மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
அனைவருக்கும் அறிவியல்- வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.இந்த பதிவில் வால் நட்சத்திரம் பற்றி தெரிந்துகொள்வோம்.
பெயர் தான் வால் நட்சத்திரமே தவிர அது நட்சத்திரமே அல்ல., வால் நட்சத்திரங்கள் கிரகங்களைப் போன்றவை. பூமி, செவ்வாய், வெள்ளி, வியாழன், சனி போன்ற கிரகங்கள் சூரியனை சற்றே ஒதுங்கிய வட்டவடிவப் பாதையில் சுற்றுகின்றன.சூரியனுக்கும் ஒரு கிரகத்துக்கும் உள்ள தொலைவு ஓரளவில் நிலையானவை.. ஆகவே இரவு வானில் இவற்றைக் காண இயலும்.
ஆனால் வால் நட்சத்திரங்கள் நீள் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றுகின்றன். கிரகங்களுக்கு சுய ஒளி இல்லை என்பது போலவே வால் நட்சத்திரங்களுக்கும் சுய ஒளி கிடையாது.வால் நட்சத்திரங்களும் சரி, கிரகங்களும் சரி, அவற்றின் மீது சூரிய ஒளி படுவதால் நம் கண்ணுக்குத் தெரிகின்றன.
கிரகங்களுடன் ஒப்பிடுகையில் வால் நட்சத்திரங்கள் வடிவில் சிறியவை. ஒரு வால் நட்சத்திரம் என்பது சிறிய குன்றுகள் என்று சொல்லத்தக்க அளவிலான பெரிய பெரிய பாறாங்கற்கள், சிறு கற்கள், மணல்,உறைந்த வாயுக்கள்,உறைந்த பனிக்கட்டி உருண்டைகள், ஆகியவற்றால் ஆனதே.
ஒரு வால் நட்சத்திரத்தின் குறுக்களவு சில நூறு மீட்டர் அளவில் இருக்கலாம். பல கிலோ மீட்டர் அளவிலும் இருக்கும்.(உதாரணமாக3கி.மீ இருக்கலாம். 300கி.மீட்டரும் இருக்கலாம்.)
இதுவே வால் நட்சத்திரத்தின் தலைப்பகுதியாகும் ( Nucleus).இந்த தலைப் பகுதியைச் சுற்றி சிகை (Coma) அமைந்திருக்கும், இது பஞ்சு மிட்டாய் மாதிரி. நுண்ணிய தூசு, வாயுக்கள் ஆகியவை அடங்கியதாக இருக்கும். இதன் குறுக்களவு பல லட்சம் கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கும். சூரியனை நெருங்கிய கட்டத்தில் தான் சிகை உருவாகிறது. இதன் மீது சூரிய ஒளி படும் போது தான் வால் நட்சத்திரம் பெரிய வடிவைக் கொண்டது போன்று காட்சி அளிக்கிறது.
வால் நட்சத்திரத்துக்கு நிரந்தர வால் கிடையாது.பல நூறு கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் போது அது பெரிதும் பனிக்கட்டி உருண்டைதான். சூரியனை நோக்கிக் கிளம்பி பெரும்பாலான தூரம் வந்ததற்குப் பிறகு தான் வால் நட்சத்திரத்தின் வால் தோன்ற ஆரம்பிக்கிறது.
சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க துகள்களின் விளைவாகவே வால் நட்சத்திரத்துக்கு வால் முளைக்கிறது. சூரியனின் இத் துகள்கள் Solar Wind என்று அழைக்கப்படுகின்றன். இவை கிரகங்களையும் தாக்குகின்றன. வால் நட்சத்திரங்களையும் தாக்குகின்றன.
(
சூரியனின் இத் துகள்களின் தாக்குதலால் வால் நட்சத்திரத்திலிருந்து
வாயுக்களும், மிக நுண்ணிய துகள்களும் டன் கணக்கில் வெளிப்பட்டு பின்
நோக்கித் தள்ளப்படுகின்றன. இதுவே வால் போல அமைகிறது.விண்வெளியில் மிகத் தொலைவில் இருக்கும் போது வால் நட்சத்திரம் ஒழுங்கற்ற
உருண்டையாகத் தான் இருக்கும். சூரியனை நெருங்க நெருங்க சூரியனின் வெப்பம்
காரணமாகவும் சூரியனிலிருந்து வெளிப்படும ஆற்றல் மிக்க துகள்கள் காரணமாகவும்
வால் நட்சத்திரத்திலிருந்து மேலே கூறிய வகையில் நுண்ணிய பொருட்கள்
வெளிப்பட்டு வால் தோன்றும்.)
வால் நட்சத்திரத்தின் வால் விஷயத்தில் ஒரு விசித்திர அம்சம் உண்டு. சூரியனை நோக்கி வரும் போது வால் நட்சத்திரத்தின் தலை முன்னே இருக்க வால் பின்னே இருக்கும். சூரியனை சுற்றி முடித்த பின்னர் வால் முன்னே செல்ல தலை பின் தொடர்ந்து செல்லும்.
சூரிய ஒளி பட்டு இது நீண்ட வால் போல் காட்சி அளிக்கிறது. வால் நட்சத்திரத்தின் வால் பகுதி பல கோடி கிலோ மீட்டர் நீளத்துக்கு இருக்கலாம்.சொல்லப் போனால்
வால் நட்சத்திரத்துக்கு இரண்டு வால்கள் உண்டு. ஒன்று தூசு அடங்கிய வால். மற்றொன்று வாயுக்களால் ஆன வால். இரண்டிற்கும் மேலும் வால் பகுதிகள் இருக்கலாம்.
.
வால் நட்சத்திரங்கள் ஒவ்வொரு தடவையும் சூரியனை நோக்கி வருகையில் சூரியத் துகள்களின் தாக்குதலால் கணிசமான அளவில் பொருளை இழக்கின்றன. . ஆகவே பல தடவை வந்து சென்ற ஒரு வால் நட்சத்திரம் இளைத்துக் காணப்படும்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை வால் நட்சத்திரங்கள் மன்னர்களையும் மக்களையும் பயமுறுத்தின. வானில் வால் நட்சத்திரம் தோன்றினால் மன்னரின் உயிருக்கும் பதவிக்கும் ஆபத்து நேரும் என்ற மூட நம்பிக்கை நிலவியது. வால் நட்சத்திரம் தோன்றினால் உலகமே அழிந்து விடலாம் என மக்களும் அஞ்சினர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த மூட நம்பிக்கை நிலவியது.
பொதுவாக வால் நட்சத்திரங்கள் சூரிய மண்டல எல்லைக்கு அப்பால்
(சூரிய மண்டலத்திலிருந்து oort cloud ஆரம்ப எல்லைக்கு உள்ள தூரம் 1000-2000au-ஒரு au என்பது 149597870.691கிமீ.இது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் ஆகும்.)
ஊர்ட் முகில்(oort cloud) எனப்படும் பகுதியிலிருந்து வருகின்றன. இவை கிரகங்களைப் போலவே சூரிய குடும்பத்தைச் சேர்ந்தவை. கிரகங்கள் சூரியனை வட்ட வடிவப் பாதையில் சுற்றுகின்றன. வால் நட்சத்திரங்கள் நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்றன.
பல வால் நட்சத்திரங்கள் திரும்பத் திரும்ப தலை காட்டிச் செல்லும்.
(எந்த ஒரு வால் நட்சத்திரமும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும்
தலை காட்டும்.)
அதற்கு ஓர் உதாரணம், Halley's Comet என்ற ''ஹாலி'' வால் நட்சத்திரம் ஆகும். அது 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து செல்வதாகும். 1680 ஆண்டு வால் நட்சத்திரத்தின் பாதையை நிபுணர்கள் கணக்கிட்ட போது அது 575 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைகாட்டலாம் என்று கருதப்பட்டது.
ஐசான் வால்நட்சத்திரம் பற்றிய ஒரு அறிமுகம்.
(1) தற்போது காண இருக்கும் ISON என்ற புதிய வால் நட்சத்திரம் 2012ஆம் ஆண்டில் மிகத் தொலைவில் வியாழன் கிரகத்துக்கு அப்பால் இருந்தபோதே ரஷியாவைச் சேர்ந்த விட்டாலி நெவிஸ்கி, ஆர்ட்யோம் நோவிசோனோக் ஆகிய இருவரும் (2012ல்) செப்டம்பர் மாதம்21ம் தேதியன்று இந்த வால்நட்சத்திரத்தை சக்திமிக்க தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளனர். அதாவது 16இன்ச் விட்டமுள்ள Reflector Telescope- (16''பிரதிபலிக்கும் தொலைநோக்கி) மூலம் கண்டறியப்பட்டது.
(2) இந்த வால் நட்சத்திரத்துக்கு C/2012 S 1 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வால் நட்சத்திரத்திற்கு ISON என்ற பெயரும் உண்டு.
அதாவது
C/2012 S 1 -இல் C என்பது காலமுறையற்ற(Non-Periodic) வால்வெள்ளி (COMET)2012 என்பது கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு. Sஎன்பது செப்டெம்பர் மாதம் இரண்டாவது பாதி(Half-Month)அதாவது கண்டுபிடிக்கப்பட்ட தேதி செப்டெம்பர் 21ம் தேதி, 1 என்பதுசெப்டெம்பர் மாதம் இரண்டாவது பாதியில் காணப்பட்ட முதல் வால்வெள்ளி.
இந்த வால் நட்சத்திரத்திற்கு இன்னொரு பெயரான
ISON என்ற பெயர்க்காரணம்-International Scientific Optical Network என்னும் சர்வதேச ஒளி ஊடகக் கூட்டமைப்பு என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால்,அதன் சுருக்கமான ISON என்ற பெயரை வைத்துள்ளனர்.
பெயருக்கான ஆங்கிலமொழி ஆக்கம் காணவும்.
(4) இந்த ISON வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கும்போது அது0.012AU தொலைவில் இருக்கும். இந்த ISON வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்திலிருந்து 110இலட்சம் கிலோமீட்டர் தொலைவிற்கு வரும்.
(5) நவம்பர் மாத வாக்கில் பூமிக்கு அருகில் வரும் ISON
எனப்படும் வால் நட்சத்திரம் யார் கண்ணிலும் படாமல் தப்பாது
என்கிற அளவுக்கு அது பெரியதாக இருக்கும் என்பதுடன் தொடர்ந்து பல
நாட்களுக்கு அது காட்சி தரும். கடந்த 200ஆண்டுகளாக கண்டறிந்த வால் வெள்ளிகள் அதாவது வால் நட்சத்திரங்கள் மீண்டும்,மீண்டும் சூரியனை சுற்றி வந்தவைகளே.ஆனால் ஐசான்வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி வருவது இதுவே முதல்முறையாகும்.
(6)இந்த ISON வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி வருவது மனித குலம் அறிந்தவரை இதுவே முதல் தடவையாகும்.
இது சூரிய குடும்பம் தோன்றிய காலத்திலுள்ள தகவல்களை வைத்திருக்கும்.அதன்மூலம் உலகம் தோன்றியதை பற்றி மேலும் பல புதிய ஆய்வுகளை செய்ய உதவும்., பல புதிய தகவல்களையும் பெறலாம்
(7) இந்த ISON வால் நட்சத்திரம் மற்ற வால் நட்சத்திரங்களைப் போலவே சூரியனை சுற்றி விட்டு வந்த வழியே சென்று விடும்.
(8) இந்த ISON வால் நட்சத்திரம் மீண்டும் தலைகாட்ட பத்து லட்சம் ஆண்டுகள் ஆகலாம்.
(9)இந்த ISON வால் நட்சத்திரம் மிகுந்த பிரகாசத்துடன் தெரியலாம் என்று சொல்வதற்குக் காரணங்கள் உண்டு. இது நவம்பர் வாக்கில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் போது ISON வால் நட்சத்திரத்திற்கும்- சூரியனுக்கும் மிகக் குறைவான தூரமே அதாவது 11 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமே இருக்கும். இதன் காரணமாக ஐஸ் துணுக்குகள், தூசு, வாயு துணுக்குகள் வடிவில் நிறையப் பொருட்களை அது இழக்கும். ஆகவே அது பெரிய நீண்ட வாலைப் பெற்றதாக இருக்கும். ஒப்பு நோக்குகையில் இது பூமிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் .
(10) இந்த ISON வால் நட்சத்திரம்பற்றி வால் நட்சத்திர நிபுணர் ''ஹான் போர்ட்டில்' கூறுகையில் ஒரு வேளை இது 1680 ஆம் ஆண்டில் தலைகாட்டிய வால் நட்சத்திரமாகவும் இருக்கலாம் என்றார்.
(11)இந்த ISON வால் நட்சத்திரம் பற்றிக் குறிப்பிட்ட ஒருசில நிபுணர்கள் அது பற்றிய பெரிய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் போய் முடிவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளனர். அதற்கு உதாரணமாக வானில் பெரிதாக எடுப்பாகத் தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட வால் நட்சத்திரங்கள் கடந்த காலத்தில் மிகச் சிறியதாக ஒளி மங்கியதாகத் தலைகாட்டிச் சென்றுள்ளன.
(12) மிகப் பிரபலமான ஹாலி வால் நட்சத்திரம் 1910 ஆம் ஆண்டில் தலைகாட்டிய போது பிரமிப்பூட்டுவதாக இருந்தது. ஆனால் அது மறுபடி 1986 ஆம் ஆண்டில் தலைகாட்டிய போது முந்தைய அளவுக்குப் பெரிதாக இல்லாமல் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
மின் அலைகள்,ஒளி அலைகள் ஒரு விநாடிக்கு செல்லும் தூரம்=297600கி.மீ.ஆகும்.ஆக ஒரு ஒளிவிநாடி தூரம் இது.அப்படியானால் ஒரு ஒளிஆண்டு என்பது 297600X60X60X24X365=9385113600000 கி.மீ.தூரம் ஆகும். அதாவது 63241.077au ஆகும்.
astronomical unit என்னும் குறியீடான Au என்பது பூமிக்கும் சூரியனுக்கும் தூரம்- இதன் அளவு = 149597870.690கி.மீ.
வணக்கம்.
அனைவருக்கும் அறிவியல்- வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.இந்த பதிவில் வால் நட்சத்திரம் பற்றி தெரிந்துகொள்வோம்.
பெயர் தான் வால் நட்சத்திரமே தவிர அது நட்சத்திரமே அல்ல., வால் நட்சத்திரங்கள் கிரகங்களைப் போன்றவை. பூமி, செவ்வாய், வெள்ளி, வியாழன், சனி போன்ற கிரகங்கள் சூரியனை சற்றே ஒதுங்கிய வட்டவடிவப் பாதையில் சுற்றுகின்றன.சூரியனுக்கும் ஒரு கிரகத்துக்கும் உள்ள தொலைவு ஓரளவில் நிலையானவை.. ஆகவே இரவு வானில் இவற்றைக் காண இயலும்.
ஆனால் வால் நட்சத்திரங்கள் நீள் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றுகின்றன். கிரகங்களுக்கு சுய ஒளி இல்லை என்பது போலவே வால் நட்சத்திரங்களுக்கும் சுய ஒளி கிடையாது.வால் நட்சத்திரங்களும் சரி, கிரகங்களும் சரி, அவற்றின் மீது சூரிய ஒளி படுவதால் நம் கண்ணுக்குத் தெரிகின்றன.
கிரகங்களுடன் ஒப்பிடுகையில் வால் நட்சத்திரங்கள் வடிவில் சிறியவை. ஒரு வால் நட்சத்திரம் என்பது சிறிய குன்றுகள் என்று சொல்லத்தக்க அளவிலான பெரிய பெரிய பாறாங்கற்கள், சிறு கற்கள், மணல்,உறைந்த வாயுக்கள்,உறைந்த பனிக்கட்டி உருண்டைகள், ஆகியவற்றால் ஆனதே.
ஒரு வால் நட்சத்திரத்தின் குறுக்களவு சில நூறு மீட்டர் அளவில் இருக்கலாம். பல கிலோ மீட்டர் அளவிலும் இருக்கும்.(உதாரணமாக3கி.மீ இருக்கலாம். 300கி.மீட்டரும் இருக்கலாம்.)
இதுவே வால் நட்சத்திரத்தின் தலைப்பகுதியாகும் ( Nucleus).இந்த தலைப் பகுதியைச் சுற்றி சிகை (Coma) அமைந்திருக்கும், இது பஞ்சு மிட்டாய் மாதிரி. நுண்ணிய தூசு, வாயுக்கள் ஆகியவை அடங்கியதாக இருக்கும். இதன் குறுக்களவு பல லட்சம் கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கும். சூரியனை நெருங்கிய கட்டத்தில் தான் சிகை உருவாகிறது. இதன் மீது சூரிய ஒளி படும் போது தான் வால் நட்சத்திரம் பெரிய வடிவைக் கொண்டது போன்று காட்சி அளிக்கிறது.
வால் நட்சத்திரத்துக்கு நிரந்தர வால் கிடையாது.பல நூறு கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் போது அது பெரிதும் பனிக்கட்டி உருண்டைதான். சூரியனை நோக்கிக் கிளம்பி பெரும்பாலான தூரம் வந்ததற்குப் பிறகு தான் வால் நட்சத்திரத்தின் வால் தோன்ற ஆரம்பிக்கிறது.
சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க துகள்களின் விளைவாகவே வால் நட்சத்திரத்துக்கு வால் முளைக்கிறது. சூரியனின் இத் துகள்கள் Solar Wind என்று அழைக்கப்படுகின்றன். இவை கிரகங்களையும் தாக்குகின்றன. வால் நட்சத்திரங்களையும் தாக்குகின்றன.
வால் நட்சத்திரத்தின் வால் விஷயத்தில் ஒரு விசித்திர அம்சம் உண்டு. சூரியனை நோக்கி வரும் போது வால் நட்சத்திரத்தின் தலை முன்னே இருக்க வால் பின்னே இருக்கும். சூரியனை சுற்றி முடித்த பின்னர் வால் முன்னே செல்ல தலை பின் தொடர்ந்து செல்லும்.
சூரிய ஒளி பட்டு இது நீண்ட வால் போல் காட்சி அளிக்கிறது. வால் நட்சத்திரத்தின் வால் பகுதி பல கோடி கிலோ மீட்டர் நீளத்துக்கு இருக்கலாம்.சொல்லப் போனால்
வால் நட்சத்திரத்துக்கு இரண்டு வால்கள் உண்டு. ஒன்று தூசு அடங்கிய வால். மற்றொன்று வாயுக்களால் ஆன வால். இரண்டிற்கும் மேலும் வால் பகுதிகள் இருக்கலாம்.
.
வால் நட்சத்திரங்கள் ஒவ்வொரு தடவையும் சூரியனை நோக்கி வருகையில் சூரியத் துகள்களின் தாக்குதலால் கணிசமான அளவில் பொருளை இழக்கின்றன. . ஆகவே பல தடவை வந்து சென்ற ஒரு வால் நட்சத்திரம் இளைத்துக் காணப்படும்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை வால் நட்சத்திரங்கள் மன்னர்களையும் மக்களையும் பயமுறுத்தின. வானில் வால் நட்சத்திரம் தோன்றினால் மன்னரின் உயிருக்கும் பதவிக்கும் ஆபத்து நேரும் என்ற மூட நம்பிக்கை நிலவியது. வால் நட்சத்திரம் தோன்றினால் உலகமே அழிந்து விடலாம் என மக்களும் அஞ்சினர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த மூட நம்பிக்கை நிலவியது.
பொதுவாக வால் நட்சத்திரங்கள் சூரிய மண்டல எல்லைக்கு அப்பால்
(சூரிய மண்டலத்திலிருந்து oort cloud ஆரம்ப எல்லைக்கு உள்ள தூரம் 1000-2000au-ஒரு au என்பது 149597870.691கிமீ.இது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் ஆகும்.)
ஊர்ட் முகில்(oort cloud) எனப்படும் பகுதியிலிருந்து வருகின்றன. இவை கிரகங்களைப் போலவே சூரிய குடும்பத்தைச் சேர்ந்தவை. கிரகங்கள் சூரியனை வட்ட வடிவப் பாதையில் சுற்றுகின்றன. வால் நட்சத்திரங்கள் நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்றன.
பல வால் நட்சத்திரங்கள் திரும்பத் திரும்ப தலை காட்டிச் செல்லும்.
அதற்கு ஓர் உதாரணம், Halley's Comet என்ற ''ஹாலி'' வால் நட்சத்திரம் ஆகும். அது 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து செல்வதாகும். 1680 ஆண்டு வால் நட்சத்திரத்தின் பாதையை நிபுணர்கள் கணக்கிட்ட போது அது 575 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைகாட்டலாம் என்று கருதப்பட்டது.
ஐசான் வால்நட்சத்திரம் பற்றிய ஒரு அறிமுகம்.
(1) தற்போது காண இருக்கும் ISON என்ற புதிய வால் நட்சத்திரம் 2012ஆம் ஆண்டில் மிகத் தொலைவில் வியாழன் கிரகத்துக்கு அப்பால் இருந்தபோதே ரஷியாவைச் சேர்ந்த விட்டாலி நெவிஸ்கி, ஆர்ட்யோம் நோவிசோனோக் ஆகிய இருவரும் (2012ல்) செப்டம்பர் மாதம்21ம் தேதியன்று இந்த வால்நட்சத்திரத்தை சக்திமிக்க தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளனர். அதாவது 16இன்ச் விட்டமுள்ள Reflector Telescope- (16''பிரதிபலிக்கும் தொலைநோக்கி) மூலம் கண்டறியப்பட்டது.
(2) இந்த வால் நட்சத்திரத்துக்கு C/2012 S 1 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வால் நட்சத்திரத்திற்கு ISON என்ற பெயரும் உண்டு.
அதாவது
C/2012 S 1 -இல் C என்பது காலமுறையற்ற(Non-Periodic) வால்வெள்ளி (COMET)2012 என்பது கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு. Sஎன்பது செப்டெம்பர் மாதம் இரண்டாவது பாதி(Half-Month)அதாவது கண்டுபிடிக்கப்பட்ட தேதி செப்டெம்பர் 21ம் தேதி, 1 என்பதுசெப்டெம்பர் மாதம் இரண்டாவது பாதியில் காணப்பட்ட முதல் வால்வெள்ளி.
இந்த வால் நட்சத்திரத்திற்கு இன்னொரு பெயரான
ISON என்ற பெயர்க்காரணம்-International Scientific Optical Network என்னும் சர்வதேச ஒளி ஊடகக் கூட்டமைப்பு என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால்,அதன் சுருக்கமான ISON என்ற பெயரை வைத்துள்ளனர்.
பெயருக்கான ஆங்கிலமொழி ஆக்கம் காணவும்.
The comet's formal designation is C/2012 S1. The "C" indicates that it is non-periodic, followed by the year of discovery. The "S" represents the half-month of discovery—in the case of C/2012 S1, the second half of September—and the number "1" shows that this was the first comet found in that half month. The addition of "(ISON)" after its name merely identifies the organization where its discovery was made, the Russia-based International Scientific Optical Network.
(3) இந்த ISON வால் நட்சத்திரம் உட்கரு விட்டம்- ஐந்து கிலோமீட்டர் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ISON வால் நட்சத்திரம் சாய்வு கோணம்62.39டிகிரி ஆகும்.
(4) இந்த ISON வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கும்போது அது0.012AU தொலைவில் இருக்கும். இந்த ISON வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்திலிருந்து 110இலட்சம் கிலோமீட்டர் தொலைவிற்கு வரும்.
(5) நவம்பர் மாத வாக்கில் பூமிக்கு அருகில் வரும் ISON
எனப்படும் வால் நட்சத்திரம் யார் கண்ணிலும் படாமல் தப்பாது
என்கிற அளவுக்கு அது பெரியதாக இருக்கும் என்பதுடன் தொடர்ந்து பல
நாட்களுக்கு அது காட்சி தரும். கடந்த 200ஆண்டுகளாக கண்டறிந்த வால் வெள்ளிகள் அதாவது வால் நட்சத்திரங்கள் மீண்டும்,மீண்டும் சூரியனை சுற்றி வந்தவைகளே.ஆனால் ஐசான்வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி வருவது இதுவே முதல்முறையாகும். (6)இந்த ISON வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி வருவது மனித குலம் அறிந்தவரை இதுவே முதல் தடவையாகும்.
இது சூரிய குடும்பம் தோன்றிய காலத்திலுள்ள தகவல்களை வைத்திருக்கும்.அதன்மூலம் உலகம் தோன்றியதை பற்றி மேலும் பல புதிய ஆய்வுகளை செய்ய உதவும்., பல புதிய தகவல்களையும் பெறலாம்
(7) இந்த ISON வால் நட்சத்திரம் மற்ற வால் நட்சத்திரங்களைப் போலவே சூரியனை சுற்றி விட்டு வந்த வழியே சென்று விடும்.
(8) இந்த ISON வால் நட்சத்திரம் மீண்டும் தலைகாட்ட பத்து லட்சம் ஆண்டுகள் ஆகலாம்.
(9)இந்த ISON வால் நட்சத்திரம் மிகுந்த பிரகாசத்துடன் தெரியலாம் என்று சொல்வதற்குக் காரணங்கள் உண்டு. இது நவம்பர் வாக்கில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் போது ISON வால் நட்சத்திரத்திற்கும்- சூரியனுக்கும் மிகக் குறைவான தூரமே அதாவது 11 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமே இருக்கும். இதன் காரணமாக ஐஸ் துணுக்குகள், தூசு, வாயு துணுக்குகள் வடிவில் நிறையப் பொருட்களை அது இழக்கும். ஆகவே அது பெரிய நீண்ட வாலைப் பெற்றதாக இருக்கும். ஒப்பு நோக்குகையில் இது பூமிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் .
(10) இந்த ISON வால் நட்சத்திரம்பற்றி வால் நட்சத்திர நிபுணர் ''ஹான் போர்ட்டில்' கூறுகையில் ஒரு வேளை இது 1680 ஆம் ஆண்டில் தலைகாட்டிய வால் நட்சத்திரமாகவும் இருக்கலாம் என்றார்.
(11)இந்த ISON வால் நட்சத்திரம் பற்றிக் குறிப்பிட்ட ஒருசில நிபுணர்கள் அது பற்றிய பெரிய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் போய் முடிவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளனர். அதற்கு உதாரணமாக வானில் பெரிதாக எடுப்பாகத் தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட வால் நட்சத்திரங்கள் கடந்த காலத்தில் மிகச் சிறியதாக ஒளி மங்கியதாகத் தலைகாட்டிச் சென்றுள்ளன.
(12) மிகப் பிரபலமான ஹாலி வால் நட்சத்திரம் 1910 ஆம் ஆண்டில் தலைகாட்டிய போது பிரமிப்பூட்டுவதாக இருந்தது. ஆனால் அது மறுபடி 1986 ஆம் ஆண்டில் தலைகாட்டிய போது முந்தைய அளவுக்குப் பெரிதாக இல்லாமல் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
மின் அலைகள்,ஒளி அலைகள் ஒரு விநாடிக்கு செல்லும் தூரம்=297600கி.மீ.ஆகும்.ஆக ஒரு ஒளிவிநாடி தூரம் இது.அப்படியானால் ஒரு ஒளிஆண்டு என்பது 297600X60X60X24X365=9385113600000 கி.மீ.தூரம் ஆகும். அதாவது 63241.077au ஆகும்.
astronomical unit என்னும் குறியீடான Au என்பது பூமிக்கும் சூரியனுக்கும் தூரம்- இதன் அளவு = 149597870.690கி.மீ.
| வானவியல் அதிசயங்கள் இன்னும் அறிந்து கொள்வோம். என அன்பன் பரமேஸ்டிரைவர்- தாளவாடி. |
|
|---|---|