்களில் தூசுகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் கண்களில் இருந்து வெளியேறுகிறது. முதல் பயிற்சியில் கொடுத்துள்ள பலன் அனைத்தும் கிடைக்கும்.

கண்களை இமைத்தல்:
நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், கோமுகாசனம் இவைகளில் ஒன்றில் உட்கார்ந்து செய்தால் கூடுதல் பலன்கிட்டும். இரு கண் இமைகளை 10 வினாடிகள் இறுக மூடிபின் நன்றாக கண்களை வி¡¢த்து திறக்க வேண்டும். இதே போல் 20 முதல் 25 முறை செய்தல் வேண்டும். பின் ஒவ்வொரு கண்ணிற்கும் தனியாக இமைத்தல் பயிற்சி செய்தல் வேண்டும். இவைகளை எந்த நேரமும் செய்யலாம்.

பயன்: முதல் பயிற்சியின் பலன் கிடைக்கிறது. மற்றும் கண்களை சுற்றியுள்ள நரம்புகள் மற்றும் தசைகளில் உள்ள கழிவுகள் வெளியேற புது வலிமை பெறுகின்றன.



உள்ளங்கை கொண்டு கண்களை பொத்துதல்:

இடது விரல்களின் மீது வலது கைவிரல்களைக் குறுக்காக வைக்கவும். இரு உள்ளங்கைகளையும் சற்று குழிவாக்கிக் கொள்ளவும். மூடிய கண் இமைகளின் மேல் இவ்விரு குழிந்த உள்ளங்கையின் பகுதியை மெதுவாக பட்டும் படாதவாறு அழுத்தாமல் கவனமாக வைக்கவும். இந்த பயிற்சியை நேரம் கிடைக்கும் போது எந்த நேரமும் செய்யலாம்.

பயன்: முதல் பயிற்சியின் பயன்கள் கிடைக்கின்றன. கண் பார்வை தெளிவு பெறும், கண்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன.

வட்டமாக சுழலும் முறை:

இரண்டு கால்களுக்கு இடையில் 1 அடி இடைவெளியில் நிற்கவும். பின்பு வலது குதிகாலை மட்டும் சிறிது உயர்த்திக் கொண்டு கைகளைத் தளர்வுற்ற நிலையில் சிறிது வி¡¢த்து மெதுவாக உடலை கைகளுடன் இடது பக்கம் திரும்பவும். பின்பு பழைய நிலைக்கு மெதுவாக வரவும். மறுபடி இடது குதிகாலை லேசாக உயர்த்தி உடலைக் கைகளுடன் வலது பக்கம் திரும்பவும். மறுபடி பழைய நிலைக்கு வரவும். இதே போல் 15 அல்லது 20 முறை செய்து பழகவும். பயிற்சியின் போது அடிக்கடி கண்களை இமைக்கவும் செய்யலாம்.

பயன்: முதல் பயிற்சியின் பலன்கள் அத்தனையும் கிட்டுகிறது. மேலும் மற்ற உறுப்புகளும் நலம் பெறுகின்றன.

ஊஞ்சல் பயிற்சி:

செங்குத்தான இடைவெளிகளைக் கொண்ட கம்பி ஜன்னல் முன்னால் கால்களை 1 அடி இடைவெளியில் அகற்றி வைத்து நிற்கவும். பக்கவாட்டில் மிக மெதுவாக கடிகார பெண்டுலம் போல் இருந்த இடத்தை விட்டு நகராமல் மெதுவாக அசைதல் வேண்டும். இப்பயிற்சியின் போது கம்பிகளின் ஊடே முன்புறம் உள்ளவற்றைப் பார்க்க வேண்டும். ஒரு முனையில் அசைய ஆரம்பிக்கும் போதும் மறு முனையில் முடிக்கும் போதும் கண்களை இமைத்தல் வேண்டும். 20 முதல் 25 எண்ணிக்கைகள் வரை மெதுவாக அசைதல் வேண்டும்.

பயன்: முதல் பயிற்சியின் பலன்கள் கிடைக்கிறது.

பந்து விளையாட்டு பயிற்சி:

ரப்பர் பந்தை ஒரு கையில் எடுத்து தரையில் V மாதி¡¢ அல்லது சுவா¢ல் மேல் நோக்கி அரைவட்டமாக போட்டு பின்பு மறுகையில் பிடிக்க வேண்டும்.

அ. ஒரு கையில் பந்தை பிடிக்க வேண்டும்

ஆ. பந்தை பார்க்க வேண்டும்

இ. பந்தை பார்த்து இமைக்க வேண்டும்.

ஈ. பந்தை மறு கைக்கு அனுப்பும் போது பார்வை பந்தை நோக்கி இருக்க வேண்டும்.

இதை மாறி மாறி செய்தல் வேண்டும். 20 முதல் 25 எண்ணிக்கை வரை செய்ய வேண்டும்

பயன்: கண் நரம்புகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. பார்வை தெளிவு பெறுகிறது. கண்களுக்கு நல்ல ஓய்வும் கிடைக்கின்றது.

கண் மூடிய நிலையில் சூ¡¢ய ஒளி சிகிச்சை:

எச்சா¢க்கை:

கண்டிப்பாக முதலில் சொன்ன 7 பயிற்சிகளும் செய்த பிறகே இதை செய்யலாம். இப்பயிற்சியைக் காலையில் 6 முதல் 7 மணிக்குள்ளும் மாலையில் 5.30 மணி முதல் 6.30 மணிக்குள்ளும் செய்யலாம்.

சூ¡¢யனை நோக்கி கண்களை மூடி நிற்க வேண்டும். இமைகளின் மேல் சூ¡¢ய ஒளி பட வேண்டும். கால்களை 1 அடி அகற்றி வைத்து பக்கவாட்டில் பெண்டுலம் போல் ஆடவும். 2 முதல் 5 நிமிடம் வரை செய்யலாம்.

பயன்: விட்டமின் D குறைவு ஈடுகட்டப்படுகிறது. கழிவுகள் வெளியேறி நரம்புகள் தசைகள் புத்துணர்வு பெற்று, இரத்த ஓட்டம் சீராகி, பார்வைக்குக் தெளிவு கிட்டுகிறது. தோல் நோய்களும் குணமடைகின்றன. கண்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

சூ¡¢ய ஒளி கழுத்துப் பயிற்சி:

சூ¡¢ய ஒளி படுமாறு நின்று கொண்டு கழுத்தை மட்டும் மெதுவாக வலது புறமிருந்து இடமாகவும் மற்றும் இடமிருந்து வலமாகவும் மாறி மாறி அசைந்து ஐந்து முறை செய்யவும். பின்பு கழுத்தை மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் அசைத்து ஐந்து முறை செய்யவும். பின்பு இடமிருந்து வலப்புறமாகவும் வலமிருந்து இடப்புறமாகவும் ஐந்து முறை மிக மெதுவாகக் கழுத்தை வட்டமாகச் சுற்றவும்.

கண்களை மூடி செய்தல் நலம். இப்பயிற்சியை அறைக்குள்ளும் செய்யலாம்.

பயன்: கழுத்து நரமப்புகள் மற்றும் கண் நரம்புகள் தசைகள் பலம் பெறுகின்றன. கழிவு ரத்தம் வெளியேறி கண்ணிற்குப் புது சக்தி கிடைக்கிறது. பயிற்சி 9ன் பலன் கிட்டுகிறது.

சூ¡¢ய ஒளி கண் விழிப்பயிற்சி:

சூ¡¢ய ஒளியில் கண் விழிகளை மட்டும் பக்க வாட்டில் இடது புறத்தில் இருந்து வலது புறம் நகர்த்தவும் பின்பு வலது புறத்தில் இருந்து இடது புறம் நகர்த்தவும். ஐந்து முறை மாறி மாறி மெதுவாகச் செய்யவும். பின்பு ஐந்து முறை கண்களை நன்றாக இமைக்கவும்.

பின்பு இது போல் கண் விழிகளை மேலும் கீழும் 5 முறை நகர்த்தி பின் ஐந்து முறை இமைக்கவும்.

பின்பு கண் விழிகளைக் குறுக்கு வாட்டில் மேலும் கீழும் 5 முறை மெதுவாக நகர்த்திய பின்பு ஐந்து முறை இமைக்கவும்.

பின்பு கண் விழிகளை மட்டும் இடது புறத்திலிருந்து மேல் நோக்கி வலப்புறமாக செல்ல விட்டு கீழ்புறம் நகர்த்தி முழு வட்ட வடிவில் ஐந்து முறை நகர்த்தி பின்பு ஐந்து முறை இமைக்கவும். அதே போல் வலப்புறத்தில் இருந்து ஆரம்பித்து கண் விழிகளை முழு வட்டத்தில் நகர்த்தி 5 முறை கண்களை இமைக்கவும். இப்பயிற்சிகளை அறைக்குள்ளும் செய்யலாம்.

பயன்: கண் குறைபாடுகள் சா¢யாகிறது. கண் உள்ளுறுப்புகளின் குறைகள் நீங்குகிறது கண்பார்வை உடனடியாகச் சா¢யாகிறது. பயிற்சி 9ன் நலன்களும் கிட்டுகிறது.

சிறிய அச்சு எழுத்துக்களை மெழுகு வர்த்தி ஒளியில் படித்தல்:

மெழுகுவர்த்தி ஒளியிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தால் சா¢யாகப் படிக்க இயலுமோ அந்தத் தொலைவில் சிறிய அச்சு எழுத்துக்களை ஒவ்வொரு வா¢சையாக படிக்க வேண்டும். ஒவ்வொரு வா¢யும் படித்த பின்பு இடையில் உள்ள வெண்மையான பகுதியைப் பார்த்து இதைத்தல் வேண்டும். இரண்டு அல்லது ஜந்து நிமிடம் படிக்கலாம்.

பயன்: கண் பார்வை தெளிவடையும். கிட்டப்பார்வை குறையும் நிவர்த்தியாகும்.

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்றறிந்து
உடம்பினை யானிருந்(து) ஒம்புகின்றேனே
- திருமந்திரம்

கிட்டப்பார்வை தூரப்பார்வை பயிற்சி:

வீட்டில் வாசலுக்கு அருகிலோ வெளியிலோ நின்று அல்லது உட்கார்ந்து கொண்டு இப்பயிற்சி செய்யலாம். வலது கை விரல் நகத்தை கண்களுக்கு நேராக 10 அங்குலத்தில் வைத்துக் கொண்டு அதனைப் பார்க்கவேண்டும். பின் கண்களை இமைக்கவும் பின்பு 20 அடி தூரத்தில் உள்ள மரத்தையோ வீட்டு கூரையையோ பார்க்கவும் பின்பு இமைக்கவும். இது போன்று 20 முறை செய்யவும்.

பயன்: கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகளை நீக்கும், கண் நரம்புகள் உறுதிபெறும் பார்வை தெளிவு ஏற்படும்.

முதல் பயிற்சியை மறுபடியும் பத்து நிமிடம் செய்தல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக