மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
கண்டம் (Continent) எனப்படுவது தொடர்ச்சியான மிகப்பெரிய நிலப்பரப்பைக் குறிக்கும். பூமி ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
கண்டங்கள்.
1.ஆப்பிரிக்க-யூரேசியா(Afro-Eurasia, Afrasia அல்லது Eurafrasia) என்பது யூரேசியா, ஆப்பிரிக்கா ஆகிய இரு கண்டங்கள் இணைந்த ஒரு கண்டத்தைக் குறிக்கும் சொல்லாகும். இணைந்த இக்கண்டத்தின் மொத்த நிலப்பகுதியும் 5.7 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இது உலகின் மொத்த மக்காள்தொகையில் 85 விழுக்காடு ஆகும். பொதுவாக, ஆப்பிரிக்க யூரேசியா என்ற இக்கண்டம் ஆப்பிரிக்காவையும் யூரேசியாவையும் சூயஸ் கால்வாய் வழியே பிரிக்கிறது. யூரேசியா என்பது மேலும் ஐரோப்பா, மற்றும் ஆசியா எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியாக ஆப்பிரிக்க-யூரேசியா என்பது யூரேசியா-வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் சகாரா ஆப்பிரிக்கா என்றவாறும் பிரிக்கப்படுகிறது. பழைய உலகம் (Old World) என்பது ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் இவற்றின் நிலப்பகுதிகளை சாராத அவற்றைச் சூழவுள்ள தீவுகளை உள்ளடக்கியதாகும். நிலவியல் ரீதியாக, ஆப்பிரிக்கா ஐரோப்பாவுடம் மோதுகைக்குள்ளாகும் போது ஆப்பிரிக்க-யூரேசியா ஒரு பெருங்கண்டமாக (supercontinent) உருவாகும். இந்நிகழ்வு ஸ்பெயினின் தென்முனை ஆப்பிரிக்காவை அடையும் போது, அதாவது இன்னும் 600,000 ஆண்டுகளில் நிகழக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இடம்பெறும் போது, மத்தியதரைக் கடல் அத்திலாந்திக் பெருங்கடலில் இருந்து பிரிந்து விடும். இன்னும் 50 மில்லியன் ஆண்டுகளில் ஆப்பிரிக்கா முற்றாக ஐரோப்பாவுடன் மோதி, மத்தியதரையை முற்றாக மூடி புதிய மலைத்தொடர்களை உருவாக்கும்.
யூரேசியா என்பது சுமார் 53, 990,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மிகப் பெரியதொரு நிலப் பகுதி. இது புவி மேற்பரப்பின் 10.6 விழுக்காடு ஆகும். இது ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களுடன் மத்திய கிழக்குப் பகுதியையும் உள்ளடக்குகின்றது. யூரேசியா என்னும் இந்தக் கருத்துரு மிகப் பழையது எனினும் இதன் எல்லைகள் தெளிவானவை அல்ல. யூரேசியா, இதைவிடப் பெரிய நிலத்திணிவான ஆபிரிக்கா-யூரேசியாவின் ஒரு பகுதியாகும். யூரேசியா, உலக மொத்த மக்கள் தொகையின் 69% ஆன 4.6 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டதாகும். துப்பாக்கிகள், கிருமிகள், மற்றும் உருக்கு (Guns, Germs, and Steel) என்னும் தலைப்பிலான நூலை எழுதிய ஜாரெட் டயமண்ட் (Jared Diamond) என்பார், உலக வரலாற்றில் யூரேசியாவின் மேலாதிக்கம், அதன் கிழக்கு-மேற்கு விரிவு, காலநிலை வலயங்கள், வீட்டு வளர்ப்பிற்கு ஏற்ற இப் பகுதியின் தாவரங்கள், விலங்குகள் முதலியவற்றைக் காரணமாகக் காட்டுகிறார். வரலாற்றுக் காலகட்டங்களில் யூரேசியாவின் பல்வேறு பண்பாடுகளை இணைத்ததன் மூலம் இப்பகுதியில் வணிகம், பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவற்றின் குறியீடாகப் பட்டுப் பாதை விளங்குகிறது. பழங்கால ஆசிய ஐரோப்பியப் பண்பாடுகள் இடையேயான மரபியல், பண்பாட்டு, மொழியியல் தொடர்புகளை ஆராயும் நோக்கில் பெரிய யூரேசிய வரலாறு என்னும் எண்ணக்கரு அண்மைக் காலங்களில் உருவாகியுள்ளது. இவையிரண்டும் நீண்ட காலமாக வேறுபட்ட தனித்தனியானவை ஆகவே கருதப்பட்டு வந்துள்ளன. யூரேசியா சுமார் 325 - 375 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியதாகக் கருதப்படுகின்றது. ஒரு காலத்தில் தனியான கண்டமாக இருந்த சைபீரியா, கசாக்ஸ்தானியா, பால்டிக்கா என்பவை இணைந்த பொழுது இது உருவானது. சீனப் பகுதி சைபீரியாவின் தெற்குக் கரையுடன் மோதியது. பால்ட்டிக்கா என்பது முன்னர் லோரெந்தியா என்று அழைக்கப்பட்ட இன்றைய வட அமெரிக்காவுடன் இணைந்து இருந்தது. இது யூரமெரிக்கா எனப்படுகின்றது.
2.ஆசியா கண்டம் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டமாகும். இது யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். உலகின் மக்கள்தொகையில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் இக்கண்டத்திலேயே இருக்கின்றனர்.
கோண்டுவானா (Gondwana, ɡɒndˈwɑːnə)), என்பது வரலாற்றுரீதியாக பெருங்கண்டத்தின் தெற்குப் பகுதிக்குக் கொடுக்கப்பட்ட பெயர். 570 - 510 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இக்கண்டம் நிலவியல் ரீதியாக மூடத் தொடங்கியது. இதன் மூலம் கிழக்கு மற்றும் மேற்கு கோண்டுவானாக்கள் இணைந்தன. 180 - 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா என்ற ஒரு நிலம் இரண்டாகப் பிரிந்த போது கோண்டுவானாவும் லோரேசியாவில் இருந்து பிரிந்தது. லோரேசியா என்ற வடக்கு-அரைப்பகுதியின் கண்டம் மேலும் வடக்கே நகர்ந்தபோது கோண்டுவானா தெற்கே நகர ஆரம்பித்தது. கோண்டுவானா இன்றைய ஆப்பிரிக்கா, கடகத் திருப்பத்திற்கு தெற்கில் உள்ள இந்தியத் துணைக்கண்டம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அண்டார்க்டிக்கா, மடகஸ்கார், அரேபியா ஆகிய பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. நண்ணிலக்கடல் ஆசியாவை ஊடறுத்ததுச் சென்று பசிபிக் பெருங்கடலுடன் சேர்ந்திருந்தது. ஆனால் இமயமலை தொடர் அன்று கடலுக்குள் முழ்கி இருந்தது. ஒரு காலத்தில் புவியில் நிலப்பகுதி 7 கண்டங்களாக இருந்ததாக தெரிகிறது. அவை ஒன்றில் இருந்து ஒன்று தனித்து இருந்தால் தீவுகள் எனப்பட்டன. அவை பெருநிலப் பகுதிகள் என்பதால் தீபம் என்று சொல்லப்பட்டது. ஒவ்வொரு தீவும் தாவரத்தால் நிறைந்து ஒரு மாபெரும் சோலை போல் தோன்றியது. இதனால் பொழில் எனப்பட்டது. இதனாலேயே இந்திய நிலப்பகுதி நாவந்தீவு என்றும், நாவலந் தண் பொழில் என்றும் அழைக்கப்பட்டது. ஒரு காலத்திதல் இந்தியாவுடன் இணைநதிருந்து இந்தியப் பெருங்கடலில் முழ்கிப் போன பெருநிலப்பகுதியை பழந்தமிழ் நூல்களும், இக்கால தமிழ் அறிஞர்களும் குமரிக்காடு அல்லது கமரிக் கண்டம் அல்லது பழம்பாண்டிநாடு என்று குறிப்பிடுகின்றனர். அதனை லெமுரியா கண்டம் என்றும், கோண்டுவானா என்றும்;, மேலை நாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உயிர்களின் தோற்றத்திற்குரிய முலத்தாயகத்தை - கடலுள் சிறிதளவு முழ்காதிருந்த மிகப் பரந்த கண்டத்தை அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டர்கள் எனலாம்.
லெமுரியா கண்டத்தில் நிலைப்பேற்றை இக்கால ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். அதை உயிர்களின் தோற்றத்திற்குரிய இடமாக ஊகம் செய்கின்றனர். அவ்விடம் தென்னிந்தியாவின் நிலப்பகுதியை ஒட்டி கடலில் இருந்தது. இவ்வாறு கூறுவதில் இருந்தும், அதனுள் அழிந்த நாகரீகம் பற்றியும் கொண்டிருந்த நம்பிக்கை வரலாற்று நிகழ்வை ஒட்டியதே அன்றி கற்பனை அன்று என உறுதியாகக் கூற முடிகின்றது. லெமுரியாவின் நிலைப்பேற்றை பல்துறை ஆய்வாளர்களும் தத்தம் ஆய்வு முடிவுகளைக் கண்டு உறுதிபடுத்துகின்றனர். உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்போ, தோன்றும் காலத்திலோ கோண்டுவானா கண்டம் சிதைவுறத் தொடங்கியது என்கின்றனர். மனிதனுக்கு முன்னோடியான குரங்கு மனிதன் தோன்றிய காலத்தில் லெமுரியா அழிவு எய்த தொடங்கியது என்கின்றனர். ஒரு தலைசிறந்த நாகரீகமே குமரி கண்டத்தில் முழ்கிவிட்டது என்று பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. உயிர்களின் தோற்றம்,வளர்ச்சி, நாகரீகத் தொடக்கம் ஆகியன ஒரு கண்டத்தில் இருந்து தொடங்குவதை ஆய்வாளர்களின் கூற்றுக்கள் தெளிவாக உணர்த்துகின்றன. கடலுள் முழ்கிய கண்டத்தில் இன்றைய நாககரீகத்திற்கு இணையான நாகரீகம் செழித்திருந்தது என்று இசுக்காட்டு எலியட்டு, கார்வே போன்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உயிர் வகைகள் பெருகுவதற்கு ஏற்ற தட்பவெப்ப சூழ்நிகைளை நிலநடுக்கோட்டுப் பகுதி சிறப்பாக பெற்றுள்ளது. உயிர் திரளில் வகை மிகுதிக்கும், செழித்த வளர்ச்சிக்கும், எண்ணிக்கைப் பெருக்கத்திற்கும் நடுக்கோடடுப் பகுதியே தலைசிறந்து நிற்கின்றது உலகில் மிக வடக்கில் உள்ள நாடுகளில் மரங்கள் 5;அடி உயரத்தில் வளர்வது அரிதாக இருக்கின்றது. தென்னிந்தியா போன்ற நடுக்கோட்டுப்பகுதியில் 100, 120, அடி உயரமுள்ள மரங்கள் உள்ளன. இதனைக் கூட தமிழர் ; புல் ; என்றே அழைக்கின்றனர். அறிவியலாளர் முடிவின்படி தென்னிந்தியா, இலங்கை என்பன பெரும்பாலும் கருங்கல் பாங்காகவே இருக்கின்றன. இவற்றில் உள்ள பாறைகள் தீவண்ணப்பாறை வகையைச் சேர்ந்தவை. இதுவே முதலில் கோதிக்கிற நெருப்புக் குழம்பாக இருந்து பின் இறுகிய பாறையாகி இருக்கும் எனவே இதில் இருந்து உயிரினங்கள் தோன்றுவதற்கு முந்தைய காலம் தொட்டே., தென்இந்தியா நிலப்பகுதியாகவே இருந்தது என்பது தெளிவாகின்றது. இதற்கு நேர்மாறாக வட இந்தியா, இமயமலைப் பகுதி மற்றும் பிற ஆசிய பகுதிகள் ஆகியவற்றில் இருக்கும் மண், பாறைகளில் இயல்பை பார்த்தால் அவை மிகவும் பிற்பட்டவை என்பதை அறியலாம்.
வடஇந்திய பகுதிகளின் நிலத்தில் எத்தகைய ஆழத்திலும் கருங்கல் நிலத்தைக்காண முடியாது. ஏனெனில் அப்பகுதி முழுமையும் உண்மையில் பல்லாயிரம் ஆண்டுகளாக சிந்து, கங்கை ஆறுகள் அடித்துக் கொணர்ந்த வண்டல் மண்ணால் ஏற்பட்டதே ஆகும். இதில் இருந்து சற்று பழைமையான இமயமலை, உலக வரலாற்றின் மிகப் பிந்தைய நாள் வரையில் கடலுள் அமிழ்ந்தே இருந்தது. அதில் இன்றும் காணப்படும் கடல் சிப்பிகளும், நண்டு முதலான கடல் உயிர்களின் எலும்புக்கூடுகளும், சுவடுகளும் இந்த உண்மைக்கு சான்றாக இருக்கின்றன. மேலும், வடஇந்திய பகுதிகளில் உள்ள நில நடுக்குகளில் செடி, கொடிவகை உயிரினங்களின் சுவடுகள் காணப்படுகிறது. அவையும் மிகப் பழைய உயிர்வகைகளாக இல்லை. இவற்றுக்கு மாறாக, தென்னிந்தியாவில் உள்ள பாறைகளின் அடிப்பகுதிகளில் உயிர் வகைக்கே இடமில்லாத கருங்கல் அல்லது நெருப்பு வண்ணக்கல் காணப்படுகிறது. அதன் மேற்பகுதிகளில் மிகப்பழைய செடி, கொடிகளின் வளர்ச்சி முறைப்படி காணப்படுகின்றன. ஆப்பிரிக்க கண்டமும், இந்தியாவும் பெரிதும் ஒத்திருப்பதில் இருந்து லெமுரியாகண்டம் ஆப்பிரிக்காவையும், இந்தியாவையும் இணைத்திருக்க வேண்டும். கிழக்கிந்திய தீவுகளும், ஆஸ்திரேலியாவும் ஒத்திருப்பதில் இருந்து லெமுரியா கண்டம், ஆஸ்திரேலியா வலை ஒரு காலத்தில் பரந்து இருந்திருக்க வேண்டும், பசிபிக் தீவுகள் வட அமெரிக்காவவின் கலிபோர்னியா பகுதியுடன் ஒற்றுமை உடையவையாக இருப்பதால் அதனை வெமு:ரியா ஒரு வகையில் உள்ளடக்கி இருந்தது என்பவை விளங்கும். லெமுரியா கண்டத்தில் முலமாக பெர்மியன், மயோசின் காலங்களில் இந்தியாவுடன் ஆப்பிரிக்கா இணைக்கப்பட்டிருந்தது. பலயோசாயிக் காலங்களில் ஆஸ்திரேலியாவுடன் அது இணைக்கப்பட்டிருந்தது என்று கருதப்படுகிறது. இந்தியாவின் மேற்குக் கரையில் இருந்து ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள சீசெல்சு, மடக்காசுக்கர், மொரீசியசு வரைக்கும் இலச்சத்தீவுகள், மாலத்தீவு, சாகோசுத்தீவுகள், சாயாதேமுல்லா, ஆதசுக்கரைஆகியவை உள்பட பல பவழத்தீவுகளும், மணல் மேடுகளும் காணப்படுகின்றன. இவற்றுள் சீசெல்சைச் சுற்றி நெடுந்தொலைவு கடல் 30 அல்லது 40 பாகம் ஆழத்திற்கு மேல் இல்லை என்றும், அதன் அடியிலுள்ள நிலம் தட்டையான, அகன்ற மணல் மேடே என்றும் டார்வின் குறிப்பிடுகின்றார்.
3.ஆப்பிரிக்கா கண்டம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் ஆகும்.இக்கண்டத்தின் 54 நாடுகளில் மொத்தம் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
அமெரிக்காக்கள்(Americas, அல்லது அமெரிக்கா),எனப்படுபவை மேற்கு அரைப்பகுதி அல்லது புதிய உலகம் ஆகியவற்றில் உள்ள நிலப்பகுதிகள் ஆகும். இவற்றில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களும் மற்றும் அவற்றைச் சூழவுள்ள தீவுகள் மற்றும் நிலப்பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. அமெரிக்கா என்ற சொல் ஒரு பொதுவான சொல்லாக இருந்தாலும், இது ஐக்கிய அமெரிக்காவையே பொதுவாகக் குறிப்பிடுவர். உலகின் மொத்த பரப்பளவில் 8.3% (28.4% நிலப்பரப்பையும்) அமெரிக்காக்கள் கொண்டுள்ளன. உலக மக்கள் தொகையில் இங்கு ஏறத்தாழ 13.5% மக்கள் இங்கு வசிக்கின்றனர். கோண்டுவானா என்ற பெருங்கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருந்து தென்னமெரிக்கா ஏறத்தாழ 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து தனியே ஒரு கண்டமானது. 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கரிபியன் தட்டு, பசிபிக் தட்டு ஆகியவற்றின் மோதலினால் பல எரிமலைகள் எல்லைகளிலே வெளிக்கிளம்பி பல தீவுகளை உருவாக்கியது. நடு அமெரிக்காவின் தீவுக்கூட்டங்களின் இடைப்பட்ட பகுதிகள் தொடர் எரிமலை வெடிப்புகளினால் கிளம்பிய பொருட்களால் நிரம்பி புதிய நிலப்பகுதியை உருவாக்கியது. 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரை வட அமெரிக்கா, மற்றும் தென்னமெரிக்கா கண்டங்கள் பனாமா பூசந்தியினால் (Isthmus of Panama) இணைக்கப்பட்டு, அதன்மூலம் அமெரிக்காக்கள் என்ற தனி நிலப்பகுதி உருவானது.அமெரிக்க கண்டங்களில் ரோமானிய மொழிகளை பேசும் பகுதி இலத்தீன் அமெரிக்கா என்றழைக்கப்படும். பொதுவாக எசுப்பானியம் மற்றும் போர்த்துக்கீசம் பேசும் நாடுகள் இலத்தீன் அமெரிக்கா என்றழைக்கப்பட்டன. மெக்சிகோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா, மற்றும் கரிபியக் கடலில் கியூபா, டொமினிக்கன் குடியரசு ஆகிய தீவு நாடுகளும் அமெரிக்காவின் புவேர்ட்டோ ரிக்கோ பொதுநலவாயமும் இலத்தீன் அமெரிக்காவில் உள்ளன.
ஒருநிலக் கொள்கைஅல்லது ஒருதரைக் கொள்கை என்பது ஏறத்தாழ 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், இன்று உலகில் உள்ள எல்லாக் கண்டங்களும், தரைநிலப்பகுதிகளும் தொடர்பறா ஒருபெரு நிலமாக சேர்ந்து ஒன்றாக இருந்ததெனக் கொள்ளும் கொள்கை ஆகும். இந்த ஒருபெரும் தரைநிலத்தைச் சூழ்ந்து ஒரேயொரு மாபெரும் கடல் மட்டும்தான் இருந்தது. எனவே அன்றைய நில உருண்டையில், ஒரேயொரு தரைநிலமும், ஒரேயொரு பெருங்கடலும்தான் இருந்தது என்று இக் கொள்கை கூறுகின்றது. மண் நிலம் எல்லாம் என்னும் பொருள் பட கிரேக்க மொழியின் Παγγαία (பான் 'கையா, pangaea) என்னும் சொல்லை இம்மாபெரும் ஒரு கண்டத்துக்கு ஆல்ஃவிரட் வேகனர் (Alfred Wegener) என்னும் ஜெர்மன் நாட்டுக்காரர் 1920களில் இட்டார். இந்த ஒருநிலத்தைத் தமிழில் முழுமண் என்று அழைக்கப்படும். இந்த முழுமண்ணைச் சூழ்ந்திருந்த மாபெரும் ஒருபெருங்கடலுக்கு முழுக்கடல் அல்லது முழுஆழி (Panthalassa) என்று பெயர். முழுமண்ணானது பிறைநிலா வடிவில் அமைந்திருந்தது. இக்கருத்தினைப் படத்தில் காணலாம். பின்னர் நில உருண்டையின் புற ஓடுகள் பிரிந்து பல்வேறு கண்டகளாக ஆனதை கருத்துருவாக காணலாம். 4.வட அமெரிக்கா ஒரு கண்டமாகும். கனடா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ, கியூபா ஆகியவை இந்த கண்டத்தில் உள்ள நாடுகளுள் சில. இக்கண்டமானது வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலாலும் கிழக்கே வட அட்லாண்டிக் பெருங்கடலாலும் மேற்கே பெருங்கடலாலும் தெற்கே கரீபியன் கடலாலும் சூழப்பட்டுள்ளது. இது பரப்பளவில் மூன்றாவது பெரிய கண்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய கண்டமாகும். இதன் பரப்பளவு 24,230,000 சதுர கிலோ மீட்டர்களாகும். 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 454,225,000.5.தென் அமெரிக்கா ஒரு கண்டம். இக்கண்டத்தின் மேற்கில் பசிபிக் மாக்கடலும், தெற்கில் அன்டார்ட்டிகா பனிகண்டமும், கிழக்கில் அத்லாந்திக் மாக்கடலும் , வடக்கில் வட அமெரிக்கக் கண்டமும் உள்ளன. இது உலகின் தென்பாதி உருண்டைப் பகுதியில் அமைந்த கண்டமாகும். ஆஸ்திரேலியாவும், அன்டார்டிகா பனிக்கண்டமும், இத்தென் அமெரிக்காவுமே நிலவுருண்டையின் தென் பாதியில் அமைந்த பெரு நிலப்பகுதிகள். இப்படி நில உருண்டையின் தென்பாதிப் பகுதியில் இத்தென் அமெரிக்காவுக்கு நேர் பின்னுள்ள இன்னொரு நாடு அவுஸ்திரேலியா ஆகும். தென் அமெரிக்கா 17.8 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. தென் வடலாக (தெற்கு-வடக்காக) சுமார் 7,600 கி.மீ தொலைவும், கிழக்கு-மேற்காக (கீழ் மேலாக) ஏறத்தாழ 5,300 கி.மீ. அகலமும் உடையது இக்கண்டம். மேற்குலகிலேயே யாவற்றினும் மிக மிக உயரமான அக்கோன்காகுவா மெருமலை இக்கண்டத்தின் அர்ஜென்டினா நாட்டில் உள்ளது. இமய மலைக்கு அடுத்தாற்போல் மிக உயர்ந்த இம்மலை 6,960 மீ. உயரம் உடையது. இக்கண்டத்தில் உள்ள 12 தனிநாடுகளில் சுமார் 300 மில்லியன் மக்கள் வசிகிறார்கள் (1991ன் கணக்குப் படி). இக் கண்டத்திலே மிகப்பெரும்பாலோர் இலத்தீன் மொழிவழி தோன்றிய ஸ்பானிய மொழி பேசுவதால், இத் தென் அமெரிக்காவை. இலத்தீனிய அமெரிக்கா என்றும் அழைக்கப்படுகின்றது. பிரேசில் நாட்டில் போர்ச்சுகீசிய மொழி பேசப்படுகிறது.
அண்டார்க்டிக்கா (Antarctica) பூமியின் தென் முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும். மேலும் கண்டம் முழுவதும் ஏறக்குறைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது. புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
6.ஐரோப்பா கண்டம் யுரேஷியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது புவியியல் அமைப்பின் படி ஒரு தீபகற்பமாகும். இதன் எல்லைகளாக வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே மத்தியதரைக் கடலும் கிழக்கே கருங்கடலும் உள்ளன. ஐரோப்பாக் கண்டம், பொருளாதார வகையில் பிற கண்டங்களை காட்டிலும் வளர்ச்சியடைந்த பகுதியாகும். ஐரோப்பாவின் கிரீசு நாடே மேற்கத்திய பண்பாட்டின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. ஐரோப்பா உலனின் ஏழு கண்டங்களில் பரப்பளவில் 10,180,000 ச.கி;மீகள் இரண்டாவது சிறிய கண்டமாகும். இது உலகின் மொத்த பரப்பளவில் 2% மற்றும் உலகின் நிலப்பரப்பளவில் 6.8 % ஆகும். உருசியா நாடு ஐரோப்பா கண்டத்தில் மிகப்பெரிய நாடாகும். வாடிகன் சிட்டி மிக சிறிய நாடாகும். இதன் மொத்த மக்கள் தொகை 731 மில்லியன் (கிட்டதட்ட 73 கோடிகள்). மக்கள் தொகை பரவலில் ஆசியா ஆப்பிரிக்கா விற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 11% ஆகும். ஆனால் ஐக்கிய நாடுகளின் கணிப்பின்படி இதன் மக்கள் தொகை 2050ல் 7% குறைய வாய்ப்புள்ளது. 16ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து உலக நிகழ்வுகள் மற்றும் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக உள்ளது. 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, ஸ்பெயின், போர்த்துகல் உலகின் முக்கியமான கடல்வழி பாதைகளை கண்டறிந்தனர். முக்கிய இடங்களில் கால்வாய்களையும் அமைத்தனர் அதே போல பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் ஐரொப்பாவில் நிகழ்ந்தன. இதன் விளைவாக பல நாடுகளை பிடிக்கும் ஆவலில் ஆப்பிரிக்கா, ஆசியா , அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டத்திலுள்ள நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக அவற்றின் ஆளுமையின் கீழ் கொண்டு வந்தனர். 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரு உலகப்போர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிடையே நடந்தது. இந்த பாதிப்பின் விளைவாக ஐரோப்பாவின் உலக ஆளுமை இக்காலகட்டத்தில் வீழ்ந்தது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து சோவியத் ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா நாடுகள் ஆதிக்க சக்திகளாக வளர்ந்தன. 1991 ல் சொவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உருகாக்கப்பட்டு ஆதிக்க சக்தியாக வளர்ந்து வருகிறது.
ஓசியானியா (Oceania) என்பது பசிபிக் பெருங்கடலையும் அதனைச் சூற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள நிலத்தையும் தீவுகளையும் குறிக்கும் புவியியல் பெயராகும். ஓசியானியா என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் பிரெஞ்சு நாடுகாண் பயணியான ஜூல் டூமோன்ட் டேர்வில் என்பவர். இன்று இச்சொல் பல மொழிகளில் கண்டங்களில் ஒன்றை வரையறுப்பட்தற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஓசியானியாவில் உள்ள தீவுகள் மூன்று வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை: மெலனீசியா, மைக்குரோனீசியா, மற்றும் பொலினீசியா.. ஓசியானாவின் எல்லைகள் பல வழிகளில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நியூ கினி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரலேசியா, மலே தீவுக்கூட்டம் ஆகியவை ஓசியானியாவில் அடக்கப்பட்டுள்ளன.
7.ஆஸ்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய கண்டம் ஆகும். இது பொதுவாக ஆஸ்திரேலியப் பெருநிலத்தையே குறிக்கிறது. இதன் அயலில் உள்ள தீவுகளான டாஸ்மானியா, நியூ கினி போன்றவை இக்கண்டத்தினுள் அடங்காது. ஆனால் நிலவியல் ரீதியாக, கண்டம் என்பது பெருநிலப்பரப்போடு சேர்ந்த தீவுகளையும் உள்ளடக்கும் என்பதால், டாஸ்மானியா, நியூ கினி போன்றவையும் ஆரு தீவுகள் போன்ற அயலில் உள்ள தீவுகளையும் இக்கண்டத்தினுள் அடக்கலாம். இத்தீவுகள் கண்டத் திட்டுகளின் மேல் பரவியுள்ள கடல்களினால் பிரிக்கப்பட்டவை. ஆஸ்திரேலியா, நியூ கினி ஆகியவை அரபூரா கடல், மற்றும் டொரெஸ் நீரிணையாலும், தாஸ்மானியா பாஸ் நீரிணையாலும் பிரிக்கப்பட்டுள்ளன. கிமு 18,000 ஆண்டுகளளவில், கடல் மட்டம் குறைந்திருந்த வேளையில், நிலத்திட்டுகள் அனைத்தும் ஒரே நிலமாக இருந்தது. கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக, கடல் மட்டம் உயர்வின் காரணமாக தாழ்நிலப்பரப்புகள் கடலினுள் அமிழ்ந்து இன்றைய பெருநிலப்பரப்பையும், நியூ கினி மற்றும் டாஸ்மானியா என்ற இரண்டு மலைத்திட்டுக்கள் அடங்கிய தீவுகளையும் பிரித்தன. நியூசிலாந்து நாடு ஒரே கண்டத் திட்டில் இல்லாததால், இது ஆஸ்திரேலியா கண்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதில்லை. மாற்றாக, இது மூழ்கிய கண்டமான சிலாந்தியாவினுள் அடங்கும். சிலாந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து ஓசியானியா அல்லது ஆஸ்திரலேசியாவின் பகுதிகளாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக