ஞாயிறு, 27 அக்டோபர், 2013

அண்டத்தின் தத்துவம்

மரியாதைக்குரியவர்களே,
                            வணக்கம்.
                        அனைவருக்கும் அறிவியல் -வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். அண்டத்தின் தத்துவம் பற்றி படித்து உணர்வோம்.
             கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து சாக்ரட்டீஸிற்கு முந்தைய கிரேக்கத் தத்துவவாதிகள், மேற்கத்திய உலகில் முற்காலத்தில் அறியப்பட்ட அண்டத்தின் தத்துவவியல் மாதிரிகளை உருவாக்கினர். முற்கால கிரேக்கத் தத்துவவாதிகள் நாம் காணும் தோற்றம் தவறாக இருக்கலாம் என்று கருதினர், ஆகவே தோற்றத்திற்குப் பின்னாலுள்ள அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தனர். குறிப்பாக, பருப்பொருளானது வடிவம் மாறக்கூடிய (எ.கா., பனிக் கட்டியிலிருந்து நீர், நீரிலிருந்து நீராவி என) திறனைப் பெற்றுள்ளதை அவர்கள் கவனித்தனர், மேலும் சில தத்துவவாதிகள் உலகிலுள்ள (மரம், உலோகம் போன்ற) அனைத்துப் பொருள்களும் தோற்றத்தில் வெவ்வேறு போலத் தெரிந்தாலும் அவை அனைத்தும் ஆர்ச்சே எனப்படும் ஒற்றைப் பொருளின் பல்வேறு வடிவங்களே ஆகும் என முன்மொழிந்தனர். முதலில் இவ்வாறு செய்தவர் தாலேஸ் என்பவராவார் அவர் அந்தப் பொருளை நீர் என அழைத்தார். அவரைத் தொடர்ந்து, அனாக்ஸிமெனீஸ் அதைக் காற்று என அழைத்தார், மேலும் ஆர்ச்சே துகளானது பல்வேறு வடிவங்களில் ஒன்றுபட்டு வேறுபட்டு இருப்பதற்குக் காரணமாக கவர்ச்சி மற்றும் விலக்கு விசைகள் இருக்க வேண்டும் எனக் கூறினார். எம்படாக்ளீஸ் என்பவர், அண்டத்தின் வேறுபட்ட தன்மையை விளக்க ஒன்றுக்கும் மேற்பட்ட அடிப்படைப் பொருள்களின் கருத்து அவசியம் என முன்மொழிந்தார், மேலும் அனைத்து நான்கு அடிப்படைக் கூறுகளும் (பூமி, காற்று, நெருப்பு மற்றும் நீர்) இருந்ததாகவும் ஆனாலும் அவை வெவ்வேறு சேர்க்கை மற்றும் வடிவங்களில் இருந்ததாகவும் முன்மொழிந்தார். இந்த நான்கு-பூதக் கொள்கையை அவரைத் தொடர்ந்த பல தத்துவவாதிகளும் ஏற்றுக்கொண்டனர்.

                                    எம்படாக்ளீஸுக்கு முந்தைய சில தத்துவவாதிகள் ஆர்ச்சேவானது குறைவான பொருள்களைக் கொண்டுள்ளது எனப் பரிந்துரைத்தனர்; ஹிராக்ளிட்டஸ் லோகோஸ் என்ற கருத்தை வலியுறுத்தினார், பித்தாகோரஸ் அனைத்துப் பொருள்களும் எண்களால் ஆனவை என்றும், தாலேஸின் மாணவாரன அனாக்ஸிமண்டர் எல்லாப் பொருளும் அப்பெய்ரான் எனும் கண்ணுக்குப் புலப்படாத பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது என முன்மொழிந்தார், இது ஓரளவு குவாண்டம் ஃபோம் என்ற தற்காலக் கருத்தை ஒத்துள்ளது. அப்பெய்ரான் கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் முன்மொழியப்பட்டன, அவற்றில் பிரபலமானது அனாக்ஸகோரஸ் என்பவரின் கொள்கையாகும், அது உலகிலுள்ள பல்வேறுபட்ட பொருள்கள் அனைத்தும் வேகமாகச் சுழலும் அப்பெய்ரானிலிருந்து தோற்றுவிக்கப்பட்டன, அதன் இயக்கமானது நவுஸ் (மனம்) கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது என முன்மொழிந்தது. இன்னும் சில பிற தத்துவவாதிகள் — குறிப்பாக லியூஸிப்பஸ் மற்றும் டிமாக்ரிட்டஸ் போன்றோர் — அண்டமானது வெற்றிடம் எனப்படும் வெளியில் நகரக்கூடிய மற்றும் பகுக்க முடியாத அணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளது; இயக்கத்திற்கான தடையானது அடர்த்திக்கு நேர் விகிதத்திலிருக்கும், ஆகவே வெற்றிடத்தில் இயக்கத்திற்குத் தடை எதுவும் இருக்காது, எனவே முடிவிலா வேகத்தில் பொருட்கள் நகரும் என்ற கருத்தின் அடிப்படையில் இக்கருத்தை ("இயற்கையானது வெற்றிடத்தைப் புறக்கணிக்கிறது") அரிஸ்டாட்டில் எதிர்த்தார்.ஹிராக்ளிட்டஸ் ஒரு உள்ளார்ந்த மாற்றத்தைக் குறித்து விவாதித்தாலும், அவரது சம காலத்தவரான பார்மெனிடீஸ், புரட்சிகரமான ஒரு கருத்தை முன்வைத்தார், அதில் அனைத்து மாற்றங்களும் தோற்றமே, அடிப்படை உண்மையானது மாறாமலும் ஒற்றை இயல்புள்ளதாகவுமே உள்ளது என கூறினார். பார்மெனிடீஸ், இக்கருத்தை το εν (ஒன்று) எனக் குறிப்பிட்டார். பார்மெனிடெஸின் கொள்கை பல கிரேக்கர்களுக்குக் உண்மையற்றதாகத் தோன்றியது, ஆனால் அவரது மாணவரான ஜெனோ ஆஃப் இலீ பல பிரபலமான முரண்பாடுகளை முன்வைத்து அவர்களுக்குச் சவால் விடுத்தார். இந்த முரண்பாடுகளை அரிஸ்டாட்டில், முடிவிலா பகுப்புக்குட்படும் தொடர்பகத்தை விளக்கி, அதனை வெளிக்கும் காலத்திற்கும் பொருத்தி விளக்கினார்.

                                     அண்டமானது தொடக்கமற்ற முடிவிலாக் கடந்த காலத்தைக் கொண்டுள்ளது என நம்பிய கிரேக்கத் தத்துவவாதிகளுக்கு முரணாக, இடைக்கால தத்துவவாதிகளும் சமயவியலாளர்களும் அண்டமானது தொடக்கத்துடன் கூடிய ஒரு வரையறுக்கப்பட்ட கடந்த காலத்தைக் கொண்டுள்ளது என்ற கருத்தை உருவாக்கினர். இந்தக் கருத்தானது யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமியம் ஆகிய மூன்று ஆப்ரஹாமிய சமயங்களின் உருவாக்கக் கருத்துக்களிலிருந்து உருவானவை. கிறிஸ்தவ தத்துவவாதியான ஜான் ஃபிலோப்பனஸ் என்பவர், முடிவிலாக் கடந்த காலம் என்ற பண்டைய கிரேக்கக் கருத்துக்கு எதிரான இப்படிப்பட்ட முதல் விவாதத்தை முன்வைத்தார். இருப்பினும், முடிவிலாக் கடந்த காலத்திற்கு எதிரான நுட்பமான விவாதங்கள் பண்டைய இஸ்லாமிய தத்துவவாதி, அல்-கிண்டி (அல்கிண்டஸ்); யூத தத்துவவாதி, சாடியா கோன் (சாடியா பென் ஜோஸப்); மற்றும் இஸ்லாமிய சமயவியலாளர், அல்-கஸாலி (அல்கஸேல்) போன்றோரால் உருவாக்கப்பட்டன. அவர்கள் முடிவிலாக் கடந்த காலத்திற்கு எதிராக இரண்டு தர்க்கரீதியான விவாதங்களை உருவாக்கினர், முதலாவது "உண்மையில் முடிவிலாததான ஒன்றின் இருப்பு சாத்தியமற்றது என்பதை அடிப்படையாகக் கொண்ட விவாதம்", அது இவ்வாறு கூறுகிறது.

அனைவருக்கும் அறிவியல் அற்புதங்கள் இன்னும் தொடரும்............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக