மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
அனைவருக்கும் அறிவியல் -வலைப்பக்கத்திற்கு தங்களை உவகையோடு வரவேற்கிறோம்.மனிதன் தோன்றிய வரலாறு பற்றி காண்போம்.
மனிதர் இருகால் உயர் விலங்கினத்தைச் சேர்ந்த, ஹொமினிடீ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இனமாகும். மரபணுச் சான்றுகளின்படி தற்கால மனிதன் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன், ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. மனிதர்களுக்கு மிகவும் வளர்ச்சியடைந்த மூளை உண்டு. இது, பண்பியல் பகுப்பாய்வு (abstract reasoning), மொழி, உண்முக ஆய்வு, பிரச்சைனைகளைத் தீர்த்தல், உணர்வுகள் போன்றவற்றைக் கையாளக்கூடிய வல்லமை கொண்டது. இத்தகைய வல்லமை கொண்ட மூளையும், நிமிர்ந்த உடலும் மனித வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. நிமிர்ந்த உடலினால் முன்னுறுப்புக்கள் (கைகள்) இரண்டும், வேறு வேலைகளைச் செய்வதற்குக் கிடைத்தன. இதனால் மனிதர்கள், கருவிகளை வேறெந்த உயிரினத்தைக் காட்டிலும் சிறப்பாகப் பயன்படுத்தக் கூடியதாக அமைந்தது. மனிதர்கள் உலகம் முழுதும் பரந்து உள்ளனர். அன்டார்க்டிக்கா தவிர்ந்த ஏனைய எல்லாக் கண்டங்களிலும் மனிதர் பெருந் தொகையாக வாழ்கின்றனர்.
ஜூலை 2008 நிலைப்படி, 6.7 பில்லியனுக்கு மேற்பட்டதொகையில் மனிதர்கள் உலகில் வாழ்கின்றனர். மனிதரில், ஹோமோ சப்பியென்ஸ் சப்பியென்ஸ் என்னும் ஒரு துணையினம் மட்டுமே உள்ளது.
பெரும்பாலான உயர்நிலை உயிரினங்களைப் போலவே, மனிதனும் ஒரு சமூக விலங்கு. மனிதர் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளல் என்பவற்றுக்காகவும் தொடர்பு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். மனிதர்கள் பல சிக்கலான சமூக அமைப்புக்களை உருவாக்கியுள்ளனர். இவற்றுள் குடும்பங்கள் தொடக்கம் நாடுகள் வரையான அமைப்புக்கள் அடங்குகின்றன. மனிதர்களிடையேயான சமூகத் தொடர்புகள், பெருமளவுக்கு வேறுபடுகின்ற, மரபுகள், சடங்குகள், நெறிமுறைகள், விழுமியங்கள், சமூக நெறிகள், சட்டங்கள் போன்றவற்றை உருவாக்கியுள்ளன.
மனித உடல் அணுக்களால் ஆனது என்று சொல்வதை விட செல்களால் ஆனது என்று சொல்வது சரியாக இருக்கும்.செல்கள் மூலக்கூறுகளால் ஆனவை.மூலக்கூறுகள் ஒரே மாதிரியான அல்லது வேறு வேறு அணுக்களால் ஆனவை.செல்கள் கட்டிடத்தின் செங்கற்கள் போன்ற்வை.செல் ஒவ்வொன்றும் ஒரு தொழிற்சாலை போன்றது. செல் இயக்கம் குருதி ஓட்டத்தால் வெப்பம்,காற்று,நீர்,மின்சாரம் கிடைக்கப்பெற்று அதனதன் பணிகளை செய்துவருகிறது-
மனிதன் உடலில் 6284 தடவை நோய் தாக்கும்:
ஆய்வில் தகவல் இங்கிலாந்தில் உள்ள ஒரு இணைய தளம் மனி தர்களின் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. 3 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள் முடக்கு வாதம் போன்ற உடல் வலி நோயினால் அவதிப்படுவது தெரிய வந்தது. இது ஒருவரை ஆண்டுக்கு 19 தடவை பாதிக்கிறது. ஆயுளில் 1492 முறை இந்த நோயினால் அவதிப்படும் வாய்ப்பு உள்ளது.ஆயுளில் 1256 தடவை தலைவலியாலும் 1099 முறை முதுகுவலியாலும் அவதிப்படுகின்றனர்.707 தடவை தசை பிடிப்பினாலும் கண் எரிச்சல், மார்பு எரிச்சல் உள்ளிட்ட பல நோய்களினால் 6284 தடவையும் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வு தெரிவிக்கிறது.
இருந்தும் மனிதனின் சராசரி ஆயுள் 78.5 வயது இருக்கும் என்றும் இந்த ஆய்வு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக