மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
சென்னை : சென்னை அகர்வால் கண் மருத்துவமனையில் இருந்து நேரடி ஒளிபரப்பு மூலம், அமெரிக்காவில் உள்ள டாக்டர்களுக்கு, நவீன கண் அறுவை சிகிச்சையான ‘குளூட் இன்ட்ரா ஆக்குளார் (ஐஓஎல்)’ முறை செய்து காண்பிக்கப்பட்டது.இதுகுறித்து டாக்டர் அமர் அகர்வால் கூறியதாவது: நான் கண்டுபடித்துள்ள புதிய கண் அறுவை சிகிச்சையான, குளூட் இன்ட்ரா ஆக்குளார் லென்ஸ் (ஐஓஎல்) முறையில், ரத்த திசுக்களில் இருந்து தயார் செய்யப்படும் பசையை பயன்படுத்தி கண்ணில் லென்ஸ் ஒட்டப்படுகிறது. இவ்வாறு ஒட்டப்படும் லென்ஸ் அங்கும், இங்கும் ஆடாத அளவில் இறுக்கமாக பொருந்திக் கொள்ளும். மேலும், 10 நிமிடத்திற்குள் இந்த அறுவை சிகிச்சையை செய்து முடிக்கலாம்.முதன் முதலில் 2007ம் ஆண்டு இந்த அறுவை சிகிச்சை கண்டு பிடிக்கப்பட்டது. தமிழகத்தில் முதன் முதலாக கண்டுபடிக்கப்பட்ட இந்த அறுவை சிகிச்சை, தற்போது உலகின் அனைத்து இடங்களிலும் செய்யப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் 200 கண் மருத்துவர்கள் பங்குபெறும் ‘சிக்கலான நோயாளிகளுக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்தல்‘ என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியின்போது, தமிழகத்தில் கண்டுபடிக்கப்பட்ட குளூட் இன்ட்ரா ஆக்குளார் (ஐஓஎல்) அறுவை சிகிச்சை முறையை, எங்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்து காட்ட வேண்டும் என்று அமெரிக்க டாக்டர்கள் எங்களிடம் கேட்டுக் கொண்டனர். அதன்படி நேற்று சென்னையில் இருந்து, அமெரிக்காவின் ஜார்ஜ் டவுன் ஆன்டீரியர் செக்மன்ட் சிம்போசியத்தில் உள்ள டாக்டர்களுக்கு, குளூட் இன்ட்ரா ஆக்குளார் லென்ஸ் (ஐஓஎல்) கண் அறுவை சிகிச்சை முறை, நேரடி ஒளிபரப்பு மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. அப்போது அமெரிக்கா டாக்டர்கள் இந்த அறுவை சிகிச்சை குறித்த விவரங்களை என்னிடம் கேட்டறிந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக