வெள்ளி, 6 ஜூன், 2014

கண் தானம் விழிப்புணர்வு வாசகங்கள்

மரியாதைக்குரியவர்களே,
                                 வணக்கம்.
''தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்" வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

  கண் தானம் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் இதோ உங்களுக்காக!

  (1)அன்னதானம் வயிற்றைக் காக்கும்,
        கண் தானம் விழியைக் காக்கும்.

  (2) அணையும்போது அடுத்த விளக்கை ஏற்றுவோம்,
     கண் தானம் செய்வோம்.

 (3)இருக்கும்வரை இரத்த தானம்,
 இறந்தபிறகு கண் தானம்.

 (4)இருள் விரட்டும் விடியல் ஆவோம்,
 இன்றே கண் தானம் செய்வோம்.

  (5)இறந்தபிறகும் இவ்வுலகை காண,
  இன்றே கண் தானம் செய்வோம்.

  (6)உயிர் போனாலும் உலகை காணலாம்
       உனது கண்களை தானம் செய்தால்!.

 (7) உயிர் காக்க கொடுப்போம் இரத்த தானம்,
    உயிருக்கு பிறகு உலகை காண கண் தானம் செய்வோம்.

(8) உறுப்பு தானம் ஊனத்தை போக்கும்,
     உனது கண் தானம் உலகை காட்டும்.

(9)ஒருவர் செய்யும் கண் தானம்,
     இருவருக்கு ஒளி கிடைக்கும்.

(10)எடுத்துச் செல்ல எதுவும் இல்லை,
      கொடுத்து செல்வோம் கண்கள் இரண்டை.

(11)ஒளி விளக்கு அணைந்தாலும்,
      விழி விளக்கு அணையாது.
     விழி கொடுத்து ஒளி கொடுப்போம்.

(12)கண் தானம் செய்வோம்,
       காலமெல்லாம் வாழ்வோம்.

(13)கண்களுக்கு என்றும் இறப்பு இல்லை,
      கண் தானம் செய்வோம்.

(14)கண் தானம் செய்வோம்,
        மரணமும் அர்த்தமுள்ளதாகும்.

(15)கண் கொடுக்க மறுத்தால்,
      கற்றவரும் கல்லாதவரே.

(16)கண் தானம் செய்வோம்,
      பார்வை கொடுப்போம்.

(17)தானத்தில் சிறந்தது கண் தானம்.

(18)நாம் இருந்தால் ஒளி பெறுவோம்,
     நாளை இறந்தால் விழி கொடுப்போம்.

(19) நாம் நன்றி சொல்வோம்,
        கண் தானம் செய்யும் சொந்தங்களுக்கு.

 (20)பார்வையில்லாதோர் பாரதம் படைப்போம்.

(21)மண்ணில் புதைக்கும் கண்களை
    மனிதனில் விதைப்போம்.

(22)மயானத்தில் மறையும் கண்களை
     மறுபிறவி எடுக்க  மற்றவர்களுக்கு கொடுப்போம்.

(23)மரணத்திற்கு பிறகு மறுபிறவி எடுக்க 
        மற்றவருக்கு கொடுப்போம் கண்களை.

(24)மரணத்தை எண்ணி கலங்காமல்
     மறு பிறவிக்காக கண்களை தானம் செய்வோம்.

(25)விழியிழந்தோர் வாழ்வில் ஒளியேற்ற
       கண் தானம் செய்வோம்.

(26)வாழும்வரை வைத்திருப்போம்
       வானுலகம் செல்லும்போது மற்றவர்களுக்கு கொடுத்திடுவோம்.

(27)விடியலைக் காண விழிகளை கொடுப்போம்.

(28) விழிக்கொடை செய்வோம்.

(29) வீழ்ந்த உடலை விதையாக்குவோம்
         இறப்புக்குப் பின்னும் வாழ்ந்திடுவோம்.
    கண் தானம் செய்வோம்.

(30) பூவுடல் மறைந்தாலும் இவ்வுலகை காண்போம்
        கண் தானம் செய்வோம்.

 (31)After Your Die...Donate Your Eye.....

(32) Donate Eyes Vision Beyond Life..

(33) Donate Eyes And Live After Death...

(34) Donate Blood And Save Life...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக