ஞாயிறு, 27 அக்டோபர், 2013

பிரபஞ்ச பொருட்களின் தோற்றம்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
அனைவருக்கும் அறிவியல் வலைப்பதிவுக்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              இப்போது பிரபஞ்சத்தில் முதன்முறையாக, தளதளவென கண்ணுக்குப் புலப்படும் ஒளி தெரிந்தது. இந்த அதி சுதந்திர நுண்ஒளி ஆனது இன்று நாம் பிரபஞ்ச (Cosmic) நுண்அலைகளின் பின்னணியில் காணலாம். 
               முதல் 100 கோடி ஆண்டுகளில் அகிலம் தொடர்ந்து விரிவாகி இன்னும் கொஞ்சம் வெப்பம் தணிய, பருப்பொருட்கள், ஈர்ப்பு விசையினாலே பெரும்திரளாகக் குவிந்து இன்று நாம் அண்டங்கள் (Galaxies) என்று சொல்லும் நிலையை அடைந்தது. இப்படி நூற்றுக்கும் அதிகமான பல லட்சக்கணக்கான (பில்லியன்) அண்டங்கள் உருவாகி அதில் ஒவ்வொன்றிலும் பல லட்சக்கணக்கான எண்ணிக்கையில் ஆன நட்சத்திரங்களைக் கொண்டிருந்தது. 
                    இந்நட்சத்திரங்களின் உள்ளகத்தில் வெப்பம்சார்ந்த அணுப்பினைவுகள் நடந்துகொண்டு இருந்தது. நம் சூரியனைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமான அடர்த்தியும் பருமனும் கொண்டிருந்த இந்த நட்சத்திரங்களில் போதுமான அழுத்தமும் வெப்பமும் அதன் உள்ளகத்தில் (Core) உருவாகி அந்த நட்சத்திரங்களில் அதிகமாக இருந்த ஹைட்ரஜனைக் காட்டிலும் பளு நிறைந்த 12 வேறு தனிமங்களைத் தயாரித்தது. இந்த 12 வேறுபட்ட தனிமங்களே கிரகங்களையும் அதன்மேல் உயிரினத்தையும் இயற்ற வழிவகுத்தது. இந்தத் தனிமங்கள் வரவிருக்கும் எல்லாத் தொல்லைகளுக்கும் காரணமாக இருந்தது. 
                இந்த மாபெரும் நட்சத்திரங்கள் பயங்கரமாக வெடித்து அதன் வேதியியலாக செறிவூட்டப்பட்ட ஆண்மையை (தனிமங்களை) அண்டமெலாம் சிந்தச் (சிதறச்) செய்தது. இப்படிச் செறிவூட்டப்பட்டு சிந்தியவற்றில் இருந்து அவ்வளவாக கௌரவிக்கபடாத ஒரு நட்சத்திரம் (நம் சூரியன்) கத்தி உடைய மனிதனின் கை போன்று அமைப்புடைய விண்மீன் கூட்டத்தின் ஒரு பகுதியில், பால்வெளி என்ற அண்டத்தின் ஒரு மினுமினுக்கும் வைரமாக, பேரண்டத்தின் ஒரு மூலையில் (கன்னி என்று அழைக்கபடுகிற பிரபஞ்சத்தின் மேம்பட்ட நட்சத்திரக் கூட்டத்தின் புறஎல்லையில்) மின்னியது.
            எந்த வாயுக்களின் மேகத்தில் இருந்து நம் சூரியன் பிறந்ததோ அதிலேயே 9 கிரகங்களும் ஆயிரக்கணக்கான வால் நட்சத்திரங்களும் கோடிக்கணக்கான விண்கற்களை பெற்றெடுப்பதற்கான கடினமான தனிமங்களும் சூல் கொண்டு இருந்தது. இந்த நட்சத்திர முறை உருவான சமயத்தில் குறிப்பிடத் தக்க அளவிலான பருப்பொருட்கள் வெகுவாக சுருக்கப்பட்டு முதன்மை வாயுக்களின் மேகத்தில் இருந்து- அதாவது உருவான சூரியனைச் சுற்றிக்கொண்டிருந்த பளு மிகுந்த மேகத்தை விட்டு வெளியே வீசி எறியப்பட்டது. இது போன்று எறியப்பட்டவைகள், சூரியன் உருவாகி மீதம் இருந்த கழிவுகளே எனக் கொள்ளலாம். 
                     இந்தக் கழிவுகள் அதிவேகமான வால்நட்சத்திரங்களாகவும் விண்கற்களாகவும் பல நூறு லட்சம் ஆண்டுகள் வானில் ஒன்றுடன் ஒன்று மிதமிஞ்சிய வேகத்தில் மோத, உருகிய நிலையில் ஆன பாறைக் கோளங்கள் உருவாகி கிரகங்களின் அடிப்படைக் கட்டுமான வேலைகள் மின்னல் வேகத்தில் தயாரானது. இந்தக் கழிவுப் பொருள்களின் அளவு குறையக் குறைய, கிரகங்களின் மீது இவைகள் மோதுதலும் குறைய ஆரம்பிக்க, கிரகங்களின் சூடும் குறையத் தொடங்கியது

                         பூமி என்று நாம் குறிப்பிடும் ஒன்று; அதன் கடலானது நீர்த் தன்மையில் இருக்கும் வண்ணமான சூரிய மண்டலத்தின் சரியான பகுதியில் மேற்சொன்ன நிகழ்வின் முடிவில் அமையப்பெற்று இருந்தது. இந்த பூமி சூரியனுக்கு இன்னும் கொஞ்சம் அருகில் போயிருந்தால் இந்த நீர்த் தன்மை கடலானது ஆவியாகி வறண்ட பாலைக்கிரகம் எனப் பெயர் பெற்று இருக்கும். அதுபோல் இல்லாமல் பூமி இப்போது இருக்கும் இடத்தைவிட்டு இன்னும் சற்று பின்னால் அமைய நேர்ந்து இருந்தால் அதில் இருக்கும் கடல் உறைந்துபோய் பனிக்கிரகம் ஆகி இருக்கும். இதில் எது நடந்து இருந்தாலும் நாம் இன்று அறிந்து இருக்கிற உயிரினங்கள் உருவாகி இருக்காது. 
                             இந்த நீர்க் கடலினில் இருந்த செழிப்பான வேதியியலால் நாம் இது வரை அறிந்து கொள்ள முடியாத நுட்பத்தின் விளைவால் எளிமையான மற்றும் பிராண வாயு தேவைப்படாத பாக்டீரியாக்கள் கிளம்பி, அன்று பூமியின் முக்கியமான அல்லது இது  மட்டுமே இருந்த கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) சுற்றுப்புறத்தை போதுமான அளவுக்குத் தேவையான பிராண வாயு (ஆக்ஸிஜன்) கொண்ட சூழ்நிலைக்கு மாற்றியது. இதனால் பிராண வாயு தேவைப்படும் ஜீவராசிகள் தோன்றி கடலையும் மண்ணையும் ஆதிக்கம் செய்ய ஆரம்பித்தன. 
           இதே சாதாரணமாக இரட்டை அணுக்களாகக் (O2) காணப்படும் ஆக்ஸிஜன் ஆனது மூன்றாகச் (O3) சேர்ந்து ஓசோன் எனப் பெயர் பெற்று பூமியின் மேல் வளிமண்டலத்தில் குடிகொண்டு நம்மை, சூரியனில் இருந்து வரும் பூமியின் மூலக்கூறுகளுக்கு விரோதமான புற ஊதாக் கதிர்களில் இருந்து காத்தும் வருகிறது. 
                    பூமியில் உள்ள விதவிதமான உயிரினங்களும் நாம் இந்தப் பிரபஞ்சத்தில் வேறெங்கேனும் இருக்கலாம் என்று நினைத்துகொண்டிருக்கும் உயிரினங்களும் பரமாகாசத்தில் மிகுதியாக உள்ள கார்பனுக்கும் அதனில் இருந்து உருவான எண்ணில் அடங்கா எளிய மற்றும் சிக்கலான மூலக்கூறுகளுக்கும் நன்றிக்கடன் பட்டவைகளாக உள்ளன.நிறைய விதமான கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகள் இருக்கும் போது எப்படி நீங்கள் மற்ற ஒட்டுமொத்த மூலக்கூறுகளை விவாதிக்கப் போகிறீர்கள்?ஆனால் வாழ்க்கை நொறுங்கிவிடக்கூடியது. வெகுமுன்னர் விண்கற்கள் பூமியை விட்டு விட்டு தாக்கி, அதன் சூழ்நிலை அமைப்பை சேதாரம் செய்தது அல்லது மாற்றி அமைத்தது. இந்த விண்கற்கள், 
            சூரியனும் மற்ற கிரகங்களும் உருவாகி மீதம் இருந்த அணுக்கள். வெறும் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் (பூமியின் இதுவரை வாழ்நாள் காலத்தில் 2 சதவிகிதத்துக்கும் குறைவு அது) ஒரு 10000 கோடி டன் எடை கொண்ட பெரு விண்கல் ஒன்று Yucatan Peninsula-வில் விழுந்தது.அதன் காரணமாக அன்று பூமியில் இருந்த 90 சதவிகித விலங்குகளும் தாவரங்களும் அழிந்தது. அதில் அழிந்தவை தான்  நிலவாழ் விலங்குகளாக இருந்த டினோசர்களும். 
             இப்படி நேர்ந்த சூழ்நிலையியல் துன்பத்தால் டினோசர்களின் இடத்தை அன்று தப்பித்த பாலூட்டிகள் எடுத்துக்கொள்ள வழி பிறந்தது. இந்தப் பாலூட்டிகளில் ஒரு கிளையாக பெரிய மூளையுடன் ஒன்று இருந்தது. அது கூட்டம் கூட்டமாக வாழும் விலங்கினமாக இருந்து, ஹோமோ சாபின்ஸ் என்கிற ஒரு வகை மனித இனமாக உருவெடுத்து, அது அறிவு என்ற ஒன்றினை பெருக்கி அறிவியல் முறைகளையும் கருவிகளையும் கண்டுபிடித்து, வான் இயற்பியலையும் கண்டுபிடித்து, பிரபஞ்சத்தின் ஆரம்பத்தையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் ஊகித்து உணரத் தொடங்கியது.
                       ஆம், பிரபஞ்சத்திற்குத் தொடக்கம் உண்டு! ஆம், பிரபஞ்சம் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைகிறது! ஆம், நம் ஒவ்வொருவருடைய உடம்பின் அணுக்களையும் பிரபஞ்சத்தின் தொடக்கமான பெருவெடிப்பின் உள்ளேயும், மாபெரும் நட்சத்திரங்களின் உள்ளக அதிவெப்ப அணுக்கரு உலைகளிலும் துப்பறியலாம்! நாம் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிறோம் என்பது மட்டும் உண்மை இல்லை, அதன் ஒரு பகுதியாகவும் இருக்கிறோம் என்பதே அதி உண்மை. நாம் பிரபஞ்சத்தில் இருந்து பிறந்தோம். இன்னும் நீங்கள் சொல்லலாம், பிரபஞ்சம் தன்னை வெளிப்படுத்த நமக்கு அதிகாரமும் ஆற்றலும் தந்துள்ளது என்பதையும்; நாம் இப்போதே தொடங்கி இருக்கிறோம், எல்லை இல்லா பயணத்தை என்பதையும்!

               அந்த அடிப்படையில் இப்பிரபஞ்சப் பொருட்களின் தோற்றம் எப்படித் தோன்றியது? என்று பல்வேறு அறிஞர் பெருமக்கள் தமது ஆராய்ச்சி மூலம் கருத்துகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.பிரபஞ்சம் உருவான கட்டத்தில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அப்படி ஏற்பட்ட வெடிப்பின் மூலம் சிதறி ஓடப்பெற்ற பொருட்கள் இந்த நிமிடம் வரை விண்வெளியில் தொடர் ஓட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார் பெல்ஜிய வான ஆராய்ச்சியாளர் ஷேர்த் லேமாத்ரே (Georges Lemaitre) என்ற அறிஞர்.
                 நினைத்துப் பார்க்க முடியாத அழுத்தத்தில்; அதாவது, ஒரு தேக்கரண்டி அளவுள்ள பொருள் கிட்டத்தட்ட 10 கோடி டன் எடையுள்ளதாக இருந்தால் எந்த அளவுக்கு அழுத்தம்  நிறைந்திருக்குமோ அந்த அளவு திணிவு கொண்ட பொருளாக இருந்து, “பெரும் டமார்” என்ற சத்தத்துடன் வெடித்துச் சிதறியிருக்க வேண்டும்; என்று கூறும் அவர்,இந்நிகழ்வு ஏற்பட்டு கிட்டத்தட்ட எழுநூறு கோடி ஆண்டுகள் கடந்திருக்கும் என்கிறார்.
            பிரபஞ்சம் மேலும் மேலும் பெரிதாகி வரும் நிகழ்வினை கவனிக்கிற போது, அது புறப்பட்ட ஆரம்பம் என்று ஒன்று இருந்து அதிலிருந்து தொடர் ஓட்டமாக விரிந்துகொண்டே செல்கிறது என்று கூறுகிறார்.பிரபஞ்சம் உருவாகி எழுநூறு கோடி ஆண்டுகள் இருக்கலாம், என்ற இக்கருத்தில் சில தவறுகள் தொக்கிக் கொண்டிருக்கின்றன.திணிவு மிக்க மொத்த உருவம் ஒன்று வெடித்துச் சிதறி, ஓடியதின் தொடரில் தான் பிரபஞ்சப் பொருள் அனைத்தும் உருவாகியிருக்க வேண்டும் என்ற இக்கருத்து அமெரிக்கப் பவுதீக விஞ்ஞானி ஜார்ஜ் காமோவ் (George Gamow) என்பவரும் ஒப்புக்கொள்கிறார்.
       இன்று காணப்படும் பிரபஞ்சப் பொருள் அனைத்தும் அடர்த்திக்கொண்ட மொத்தையாக ஒரு கட்டத்தில் இருந்திருக்கிறது.இந்த மொத்தை 2500 கோடி டிகிரி பாரன்ஹைட் வெப்பத்தில் வெடித்துச் சிதறியிருக்கிறது.வெப்ப நிலை 50 லட்சம் டிகிரி பாரன்ஹைட்டாகக் குறைந்து மூலகங்கள் உருவாகி இருக்கிறது.
             வாயு நிலையில் இந்த பொருட்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, ஈர்த்து, முகில்களாகப் பிரியச் செய்து நட்சத்திரங்களாகவும், கிரகங்களாகவும் உருப்பெற்றிருக்கின்றன என்ற இக்கருத்தை ஜார்ஜ் காமோவும் ஒப்புக்கொள்கிறார்.
                 பெரும் பிண்டம் வெடித்துச் சிதறியதன் மூலம் அண்டங்கள் விரிவடைகின்றன என்ற கருத்தை ஒப்புக் கொள்வதாக இருந்தால், வெடித்துச் சிதறியதற்கு முந்தைய கட்டம் மற்றும் ஆரம்ப இடம் எங்கிருக்கிறது என்ற வினா எழுகிறது.நட்சத்திரங்களாகவும், கிரகங்களாகவும் உருப்பெற்றிருக்கலாம் என்ற கருத்தை முன் வைக்கின்றனர்.அறிவியல் வளர்ச்சியின் வேகம் புதிர்களுக்கு விடை காண்பதுதான் என்பதிலே பெருமை கொள்வோம்.

                         நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பெருவெடிப்பு எனும் நிகழ்விலிருந்து துவங்கியதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். விண்மீன்கள், கோள்கள், துணைக்கோள்கள், விண்கற்கள், எரிமீன்கள், கருந்துளைகள், நெபுலாக்கள், பால்வீதிகள் என்று எண்ணிலடங்கா பொருட்கள் எண்ணிலடங்கா எண்ணிக்கையில் நிறைந்துள்ள  இந்த பிரபஞ்சத்தின் மொத்த அளவு தற்போதைய அளவுகோல்களின் படி 2500 கோடி ஒளியாண்டுகள். 
                                  ஒரு ஒளியாண்டு என்பது ஒளியானது தொடர்ந்து ஒரு ஆண்டு பயணம் செய்தால் எவ்வளவு தூரம் பயணப்பட்டிருக்குமோ அவ்வளவு. ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிமீ. இவ்வளவு வேகம் கொண்ட ஒளி ஒருமுனையிலிருந்து மறுமுனையை அடைய 2500 கோடி ஆண்டுகள் ஆகும் என்றால் நம் பிரபஞ்சத்தின் அளவுகளை நீங்கள் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த அளவு இப்படியே இருக்குமா? அல்ல இன்னும் விரிந்து கொண்டிருக்கிறது. 
                       இந்த பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒரு ஒருமையிலிருந்து வெடித்துப்பரவியதில் தொடங்கியது, அதைத்தான் பெருவெடிப்பு கொள்கை என்கிறார்கள்.  
     அதிசயமாக இருக்கிறதல்லவா? இன்னும் தொடரும்............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக