மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.சிபர்ஸ்ஆர்க் கண்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
கண் தானம் சில பொதுவான தகவல்கள்.
கண் தானம் செய்பவர்களினால் கருவிழி நோயினால் பார்வையிழந்த இரண்டு நபர்களுக்கு கருவிழி மாற்று சிகிச்சை அளிப்பதன் மூலம் பார்வை கிடைக்கிறது.
கண் தானம் செய்பவர்கள் செய்யமுடியாதவர்கள் பற்றிய விவரம்;-
கொடிய தொற்று நோய்களான எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, காலரா, விசக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் மற்றும் வெறிநாய்க்கடி ஆகியவற்றால் இறந்தவர்களின் கண்களைத் தானம் செய்ய முடியாது.
(1) ஆண்,பெண் இருபாலரும் கண் தானம் செய்யலாம்,
(2)அனைத்து வயதினரும் கண் தானம் செய்யலாம்,
(3)கண்ணாடி அணிந்தவர்களும் கண் தானம் செய்யலாம்,
(4)இரத்த அழுத்தம் உள்ளவர்களும் கண் தானம் செய்யலாம்,
(5)நீரிழிவு நோயாளிகளும் கண் தானம் செய்யலாம்,
(6)ஆஸ்த்துமா நோயாளிகளும் கண் தானம் செய்யலாம்,
(7) உடலில் மற்ற உறுப்புகளில் புற்றுநோய் இருந்தாலும் கண் தானம் செய்யலாம்.
கண் தானம் பற்றிய விழிப்புணர்வு;-
(1) ஒருவர் இறந்த பின்னரே அவரது கண்களைத் தானமாக வழங்க முடியும்.
(2) ஒருவர் இறந்து நான்கு மணி முதல் ஆறு மணிக்குள் அவரது கண்கள் அகற்றப்பட வேண்டும்.
(3) அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே கண்களை அகற்ற வேண்டும்.
கண் வங்கிக்குழுவினர் கண் தானம் செய்தவரின் வீட்டிற்கே வந்து கண்களைப் பெற்றுக்கொள்வர்.
(4) கண்களைத் தானமாக பெறும் நிகழ்வுக்கு இருபது நிமிடங்களே போதுமானது.
(5) திசு ஒற்றுமை மற்றும் தொற்று நோய் பரிசோதனைக்காக இறந்தவரின் உடலில் இருந்து சிறிது இரத்தம் எடுத்துக்கொள்ளப்படும்.
(6) இறந்த பிறகு கண்களை எடுப்பதால் முகத்தில் எவ்வித மாறுதல்களும் ஏற்படாது.
(7) கண் தானம் கொடுப்பவரின் பெயரும்,கண்ணைப் பெறுபவரின் பெயரும் இரகசியமாக வைக்கப்படும்.
(8) கண் தானம் செய்வதை எந்த மதமும் எதிர்க்கவில்லை.
கண் தானம் செய்த ஒருவர் இறந்த பின்பு அவரது உறவினர்கள் செய்ய வேண்டியவை.
(1) மிக அருகிலுள்ள கண் வங்கிக்கு உடனடியாக தொலைபேசி அல்லது நேரிலோ தகவல் கொடுக்க வேண்டும்.
(2) இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் சரியான முகவரி மற்றும் தொலைபேசி எண் தெளிவாக கொடுக்க வேண்டும்.அப்போதுதான் கண் வங்கிக்குழுவினர் மிக விரைவாக வந்து சேர இயலும்.
(3) கண்களைத் தானமாகப் பெறுவதற்கு இறந்தவரின் கணவன் அல்லது மனைவி உடன் பிறந்தவர் அல்லது நெருங்கிய உறவினர் ஒருவரும் கூடுதலாக சாட்சிகள் இருவரும் எழுத்து மூலம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
(4) கண் தானம் செய்தவர் இறந்த உடனே அவரது கண் இமைகளை மூடி வைக்க வேண்டும்.
(5) இறந்தவரின் உடல் இருக்குமிடத்தில் மின்விசிறியை நிறுத்தி வைக்க வேண்டும்.அதே சமயம் இறந்தவரின் உடல் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தால் மின் விசிறியை இயக்கத்தில் வைக்கலாம்.
(6) தலையணையை வைத்து இறந்தவரது தலையை சற்று உயர்த்தி வைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக