வெள்ளி, 6 ஜூன், 2014

உயிர் வாழும் உரிமை

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம் தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே  வரவேற்கிறோம்.
 
           உயிர் வாழும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு இந்தியக் குடிமக்களுக்குத் தருகிறது. இதன்படி சட்டம் வகுத்துள்ள வழிமுறை அல்லாமல் வேறேந்த வழியிலும், எவர் தம் உயிரையும், சுதந்திரத்தையும் பறித்திடல் கூடாது. எது ஒரு மனிதனின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதில்லை சட்டத்தினால் உருவாக்கப்பட்ட வழிமுறைப்படி தலையிட அரசுக்கு அதிகரம் வழங்குவதாகவும், கொள்ளலாம். எனினும் நீதிமன்றங்கள் இப்பிரிவின் மூலமாக உயிர் வாழும் உரிமையை நாட்டுகின்றன.

தொடர்புடைய வழக்குகள்

மேனகா காந்தி எதிர் இந்திய அரசு (ஏ.ஐ.ஆர் 1978, எஸ். சி. 597) வழக்கில் தனி நபர் வாழ்க்கையை அனுபவிக்கத் தேவையான உரிமைகளை அரசு வழங்கிட வேண்டுமென்பது கடமையாக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக உடல் நலத்துக்கும், மருத்துவ சிகிச்சை பெறுவதற்குமான உரிமை 21-வது பிரிவின் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
பரமானந்த கட்டாரா எதிர் இந்திய அரசு (ஏ.ஐ.ஆர் 1989, எஸ்.இ.2039) வழக்கில் விபத்துக்குள்ளான நோயாளிக்கு விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கான வழிமுறை நெறிகளைக் கடைபிடிக்கவில்லை என்ற காரணத்துக்காக ஒரு தனியார் மருத்துவர் சிகிச்சை அளிக்க மறுத்ததைக் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. செய்முறை நெறிகள் பின்பற்றப்பட்டதா இல்லையா என்பதைக் கருத்தில் கொள்ளாமல் உடனடியாக மருத்துவ உதவியும், சிகிச்சையும் அளிக்க உச்ச நீதிமன்றம் மருத்துவ நிலையங்களுக்கு உத்தரவிட்டது.
இதுபோன்ற ஹக்கிம் ஷேக் என்பவர் விபத்துக்குள்ளாகி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை அணுகிய போது படுக்கைகள் இல்லை என்ற காரணத்துக்காக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வேறு வழியின்றி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துக்கொண்டு சிகிச்சைக்காக அவர் பெரும் தொகை செலவழித்தார். மருத்துவமனையின் மனப்பான்மையால் துன்பத்துக்குள்ளான அவருக்கு அரசினால் சிகிச்சை தரவேண்டிய ஆரோக்கியத்தின் முக்கிய தேவையான சிகிச்சை பெறும் உரிமை மறுக்கப்பட்டது. உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்டட்தென்று உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை ஏற்று ரூ.25,000/- இழப்பீடு வழங்கியது (ஏ.ஐ.ஆர் 1966, எஸ்.இ.1426) 
                                 நன்றி தமிழ் விக்கிப்பீடியா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக