ஞாயிறு, 27 அக்டோபர், 2013

பிரபஞ்சத்தின் துவக்கம்.

மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.''அனைவருக்கும் அறிவியல்'' -வலைப்பதிவுக்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.முதலில் பிரபஞ்சம் தோன்றியது எப்படி?என தெரிந்துகொள்வோம்.
                                                     சுமார் 1350 கோடி வருடங்களுக்கு முன் சிங்குலாரிட்டி(Singularity)என்ற ஒருமை புள்ளியில் இருந்து வெடித்து துவங்கியது இந்த பிரபஞ்சம். அந்த வெடிப்பு கணத்தின்போது தான் காலமும், இடமும் பிறந்தன. அதற்கு முன்மேட்டர் / என்டி மேட்டர் இரண்டும் சம அளவில் இருந்து பாலன்ஸ் செய்துகொண்டனவாம்.
                            அந்த ஒருமை புள்ளி கணத்தில் இருந்து வெடித்து சிதறி இன்றும் ஒரு ஊதப்படும் பலூன் போல இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே போகிறது.அந்த ஒருமை புள்ளி கணத்திற்கு முன் 'ஒன்றுமே' இல்லை. காலம், இடம் இரண்டும் இல்லை. அவை இரண்டும் இல்ல நிலை பற்றி புரிந்து கொள்வது மிக கடினம்.அதாவது வெற்றிடமும் இல்லை. 
                        இடமே இல்லா நிலை பற்றி புரிந்து கொள்ள முயற்சிப்போம்.Steven Weinberg's classic "The First Three Minutes." என்ற மிகமுக்கிய புத்தகம் அந்த ஆரம்ப 3 நிமிடங்களை விவரிக்கின்றது.
                     வேறு விதமாக‌ விள‌க்க‌ம் : நாம் முப்ப‌ரிணாம‌ உல‌கில்வாழ்ந்து ப‌ழ‌கிவிட்டோம். நான்காவ‌து ப‌ரிமாண‌ம்(நேர‌ம்) ப‌ற்றி அய்ன்ஸ்டினின் ரிலெடிவிட்டி திய‌ரி பேசுகிற‌து.ந‌ம்மால் க‌ற்ப‌னை செய்து புரிந்து கொள்வ‌து க‌டின‌ம்.ஒரு இர‌ண்டு ப‌ரிமான‌ உல‌கை க‌ற்ப‌னை செய்து கொள்ளுங்க‌ள் : அதாவாது ஒரு மிக‌ப்பெரிய‌ த‌ட்டையான‌ மேஜைதான் உல‌க‌ம். அதில் இர‌ண்டு ப‌ரிமாணங்க‌ளே உள்ள‌ கோடு,வட்ட‌‌ம், செவ்வ‌க‌ம், சதுரம் போன்ற 'ஜீவன்கள்' வாழ்வதாக வைத்துக்கொள்வோம். அவை நீளம், அகலம் என்ற இரண்டே பரிமாணங்களைத்தான் அறியும், புரிந்து கொள்ளும்.அவைகளிடம் உயரம் என்ற மூன்றாவது பரிமாணம் ஒன்று உள்ளது. 
                          மூன்று பரிமானங்கள்உள்ள உலகில் உருண்டை, ப்ரிஸம், உருளை போன்ற 'ஜீவன்கள்' எடை மற்றும்அடர்த்தியுடன் வாழ்கின்றன என்று விளக்க முயற்ச்சித்தால், அந்த இரு பரிமாண'ஜீவன்களுக்கு' புரியாது அல்லவா. அதே போல்தாம் மனிதர்களுகு நான்காவது பரிமாணம்பற்றி கற்பனை செய்வது இயலாது..அதே போல்தான் சிங்குலாரிட்டி எனப்படும் ஒருமைபுள்ளி என்ற ஆரம்ப கணத்தின் முன்'ஒன்றுமே' இல்லா நிலை. 
             காலமும், இடமும் இல்லா நிலை.ஹப்புள் என்ற விஞ்ஞானி ரெட் ஷிஃப்ட் என்ற விசயத்தை கண்டுபிடித்தார்.அதவாது நம் புமியிலிருந்து ஒரு காலக்ஸி எத்தனை துரத்தில் உள்ளதோ அந்த தூரத்திற்கு நேர்விகிதத்தில் அவற்றின் (ப‌ரபஞ்சத்தின்மைப் புள்ளியிலிருந்து விரிவடையும்) விலகிச் செல்லும் வேகம் உள்ளது.அதிலிருந்து வெளிப்படும் ரேடியோ கதிர்வீச்சு அகச்சிவப்பு கதிர்களின் அலகைநோக்கின் 'நகர்ந்துள்ளது'.
                       1964இல் பென்ஸியாஸ், வில்சன் என்ற இரு விஞ்ஞானிகள் 'காஸ்மிக்பாக்கரவுண்ட் மைக்ரோவேவ் ரேடியேஸன்' (Cosmic microwave backgroundradiation)என்ற பிரபஞ்சம் முழுவதும் விரவியிருக்கும் சிற்றலை (ஒரு வகைவெப்ப அலை)பற்றி எதேச்சையாக கண்டுபிடித்தனர். அதற்காக நோபல் பரிசுவென்றனர். அந்த கண்டுபிடிப்பு பிக் பாங் தியரியை உறுதி செய்தது. ஆரம்ப கணவெடிப்பு சிதறல் போது உருவான வெப்ப அலைகளின் தற்போதைய வடிவம் பிரபஞ்சம்முழுவதும் சம அளவில் பரவி உள்ளது.
                              ஒரு சிங்குலாரிடியிலிருந்து வெடித்து விரிவடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் பெருவெடிப்புக்கொள்கையின் எந்த சாயலும் இல்லாத மேற்கண்ட இரண்டு தகவல்களும் இன்னொன்றையும் தெளிவாக்குகிறது. வானமும் பூமியும் முன்னர் இணந்திருந்தது . இப்போது பிரிந்திருக்கிறது என்பதை மேற்கண்ட தகவல்களின் மூலம் அறியலாம். 
                       ஆனால் வானம் என்பது மேலே தெரியும் நீல நிற பின்னணி மட்டுமல்ல எந்தக்கோளின் எல்லையிலிருந்தும் வானம் தொடங்கிவிடுகிறது. இன்னும் தெளிவாகச்சொன்னால் சூழ இருக்கும் வானத்தில் கோள்கள் குறை மூழ்கலில் கிடக்கின்றன. அதாவது நீர் நிரப்பிய பாத்திரத்தில் ஒரு பந்து முழுவதும் மூழ்கி தரை தட்டிவிடாமலும் நீரின் மேற்பரப்பில் மிதக்காமலும் நடுவில் இருப்பதைப்போல் கோள்களின் பூமியின் அனைத்து திசைகளிலும் வானம் சூழ்ந்திருக்கிறது.

                          பூமி உள்ளிட்ட கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை பிரபஞ்சத்தில் எப்படி பிறந்தன என்பது குறித்து அறிந்து கொள்ள உலகில் உள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டது மிக சிறிதளவே. எனவே, மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
                     இதன் ஒரு பகுதியாக, அணுவை மோத விட்டு பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தை அறியும் மிகப்பெரிய முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இவர்களுக்கு உதவியாக இந்தியா, கனடா, சீனா உள்ளிட்ட விஞ்ஞானிகளும் பணியாற்றினர். இதற்காக, சுவிட்சர் லாந்தில் ஜெனீவா நகருக்கு வெளியே 45 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் “செர்ன்’ என்ற இயற்பியல் சோதனைக்கூடம் அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் சிகாகோ நகருக்கு அருகேயும் இதே போன்று சிறியளவில் “டெவட்ரான்’ என்ற இயற்பியல் சோதனை கூடம் அமைக்கப்பட்டது. சோதனைக்கூடத்தில் அணு உற்பத்தி செய்யும் இயந்திரம் மிகுந்த பாதுகாப்புடன் வைத்து, உற்பத்தி செய்யப்பட்ட அணுக்கள் பலமுறை சுற்றி அதிக திசைவேகத்துடன் ஒன்றின் மீது ஒன்று மோதும் படி செய்து, ஏற்படும் விளைவுகள் குறித்து அறிந்து கொள்வதால் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்ற ரகசியம் வெளிவரும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.
                        சுவிஸ் – பிரான்ஸ் எல்லையில் பூமிக்கடியில் “ஜீரோ’ டிகிரி வெப்பநிலையில் சுரங்க அமைப்பில் கட்டப்பட்ட பரிசோதனை கூடத்தில் முதல் வெடிப்பு நடத்தப் பட்டது. 27 கி.மீ., தூரத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு முனைகளிலிருந்து மின்காந்த விசையின் மூலம் சுழற்றி அனுப்பப்பட்ட புரோட்டான்கள் மிக வேகமாக வந்து மோதின. அப்போது மனிதனால் உருவாக்கப்பட்ட மிகச்சிறிய அணுவிலிருந்து 7 டிரில்லியன் “எலக்ட்ரான் ஓல்ட்’ ஆற்றல் ஏற்பட்டது. “செரன்’ அமைப்பின் தலைவர் ரால்ப்ஹியூர் கூறுகையில், “பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து கண்டறிவதில் விஞ்ஞானிகள் சிறிதளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர். இது பாராட்ட வேண்டிய, மகிழ்ச்சியான செய்தி.

                          இங்கு அமைக்கப் பட்டுள்ள இயந்திரம் விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்துள்ளது. மேலும், இரண்டு வித்தியாசமான அணுக்கள் மோதும் போது தோன்றும் அதிக சக்தியை அறிந்து கொள்ள, தற்போது உள்ளதை விட நவீன இயற்பியல் சோதனைக்கூடம் தேவை. சமீபத்தில் நடந்த சோதனைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து “செரன்’ தலைவர் ரால்ப்ஹியூர் வெளியிட்ட முடிவுகளை பாரிஸ் நகரில் நடந்த “இயற்பியல் உயர் சக்தி’ என்ற சர்வதேச மாநாட்டில் குழுமியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்பியல் விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர்.தற்போதுள்ள சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் செய்த சோதனையில் பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து ஒரளவிற்கு தெரிந்தது கொள்ள முடிகிறது. ஆயிரத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெரு வெடிப்பு காரணமாக பிரபஞ்சம் பிறந்தது என்பதை கொள்கையளவில் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். 
                                     அடுத்ததாக 57 ஆயிரத்து 825 கோடி ரூபாய் செலவில் 50 மைல் நீளத்திற்கு சர்வதேச இயற்பியல் கூடம் அமைத்து சோதனைகள் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. இந்த சோதனை சர்வதேச ஒத்துழைப்புடன் செய்யப்படும். “செரன்’ சோதனை கூடத்தின் நோக்கம் உயர் சக்தி குறித்த ஆய்வு. ஆனால், ஹம்பர்க்கில் துவக்கப்படவுள்ள சர்வதேச பரிசோதனை கூடம் அதிக தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும்’ என்றார்.“கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பரில் அணுக்கள் மோதும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், சில பிரச்னைகள் ஏற்பட்டதால் அது நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின், வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அது முதல் வெற்றி தான் தொடர்கிறது. 
                           முன்பு புரோட்டான்களுக்கிடையே மோதல் ஏற்பட வைத்து சோதனை செய்யப்பட்டது. ஆனால், சர்வதேச பரிசோதனை கூடத்தில் இனி நடைபெறவுள்ள சோதனையின் போது, எலக்ட்ரான் மற்றும் பாசிட்ரான் எதிரெதிரானவைகளை மோத விட்டு நடைபெறும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்’ என்கிறார் அணு இயற்பியல் அறிஞரான கே வார்ம்செர்.
   அறிவியலறிஞர்களுக்கு பாராட்டு தெரிவிப்போம்.நாமும் அறிந்து கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக