மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.அனைவருக்கும் அறிவியல் வலைப்பக்கத்திற்கு தங்களை வரவேற்கிறோம்.அறிவியல் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இதோ மூன்று வலைத்தளங்கள் காண்க...
தினமணி நாளிதழில் முன்பு செய்தி ஆசிரியராக இருந்தவர். இப்போது அறிவியல்புரம் என்று வலைப்பதிவு தொடர்ந்து எழுதி வருகிறார். இதில் சுவாரஸ்யமான அறிவியல் செய்திகள் கொட்டி கிடக்கின்றன. சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது தான் அதிகமான வெயில் என்று சொல்வார்கள். ஆனால் மதியம் இரண்டு மணி தொடங்கி இரண்டரை வரை தான் அந்த நாளின் அதிகமான வெயில் இருப்பதாக சொல்கிறார்.
தமிழில் அறிவியல் தகவல்களைச் சொல்வதற்காகவே வலைப்பதிவு நடத்தி வருகிறார் ராஜா சங்கர். 'குவாண்டம் கொள்கையும் இருக்கும் துகள்களும்' என்று நீண்ட தொடரினை எழுதி கொண்டு இருக்கிறார். இந்த உலகில் உயிர் எப்படி தோன்றியது? மனிதன் எப்படி தோன்றினான் பற்றி பேசிய டார்வினின் பரிணாமக் கொள்கையை எளிய தமிழில் தொடராக எழுதுகிறார்.
சி. ஜெயபாரதன் (jayabharathan.wordpress.com)
கனடாவில் வசிக்கும் சி. ஜெயபாரதனுக்கு வயது இன்னும் சில ஆண்டுகளில் எண்பதைத் தொட இருக்கிறது. தொடர்ச்சியாக 'நெஞ்சின் அலைகள்' என்கிற தன்னுடைய வலைப்பதிவில் எழுதுகிறார். பெரும்பாலும் பிரபஞ்சத்தின் ரகசியங்களைக் குறித்தான சமீப கால அறிவியல் கண்டுப்பிடிப்புகளைப் பற்றி தான் விரிவாக எழுதுகிறார். அறிவியல் பற்றிய தமிழ் கவிதையில் தொடங்கி ஆங்கில விஞ்ஞான மேற்கோள்களைக் குறிப்பிட்டு பல படங்களை எடுத்து காட்டி எளிய நடையில் நுட்பமான விஷயங்களை சுவாரஸ்யமாக அலசுகிறார். பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் என்று அவர் எழுதுகிற தொடர் முக்கியமானதாக இருக்கிறது.- பெருவெடிப்பு தான் பிரபஞ்சத்தின் தொடக்கம் என்கிறார்கள். அந்தப் பெருவெடிப்பிற்கு முன்பு என்ன இருந்தது?
- பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது எந்தச் சக்தி?
- ஈர்ப்பு விசை என்பது மாயையாக இருக்கலாம்?
தினமணி நாளிதழில் முன்பு செய்தி ஆசிரியராக இருந்தவர். இப்போது அறிவியல்புரம் என்று வலைப்பதிவு தொடர்ந்து எழுதி வருகிறார். இதில் சுவாரஸ்யமான அறிவியல் செய்திகள் கொட்டி கிடக்கின்றன. சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது தான் அதிகமான வெயில் என்று சொல்வார்கள். ஆனால் மதியம் இரண்டு மணி தொடங்கி இரண்டரை வரை தான் அந்த நாளின் அதிகமான வெயில் இருப்பதாக சொல்கிறார்.
- சந்திரன் தோன்றியது எப்படி?
- அக்னி நட்சத்தித்தின் போது அதிக வெயில் ஏன்?
- சூரியன் தனி நட்சத்திரம். ஆனால் பல நட்சத்திரங்கள் ஜோடி ஜோடியாக இருக்கின்றன.
தமிழில் அறிவியல் தகவல்களைச் சொல்வதற்காகவே வலைப்பதிவு நடத்தி வருகிறார் ராஜா சங்கர். 'குவாண்டம் கொள்கையும் இருக்கும் துகள்களும்' என்று நீண்ட தொடரினை எழுதி கொண்டு இருக்கிறார். இந்த உலகில் உயிர் எப்படி தோன்றியது? மனிதன் எப்படி தோன்றினான் பற்றி பேசிய டார்வினின் பரிணாமக் கொள்கையை எளிய தமிழில் தொடராக எழுதுகிறார்.
- உயிர்களின் தோற்றம் குறித்தான டார்வின் பரிணாமக் கொள்கை
- குவாண்டம் கொள்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக