மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
அனைவருக்கும் அறிவியல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.உலகம் தோன்றிய கதை பற்றி காண்போம்.

அண்டம்.
அண்டம் (Universe) உருவானது குறித்து பல கதைகள் கூறபட்டாலும், இயற்பியலின்படி அது சில பொருட்களின் மோதலினால் உருவானது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் இந்த அண்டம் முதலும் முடிவும் இல்லாததாக நமக்கு விளங்கி வருகிறது. ஆதலினால் அண்டம் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.அண்டம் என்ற சொல்லானது, பொதுவாக அனைத்தையும் கொண்டுள்ளது என்று வரையறுக்கப்படுகிறது. இருப்பினும், மாறுபட்ட வரையறையைப் பயன்படுத்தி, "அண்டம்" என்பது மொத்தமாக பல்லண்டம் என்று அழைக்கப்படும் பல தொடர்பற்ற "அண்டங்களில்" ஒன்று என நம்பப்படுகிறது. எடுத்துக்காட்டாக, குமிழ் அண்டக் கொள்கையில், எண்ணிலா வெவ்வேறுவிதமான "அண்டங்கள்" உள்ளன, அவை ஒன்றுக்கொன்று வேறுபட்ட இயற்பியல் மாறிலிகளைக் கொண்டிருக்கின்றன. இதேபோல், பல உலகங்கள் கருதுகோளில், ஒவ்வொரு குவாண்டம் அளவீட்டிலும் புதிய "அண்டங்கள்" தோற்றுவிக்கப்படுகின்றன. பொதுவாக இந்த அண்டங்கள் நமது அண்டத்திலிருந்து முழுமையாக தொடர்பில்லாமல் இருப்பதாகக் கருதப்படுவதால், அவற்றை சோதனையின் மூலம் கண்டறிய இயலாது.தற்போதைய வானியல் ஆய்வுகளின்படி, அண்டத்தின் வயது 13.73 (± 0.12) பில்லியன் ஆண்டுகள் என்றும், காணக்கூடிய அண்டத்தின் விட்டம் குறைந்தது 93 பில்லியன் ஒளி ஆண்டுகள் அல்லது 8.80 ×1026மீட்டர்கள் எனவும் அறியப்படுகிறது. (எந்தவொரு பருப்பொருளும் வரையறுக்கப்பட்ட காலவெளியில் ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் செல்லமுடியாது என்று சிறப்பு சார்புக்கொள்கை குறிப்பிடுவதால், 13 பில்லியன் ஆண்டுகளில் 93 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இரண்டு விண்மீன் திரள்கள் பிரிந்து சென்றிருக்கிறது என்பது முரண்பாடாகத் தோன்றலாம். இருப்பினும் பொது சார்பு கொள்கையின் படி, விண்வெளியானது உள்ளார்ந்த வரம்பின்றி அதன் வீதத்தில் விரிவடையலாம்; ஆகவே இரண்டு விண்மீன் திரள்கள், அவற்றுக்கு இடையேயான இடைவெளி அதிகரிக்கும் பட்சத்தில் ஒளியின் வேகத்தை விட மிகவேகமாகப் பிரியலாம்.) அண்டத்தின் அளவானது முடிவுள்ளதா அல்லது முடிவற்றதா என்பது உறுதியற்றதாக உள்ளது.ஓர் உயிர் உருவாகும் மூலத்தை தான் நாம் ‘அண்டம்’ என அழைக்கிறோம். எனவே தான் உயிரை உருவாக்கும் கரு முட்டைக்குக்கூட அறிவியலில் அண்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பல கோடி உயிர்களைக் கொண்ட புவியையும், விண்மீன்களையும், கோள்களையும், விண்மீன் கூட்டங்களையும், வெற்றிடங்களையும் தனக்குள்ளே வைத்திருக்கும் பிரபஞ்சத்தை கூட நாம் அண்டம் என்றே அழைக்கிறோம். அண்டம் என்ற பெயருக்கு ஏற்ப அது அகண்டும் இருக்கிறது.ஒளி ஆண்டு உலகிலேயே மிகவும் வேகமாக பயணம் செய்யும் ஆற்றல் பெற்றவை ஒளிக்கதிர்கள் மட்டும்தான். ஓர் ஒளிக்கற்றை ஓர் ஆண்டில் பயணம் செய்து கடக்கின்ற தூரம் தான் ஓர் ஒளியாண்டு என அழைக்கப்படுகிறது. அப்படியானால் ஒளி ஒரு வினாடி நேரத்தில் பயணம் செய்யும் தொலைவு என்ன? ஒளி ஒரு வினாடி நேரத்தில் 3,00,000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்கிறது (1,86,000 மைல்கள்). வினாடி கணக்கை நாம் அப்படியே ஓர் ஆண்டுக்கு மாற்றலாம்.ஒரு வினாடிக்கு ஒளி பயணம் செய்யும் வேகம் 3 x 108 என்ற அளவீட்டால் குறிக்கப்படுகிறது. இந்த அளவீட்டுடன் நாம் ஓர் ஆண்டின் மொத்த நாட்களையும், ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தையும், ஒரு மணி நேரத்தின் அறுபது நிமிடங்களையும், ஒரு நிமிடத்தின் அறுபது வினாடிகளையும் சேர்த்து பெருக்கிக் கொள்ளலாம்.ஓர் ஒளி ஆண்டு 3 x 108 x 365 x 24 x 60 x 60 விடை என்ன தெரியுமா? 7.46 மில்லியன் (ஒரு மில்லியன் = 10 லட்சம்) கிலோ மீட்டர் (5.88 மில்லியன் மைல்கள்). இவ்வளவு வேகமாகப் பயணம் செய்யும் ஒளியே, நாம் வாழும் புவியும் சூரியனும் இடம் பெற்றுள்ள பால்வெளி என்கிற விண்மீன் திரளை கடக்க பல ஆயிரம் ஆண்டுகள் பயணம் செய்யவேண்டும். பால் வெளியின் தூரம் சுமார் 1,00,000 ஒளி ஆண்டுகள் ஆகும்.பூமி தட்டையானது. சூரியன்தான் பூமியைச் சுற்றி வருகிறது என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டு வந்தது. ஆனால் இன்று இந்தக் கருத்து தவறு என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.இன்று சூரியன், பூமி, மற்ற கோள்கள், சந்திரன்கள் ஆகியவற்றின் எடை, விட்டம், தூரம், அவற்றின் தன்மை, நட்சத்திரங்கள் எவற்றால் ஆனவை. பிரபஞ்சம் என்பது என்ன? போன்ற பல கேள்விகளுக்கும் விடை கிடைத்திருக்கிறது. நிலவுக்கு மனிதன் போய்வந்த கதை இன்று செவ்வாய் கிரகத்துக்கு ஒரு ஜாலி ட்ரிப் போய்வர முடியுமா என்று விஞ்ஞான உலகம் ஆராயத் தொடங்கிவிட்டது. நமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள வேறு பல சூரியன்களும் அவற்றின் குடும்பங்களும் நம் டெலஸ்கோப்களில் அறிவியல் அசத்திக்கொண்டிருக்கும் காலம் இது. முதலில் நம் உலகம் எப்படித் தோன்றியது என்பதைத் தெரிந்துகொண்டுவிடவேண்டும். அப்புறம்தான் மற்ற உலகங்களுக்குள் புகுந்து புறப்படமுடியும்.
அண்டமானது அதன் அளவு மற்றும் வரலாறு முழுவதும் ஒத்த இயற்பியல் விதிகளாலும் மாறிலிகளாலும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என சோதனைகளும் ஆய்வுகளும் கூறுகின்றன. அண்டவியல் தொலைவில் ஈர்ப்பு விசையே முதன்மையான விசையாகும், மேலும் தற்போது பொது சார்பு கொள்கையே புவியீர்ப்புக் கோட்பாடுகளுக்கான மிகத்துல்லியமானது ஆகும். மீதமுள்ள மூன்று அடிப்படை விசைகள் மற்றும் அவ்விசைகள் செயல்படும், அறியப்பட்ட அனைத்துத் துகள்கள் ஆகியவை தரநிலை மாதிரியின் மூலம் விவரிக்கப்படுகின்றன. அண்டமானது, குறைந்தபட்சம், வெளியின் மூன்று பரிமாணங்களையும் காலத்தின் ஒரு பரிமாணத்தையும் கொண்டுள்ளது, இருந்தபோதிலும் மிகச்சிறிய கூடுதல் பரிமாணங்களையும் கருத்தில் கொள்ளாமல் விட இயலாது. காலவெளி அமைப்பு, மென்மையாகவும் எளிதாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் தோன்றுகிறது. விண்வெளி மிகச்சிறிய சராசரியான வளவைக் கொண்டுள்ளது. ஆகவே அண்டம் முழுமைக்குமான சராசரியை யூக்ளிடியன் வடிவியல் துல்லியமாகக் கணக்கிடுகிறது. மாறாக, குவாண்டம் அளவில் காலவெளி அமைப்பு மிகவும் சீரற்றதாக உள்ளது.
பதிவுசெய்யப்பட்ட வரலாறு முழுவதிலும், சில அண்டவியல்கள் மற்றும் அண்டவியலாளர்கள் அண்டம் பற்றிய கருத்துக்களைக் கூற முயன்று வந்துள்ளனர். முந்தைய அளவுசார்ந்த புவிமைய மாதிரிகளை பண்டைய கிரேக்கர்கள் உருவாக்கியிருந்தனர். அவர்கள் அண்டமானது முடிவிலா வெளியை எப்போதும் கொண்டிருக்கிறது, ஆனால் ஒரு பொதுமையம் கொண்ட அளவிடமுடிந்த கோளங்களை உள்ளடக்கியது எனவும் – நிலையான நட்சத்திரங்களைப் பொறுத்து சூரியன் மற்றும் பல்வேறு கோள்கள் – சுற்றி வருகின்றன ஆனால் பூமி நிலையானது, நகராமல் உள்ளது எனவும் முன்மொழிந்தனர். பல நூற்றாண்டுகளாக, மேலும் துல்லியமான ஆய்வுகளும் மேம்படுத்தப்பட்ட புவியீர்ப்புக் கொள்கைகளும் வந்ததன் காரணமாக, முறையே கோபர்நிக்கஸின் சூரியமைய மாதிரியும் நியூட்டனின் சூரியக்குடும்ப மாதிரியும் உருவாகின. வானவியலில் குறிப்பிட்ட முன்னேற்றங்கள் பால்வழித்திரளின் பண்புரு விளக்கத்திற்கும், விண்மீன் திரள்கள் கண்டுபிடிப்புக்கும் மேலும் நுண்ணலை பின்புலக் கதிரியக்கத்திற்கும் வழிகோளியது; விண்மீன் திரள்கள் மற்றும் அவற்றின் நிறமாலை வரிகளின் பரவல் பங்கீடு பற்றிய கவனமான ஆய்வுகள் நவீன அண்டவியல் வளர்ச்சிக்கு மிகுந்த பங்காற்றியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக