புதன், 11 ஜூன், 2014

"கண்தானம்" ஒரு விளக்கம்

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

"கண்தானம்" ஒரு விளக்கம்

1. எல்லா வயதினரும் கண்தானம் செய்யலாம்.
2. கண்ணாடி அணிந்தவர்கள். கண்நோய் உள்ளவர்கள். காட்ராக்ட் புரை உள்ளவர்கள். கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் போன்ற அனைவரும் கண்தானம் செய்யலாம்.
3. தானம் கொடுப்பவர் இறந்து ஆறுமணி நேரத்திற்குள் அவரது கண்கள் தானம் செய்யப்பட வேண்டும். இறந்தவரின் நெருங்கிய உறவினர் மற்றும் குடும்பத்தினரின் அனுமதி அவசியப்படுவதால் தாமதம் செய்யாமல் அருகாமையில் உள்ள கண்வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.
4. இறந்தவரின் கண்களை மூடி, ஈரபஞ்சு வைத்து கட்டி வைக்க வேண்டும்ம். பஞ்சு உலர்ந்துவிடாமல் தேவைப்படும்போது ஈரம் சேர்க்கவும். இறந்தவரின் உடலை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
5. கண்களை எடுக்க தனி அறையோ, தனி இடமோ தேவை இல்லை. மருத்துவர்கள் நேரில் வந்து 15 நிமிடத்திற்குள் கண்கள் எடுக்கும் பணியை முடித்துவிடுவார்கள்.
6. செயற்கை கண்கள் உடனே பொருத்துவதால், முகத்தில் எந்தவித குறையோ மாற்றமோ இருக்காது.
7. கண்தானம் செய்ய பதிவு செய்து கொள்வது ஒரு உயரிய எண்ணம், பிறரையும் ஊக்குவிப்பது ஒரு உயரிய செயல்.
8. கண்தானம் பற்றிய விழிப்புணர்வுக்கான ஒரு பதிவு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக