வியாழன், 5 ஜூன், 2014

வெயில் காலங்களில் கண்களை காக்க..

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம். சிபர்ஸ்கண்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
       வெய்யில் காலங்களில் நம் முகம் சோர்ந்தும், எண்ணெய்ப் பசையோடும் காணப்படும். அதற்காக எல்லோரும் பியூட்டி பார்லர் போகமுடியுமா? இதோ எல்லா வயதினருக்கும் உச்சி முதல் பாதம் வரைக்கும் ஏற்ற டிப்ஸ்.

கண்:

* நம் முகத்தைப் பிரகாசமாகக் காட்டுவது நமது கண்களே. அக்கண்கள், பளிச்செனவிருக்க தினமும் இரவில் விளகெண்ணெயை கண்ணிமையின் மேலேயும், கண்ணின் கீழ்ப் பகுதி களில் உருளைக்கிழங்குச் சாரையும் தடவவேண்டும்.

* அப்படித் தடவிவந்தால் காலையில் கண்கள் பளிச்சென இருக்கும். கருவளையங்கள் போக, துளசியும் புதினாவும் அரைத்து பன்னீர் சேர்த்துத் தடவவேண்டும்.

உதடு:

* உதட்டில் வெண்ணெயுடன், தேங்காய் எண்ணெயைத் தடவி வந்தால் உதடு காய்ந்து போகாமல் இருக்கும்.

முகம்:

* வெய்யில் காலங்களில் எண்டுணெய்ப் பசை இல்லாமல் சருமம் பளிச்சென இருக்க இதோ சில குறிப்புகள்:

* முதலில் பால் ஏட்டை முகத்தில் தடவி, பஞ்சு மூலம் முகத்தில் உள்ள அழுக்கை எடுக்க வேண்டும்.

* பப்பாளி, ஆப்பிள் கலந்து முகத்துக்கு 10 நிமிடங்கள் மசாஜ் கொடுக்கவும்.

* பிறகு துளசி, புதினா இலைகளுடன் தண்ணீரைக் கொதிக்கவைத்து முகத்துக்கு ஆவி பிடிக்கவும். (ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும்.)

* ஒரு முட்டைக் கரு, எலுமிச்சம்பழச் சாறு, தயிர், கடலை மாவு, எல்லாவற்றையும் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

* கடைசியாக குளிர்ந்த நீரால் முகத்தைச் சுத்தப்படுத்தவும் இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகம் பொலிவுடன் காணப்படும்.

தலைமுடி:

* பேபி ஆயில் அல்லது தேங்காய் எண்ணெயைப் பஞ்சில் எடுத்துத் தலையில் தேய்க்கவும்.(பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து பிறகு காலையில் தேங்காய் எண்ணெய்யில் கலந்து உச்சந்தலையில் தேய்க்கவும்.) பின் தலையை மசாஜ் செய்யவும்

* 10 நிமிடங்கள் ஊறிய பிறகு, மருதாணி, டீ-டிக்காஷன் இரண்டையும் தயிரில் கலந்து தலை முடிக்கு போடவும். (மருதாணி போடுவதால் முடியின் கலர் மாறாது. மருதாணி, டீ-டிகாஷன், தயிர் சேர்ந்த கலவையை இரவே ஊற வைத்துப் போட்டால்தான் முடி கலர் மாறும்.)

* மருதாணி ஒத்துக் கொள்ளாதவர்கள் செம்பருத்தி இலையை உபயோகப் படுத்தலாம்.
இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், தலை முடி ஆரோக்கியமாகவும், மிருது வாகவும் இருக்கும்.

பாதம்:

* பாதம் சுத்தமாகவும், மிருதுவாகவும் இருக்க தினமும் வெதுவெதுப்பான நீரில் உப்பு, எலுமிச்சம் பழச்சாறு கலந்து, குளிக்குமுன் 15 நிமிடங்கள் பாதத்தை அதில் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த தண்ணீரீல் சுத்தப்படுத்தவும்.

நன்றி தினகரன்  பேப்பர்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக