ஞாயிறு, 27 அக்டோபர், 2013

பிரபஞ்சம்

மரியாதைக்குரியவர்களே,
                    வணக்கம்.
                          அனைவருக்கும் அறிவியல் வலைப்பதிவுக்கு அன்புடன் வரவேற்கிறோம்.பிரபஞ்சம் பற்றி இங்கு காண்போம்.

             தொடக்கத்தில், அதாவது ஒரு 12 அல்லது 16 பில்லியன் (மஹாகும்பம்) ஆண்டுகளுக்கு முன்னால் நாம் இன்று அறிந்தும் அறியாமலும் இருக்கிற பிரபஞ்சத்தின் எல்லா இடமும் வஸ்துவும் மற்றும் எல்லா சக்தியும் ஒரு ஊசிமுனையின் ட்ரில்லியன்-ல் ஒரு பாக அளவில் அடக்கப்பட்டதாக இருந்தது. இந்தச் சமயத்தில் நாம் கற்பனை செய்ய முடியாத அளவில் அது வெப்பமுடையதாகவும் நாம் எண்ணிப் பார்க்க முடியாத இயற்கையின் ஈட்டமும் மிக்கதாகவும் இருந்தது. அப்போதுதான் அது அகிலம் ஒன்று என்பதை நிருபிப்பது போல இருந்தது.இன்னும் காரணங்கள் அறிவியல்பூர்வமாக அறியப்படவில்லை; 
                             ஆனால் அது அப்போது திடீரென விரிவடையத் தொடங்கிது. இச்சமயத்திலே பிரபஞ்சத்தின் வெப்பம் 1030 டிகிரி செல்சியஸ் ஆகவும் அதன் வயது 10-43 நொடிகளாகவும் இருந்தபோது வஸ்துக்களை குறித்த நமது காலம் மற்றும் இடம்  (The Knowledge about Space and Time) குறித்த நமது தற்போதைய அறிவும் அர்த்தமற்றவைகளாக இருந்தன. பின்னர் சிறிது காலத்தில் கருந்துவாரங்கள் உருவாகுதலும் மறைதலும் பின்னர் மீண்டும் ஒருங்கிணைந்த ஆற்றலின் வெளிப்பாடாக உருவாகுதலும் நடந்தது.இந்த அதிசீதமான நிலையில் நாம் பொதுவாக ஒத்துக்கொண்ட ஊக இயற்பியலின்படி பச்சிளம் பிரபஞ்சத்தின் பஞ்சு போன்ற மெத்தென இருந்த தொடக்கக் குமிழிகளின் அமைப்பால் இடத்துக்கும் காலத்துக்குமான வளைவு மிகவும் நெருங்கி அமைந்தது.
                              இந்தச் சகாப்தத்தின் போது ஐன்ஸ்டீன் அவர்களால் விளக்கப்பட்ட பொது சார்புநிலைக் கோட்பாடுத் தோற்றமும் (நவீன ஈர்ப்பு விசைத் தேற்றம்) குவாண்டம் இயக்கவியலும் (பருப்பொருளின் மிக சிறிய அளவுகளால் விளக்கப்படுதல்) தனியாகப் பிரித்து அறிய முடியாததாக இருந்தது.தொடர்ந்து அகிலமானது விரிவடைந்து அதன் வெப்பம் சிறிது தணிந்து குளிர்ச்சி அடைந்தபோது ஈர்ப்பு விசை ஆனது குழந்தைப் பிரபஞ்சத்தின் மற்ற விசைகளில் இருந்து பிரிய ஆரம்பித்தது. அதன் பின்னர் விரைவிலேயே பலமான நியூக்ளியர் விசையும் மந்தமான மின் விசையும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிய நேர்ந்தது. 

                           இதனால், இதனுடன் சேர்ந்து சேமித்து வைக்கப்பட்டு இருந்த மாபெரும், குறிப்பிட்டு இது தான் என்று சொல்லமுடியாத சக்தியின் மிகபெரிய வெளியேற்றமும் அகிலத்தின் பரிமாணத்தை 30,00,000 ஒளி ஆண்டுகளாக குறுகிய காலத்தில் பெருக்கச் செய்தது.இது மாதிரி வெளியேற்றப்பட்ட சக்தி ஆனது ஒரு வஸ்து அதன் அதி வெப்ப நிலையில் இருந்து அதன் விறைத்துப் போன குளிர்ச்சிக்குச் செல்லும்போது வெளியேற்றப்படும் வெப்பஆற்றலின் சக்திக்கு இணையானதாகக் கொள்ளலாம். இது மாதிரி வெளியேற்றப்படும் வெப்பம் (Latent Heat) மறைந்திருந்த வெப்பம் என்று சொல்லப்படுகிறது.அதாவது கொடுக்க பட்ட வெப்பத்தின் போது பூஜியம் டிகிரியில் உள்ள ஒரு கிராம் நீரில் சேமித்து வைக்கப்படும் வெப்ப ஆற்றல் ஆனது அதே வெப்பத்தை ஒரு கிராம் பனிகட்டிக்குத் தரும்போது அதனுள் சேமித்து வைக்கப்படும் வெப்ப ஆற்றலைக் காட்டிலும் அதிகம் ஆகும். இது மாதிரியாக நீருக்கும் அதன் பனிகட்டிக்கும் ஆன வெப்ப ஆற்றல் சேமிக்கும் வித்யாசமே நீரின் latent (மறைந்திருந்த) வெப்பம் எனப்படுகிறது.
                    இந்தத் தொடர்ச்சியான பிரபஞ்சத்தின் விரிவாக்கமே, அகிலத்தின் வீக்க சகாப்தம் எனப்படுகிறது. இத்தருணத்தில் பரமாகாசத்தில் வஸ்துக்களும் சக்தியும் சமமான அடர்த்தியில் விநியோகிக்கப் படுதல் நடந்தேறியது. அப்படியே அதில் பிரதேச வேறுபாடுகள் இருந்திருப்பினும் அது ஒரு லட்சத்தில் ஒரு பங்காகவே இருந்திருக்கும். இன்று சோதனைச்சாலையில் ஆய்வு செய்து உறுதி செய்யப்பட்ட இயற்பியலின்படி, அன்றைய பிரபஞ்சத்தின் நுண்ஒளிகள் (Photons) ஆனது இருந்த போதுமான வெப்பத்தின் விளைவாக அதன் சக்தியை சித்தாகவும் (Antimatter) அசித்தாகவும் (Matter) இரு துகள்களாக தானாகவே மாற்றியது. ஆனால் உடனடியாக இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி நிர்மூலமாகி அதன் சக்தி மறுபடியும் நுண்ஒளிக்குள் இணைந்தது. சித்துவிற்கும் அசித்துவிற்கும் இடையே ஆன ஒத்த தன்மை இவ்விரண்டும் பிரிவதற்கு முன்னால் உடைந்துபோனது. இதனால் சித்தை விட அசித்து சொற்ப அளவில் அதிகமாகியது. இதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. 
                               இது மாதிரி மிகச்சிறிய அளவில் ஒத்ததன்மை இல்லாமல் போனதே எதிர்காலப் பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமான காரணமாக அமைந்தது.
                                  இன்னும் அறிவோம்................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக