திங்கள், 25 ஆகஸ்ட், 2014

தமிழ் வளர

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
 
தமிழ் வளர நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன ?
தமிழ் வளர தமிழரல்லாத அறிஞர்களின் கருத்து !

உல்ரிச் நிக்கோலஸ் (ஜெர்மனி) :
“நிலாச்சோறு ஊட்டுகையில் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். அம்புலிமாமாவில் ஆரம்பித்து ஆனை, சிங்கம், என்று ஆயிரம் கதைகள் அழகுத் தமிழில் உண்டு. பிள்ளைப் பிராயத்தில் இருந்தே தமிழோடு இணைந்து குழந்தைகள் நடந்தால் அவர்களும் வளர்வார்கள், தமிழும் தானாக வளரும். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டாரும், ரெயின் ரெயின் கோ அவே-வும் இத்தனை ஆண்டுகளாக நமக்கு எதைச் சாதித்துத் தந்துவிட்டன? தமிழை அழித்தததைத் தவிர!

சைமன் (நெதர்லாந்து) :
ஒரு மொழியின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. தமிழர்களைச் சென்றடைய வேண்டிய செய்திகளைச் செந்தமிழில் இல்லாவிட்டாலும் நடைமுறைத் தமிழிலாவது தர வேண்டும். இங்கு ஆங்கில ஆதிக்கம் நிரம்பி வழிகிறது. எனவே, இனி வரும் காலங்களில் இனிய தமிழோடு மக்களைச் சந்திக்கலாமே!

டிமிடா (ஜெர்மனி) :
தமிழகப் பள்ளிகளில் கட்டாயத் தமிழ்க் கல்வி வந்துள்ளதாக அறிகிறேன். தமிழ்நாட்டிலேயே தமிழில் படிப்பதைக் கட்டாயமாக்க வேண்டிய நிலை வந்தது வெட்கக்கேடு. இருந்தாலும் பரவாயில்லை. இன்று ஆரம்பித்திருக்கும் கல்விப் பயணம் எந்த ஒரு அரசியல் மாற்றத்தினாலும் மாறக் கூடாது. சில நேரங்களில் உணவைக் குழந்தைகளுக்குத் திணித்து ஊட்டுகிறோமே. அது போலத்தான் இதுவும். நாள்பட நாள்பட இந்த உணவு பிடித்துப் போகும்.

தாம்ஸ் லேமன் (ஜெர்மனி) :
ஆந்கிலத்தில் பேசினால்தான் கவுரவம் என்ற இழிநிலை இன்றைய இளவட்டங்களின் மத்தில் புதைந்து இருக்கிறது. மிக மோசமான கிருமி இது. வணக்கம், மிக்க நன்றி என்கிற வார்த்தைகளில் இல்லாத மரியாதையும் உவகையுமா ஆங்கில மொழியில் இருக்கிறது. உன் தாயோடும் தந்தையோடும் கதைக்கையில் ஆங்கிலம் எதற்கு என்பதுதான் எனது கேள்வி. நடைமுறை வாழ்க்கையில் பெரும்பான்மையான விஷயங்களைத் தமிழ்ப்படுத்துங்கள். அதாவது தமிழிலேயே கதையுங்கள். ஒவ்வொரு நாளும் தமிழோடு வாழ்வோம். தமிழனாய் வாழ்வோம்.

கலையரசி (சீனா) :
இதுபோன்ற ஒரு மாநாட்டு வேளையில் தமிழை ஞாபகம் கொள்கிறீர்கள். பிறகு மறந்து போவீர்கள்தானே? இங்கேயே பார்த்துவிட்டேன். என்னோடு தெளிவான தமிழில் பேசுகையில் பல பெண்களுக்குச் சிரிப்பும் வெட்கமும் வருகிறது. ஏன் இந்தத் தயக்கம்? நியாயப்படி எனக்குத்தான் சிரிப்பு வர வேண்டும். தமிழகத்திலிருந்து ஒளி பரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் பெண்களும் ஆண்களும் நித்தம் நித்தம் தமிழ்க் கொலை புரிதலைச் சகிக்க முடியவில்லை. அந்த நிகழ்ச்சியைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கும் அந்த சிதைக்கப்பட்ட தமிழ்தானே மனிதில் பதியும்? ஆகவே ஆரோக்கியமான தமிழ் வாழும் இடமாக உங்கள் சுற்றுப்புறத்தை மாற்றுங்கள். நான் சீன இனத்தைச் சேர்ந்தவள். தமிழ் மீது கொண்ட காதலால்தான் என் பெயரைக் கலையரசி என்று மாற்றியுள்ளேன். எவ்வளவு இனிமையான பெயர்!

பிருந்தா பெர் (கனடா)
சமுதாயத்துக்கு எந்த ஓர் உணர்வையும் அழுந்த ஊட்டுவதில் ஈடு இணையில்லாத வலிமை, கலை மற்றும் இலக்கியத்தின் வசம்தான் இருக்கிறது. பட்டிதொட்டியில் ஆரம்பித்து நவநாகரிக நகரம் வரை தமிழ் மொழியின் நங்கூரத்தை அழுத்திப் பாய்ச்ச நல்ல தமிழில் நயமான இலக்கியங்கள் தேவை. காலத்துக்கு ஏற்றபடி புதுவித இலக்கிய வடிவங்கள் உடனடியாகத் தமிழில் வேண்டும். அது சுவையுடன் இருத்தல் அவசியம்.

அஸ்கோ பர்போலா (பின்லாந்து) :
பல மொழிகள் இன்று அழிவின் விளிம்பில் நிற்பதற்கு ‘உலகமயமாக்கல்’ என்ற கருத்துரு ஒரு காரணமாகப் பேசப்படுகிறது. இதற்குத் தமிழும் தப்பவில்லை. உலகமயமாக்கலுக்கு இயைந்து நடந்தால்தான் நாமும் வளர முடியும், வல்லரசாக முடியும் என்றொரு மாயையைப் பரப்பி வருகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக நம் மொழியைக் காவு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘உலகமயமாக்கல் போக்கினாலேயே ஆங்கிலத்தின் பின் நடக்கிறேன். அப்போதுதான் இந்த உலகில் நானும் பிழைக்க முடியும்’ என்பது வெற்று உளறல். தாய்மொழியிலேயே கற்று இன்று எல்லா நிலைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும் நாடுகளாக ஜப்பானும் சீனாவும் இல்லையா? எனவே எந்தச் சூழலுக்காகவும் மொழியைப் பலியிடாதீர்கள். அது நம் சந்ததியை நரபலி இடுவதற்குச் சமம்.

அலெக்சாண்டர் துபியான்ஸ்கி (ரஷ்யா) :
உங்கள் மொழியைப் படிக்க ரஷ்ய நாட்டில் எத்தனையோ பேர் ஆர்வமாக வருகிறார்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்கும்… பணம் கிடைக்கும் என்று அவர்கள் வரவில்லை. தமிழ் மொழியைப் படித்தால் சுவையாக இருக்கிறது. அதன் அனைத்துப் பாடல்களும் மனிதாபிமானம் பேசுகின்றன, மனிதத் தன்மையை உணர்த்துகின்றன என்பதால்தான் அதைப் படிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆர்வத்துடன் தமிழ் கற்க வந்த மாணவர் ஆனவுடன்தான் நான் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளேன். ஆளுக்கு ஓர் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்துப் பாருங்கள். அதன் பிறகு உங்களால் தமிழில் இருந்து மீள முடியாது. வேலைக்காக, பணத்துக்காக இல்லாமல் இலக்கியம் படியுங்கள்.

கிரிகோரி ஜேம்ஸ் (பிரிட்டன்) :
இது போன்ற மாநாடுகளை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ 15 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ நடத்தினால் மட்டும் போதாது. தமிழ் ஆய்வு மாநாடுகளைத் தொடர்ந்து நடத்துவதன் மூலமாக மட்டுமே மக்களிடம் மொழி சார்ந்த ஒரு விழிப்புணர்பை ஏற்படுத்த முடியும். இவையே மொழிக்கு உந்து சக்தியாக அமையும். இது போன்ற நிகழ்வுகள் வெறும் விளம்பரங்களாக இல்லாமல் ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்!

ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா) :
நான் முதலில் வடமொழியைக் கற்றவன். அதன் பிறகுதான் தமிழைப் படித்தவன். உங்களது மொழியில் அனைத்துத் தன்மைகளுமே இருக்கின்றன. இப்படி ஒரு வளம் வேறு எந்த மொழிக்கும் இல்லை. இந்திய அரசு எழுதிக் கேட்டபோது தமிழிச் செம்மொழியாக ஏன் ஆக்க வேண்டும் என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் எழுதி அனுப்பியவன் நான். இது போன்ற வரலாற்றையும் மொழி வளத்தின் தன்மையையும் மற்ற நாடுகளில் இருக்கும் மொழியியல் அறிஞர்கள் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. எப்படிப்பட்ட வரலாற்றுக்கு வளத்துக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள் என்று நீங்கள் மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தால் போதாது. அதை உலகமும் ஒப்புக்கொள்ளும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும். அதைச் செய்தால் தமிழகத்துக்கு வெளியில் இருந்து எங்களைப் போன்ற ஆர்வலர்கள் தமிழ்த் தொண்டு ஆற்றக் கிளம்பி வருவார்கள்!

நன்றி :- விடுதலைமலேசியாஇன்று
தமிழ் வளர நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன ?
தமிழ் வளர தமிழரல்லாத அறிஞர்களின் கருத்து !

உல்ரிச் நிக்கோலஸ் (ஜெர்மனி) :
“நிலாச்சோறு ஊட்டுகையில் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். அம்புலிமாமாவில் ஆரம்பித்து ஆனை, சிங்கம், என்று ஆயிரம் கதைகள் அழகுத் தமிழில் உண்டு. பிள்ளைப் பிராயத்தில் இருந்தே தமிழோடு இணைந்து குழந்தைகள் நடந்தால் அவர்களும் வளர்வார்கள், தமிழும் தானாக வளரும். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டாரும், ரெயின் ரெயின் கோ அவே-வும் இத்தனை ஆண்டுகளாக நமக்கு எதைச் சாதித்துத் தந்துவிட்டன? தமிழை அழித்தததைத் தவிர!

சைமன் (நெதர்லாந்து) :
ஒரு மொழியின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. தமிழர்களைச் சென்றடைய வேண்டிய செய்திகளைச் செந்தமிழில் இல்லாவிட்டாலும் நடைமுறைத் தமிழிலாவது தர வேண்டும். இங்கு ஆங்கில ஆதிக்கம் நிரம்பி வழிகிறது. எனவே, இனி வரும் காலங்களில் இனிய தமிழோடு மக்களைச் சந்திக்கலாமே!

டிமிடா (ஜெர்மனி) :
தமிழகப் பள்ளிகளில் கட்டாயத் தமிழ்க் கல்வி வந்துள்ளதாக அறிகிறேன். தமிழ்நாட்டிலேயே தமிழில் படிப்பதைக் கட்டாயமாக்க வேண்டிய நிலை வந்தது வெட்கக்கேடு. இருந்தாலும் பரவாயில்லை. இன்று ஆரம்பித்திருக்கும் கல்விப் பயணம் எந்த ஒரு அரசியல் மாற்றத்தினாலும் மாறக் கூடாது. சில நேரங்களில் உணவைக் குழந்தைகளுக்குத் திணித்து ஊட்டுகிறோமே. அது போலத்தான் இதுவும். நாள்பட நாள்பட இந்த உணவு பிடித்துப் போகும்.

தாம்ஸ் லேமன் (ஜெர்மனி) :
ஆந்கிலத்தில் பேசினால்தான் கவுரவம் என்ற இழிநிலை இன்றைய இளவட்டங்களின் மத்தில் புதைந்து இருக்கிறது. மிக மோசமான கிருமி இது. வணக்கம், மிக்க நன்றி என்கிற வார்த்தைகளில் இல்லாத மரியாதையும் உவகையுமா ஆங்கில மொழியில் இருக்கிறது. உன் தாயோடும் தந்தையோடும் கதைக்கையில் ஆங்கிலம் எதற்கு என்பதுதான் எனது கேள்வி. நடைமுறை வாழ்க்கையில் பெரும்பான்மையான விஷயங்களைத் தமிழ்ப்படுத்துங்கள். அதாவது தமிழிலேயே கதையுங்கள். ஒவ்வொரு நாளும் தமிழோடு வாழ்வோம். தமிழனாய் வாழ்வோம்.

கலையரசி (சீனா) :
இதுபோன்ற ஒரு மாநாட்டு வேளையில் தமிழை ஞாபகம் கொள்கிறீர்கள். பிறகு மறந்து போவீர்கள்தானே? இங்கேயே பார்த்துவிட்டேன். என்னோடு தெளிவான தமிழில் பேசுகையில் பல பெண்களுக்குச் சிரிப்பும் வெட்கமும் வருகிறது. ஏன் இந்தத் தயக்கம்? நியாயப்படி எனக்குத்தான் சிரிப்பு வர வேண்டும். தமிழகத்திலிருந்து ஒளி பரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் பெண்களும் ஆண்களும் நித்தம் நித்தம் தமிழ்க் கொலை புரிதலைச் சகிக்க முடியவில்லை. அந்த நிகழ்ச்சியைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கும் அந்த சிதைக்கப்பட்ட தமிழ்தானே மனிதில் பதியும்? ஆகவே ஆரோக்கியமான தமிழ் வாழும் இடமாக உங்கள் சுற்றுப்புறத்தை மாற்றுங்கள். நான் சீன இனத்தைச் சேர்ந்தவள். தமிழ் மீது கொண்ட காதலால்தான் என் பெயரைக் கலையரசி என்று மாற்றியுள்ளேன். எவ்வளவு இனிமையான பெயர்!

பிருந்தா பெர் (கனடா)
சமுதாயத்துக்கு எந்த ஓர் உணர்வையும் அழுந்த ஊட்டுவதில் ஈடு இணையில்லாத வலிமை, கலை மற்றும் இலக்கியத்தின் வசம்தான் இருக்கிறது. பட்டிதொட்டியில் ஆரம்பித்து நவநாகரிக நகரம் வரை தமிழ் மொழியின் நங்கூரத்தை அழுத்திப் பாய்ச்ச நல்ல தமிழில் நயமான இலக்கியங்கள் தேவை. காலத்துக்கு ஏற்றபடி புதுவித இலக்கிய வடிவங்கள் உடனடியாகத் தமிழில் வேண்டும். அது சுவையுடன் இருத்தல் அவசியம்.

அஸ்கோ பர்போலா (பின்லாந்து) :
பல மொழிகள் இன்று அழிவின் விளிம்பில் நிற்பதற்கு ‘உலகமயமாக்கல்’ என்ற கருத்துரு ஒரு காரணமாகப் பேசப்படுகிறது. இதற்குத் தமிழும் தப்பவில்லை. உலகமயமாக்கலுக்கு இயைந்து நடந்தால்தான் நாமும் வளர முடியும், வல்லரசாக முடியும் என்றொரு மாயையைப் பரப்பி வருகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக நம் மொழியைக் காவு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘உலகமயமாக்கல் போக்கினாலேயே ஆங்கிலத்தின் பின் நடக்கிறேன். அப்போதுதான் இந்த உலகில் நானும் பிழைக்க முடியும்’ என்பது வெற்று உளறல். தாய்மொழியிலேயே கற்று இன்று எல்லா நிலைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும் நாடுகளாக ஜப்பானும் சீனாவும் இல்லையா? எனவே எந்தச் சூழலுக்காகவும் மொழியைப் பலியிடாதீர்கள். அது நம் சந்ததியை நரபலி இடுவதற்குச் சமம்.

அலெக்சாண்டர் துபியான்ஸ்கி (ரஷ்யா) :
உங்கள் மொழியைப் படிக்க ரஷ்ய நாட்டில் எத்தனையோ பேர் ஆர்வமாக வருகிறார்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்கும்… பணம் கிடைக்கும் என்று அவர்கள் வரவில்லை. தமிழ் மொழியைப் படித்தால் சுவையாக இருக்கிறது. அதன் அனைத்துப் பாடல்களும் மனிதாபிமானம் பேசுகின்றன, மனிதத் தன்மையை உணர்த்துகின்றன என்பதால்தான் அதைப் படிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆர்வத்துடன் தமிழ் கற்க வந்த மாணவர் ஆனவுடன்தான் நான் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளேன். ஆளுக்கு ஓர் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்துப் பாருங்கள். அதன் பிறகு உங்களால் தமிழில் இருந்து மீள முடியாது. வேலைக்காக, பணத்துக்காக இல்லாமல் இலக்கியம் படியுங்கள்.

கிரிகோரி ஜேம்ஸ் (பிரிட்டன்) :
இது போன்ற மாநாடுகளை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ 15 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ நடத்தினால் மட்டும் போதாது. தமிழ் ஆய்வு மாநாடுகளைத் தொடர்ந்து நடத்துவதன் மூலமாக மட்டுமே மக்களிடம் மொழி சார்ந்த ஒரு விழிப்புணர்பை ஏற்படுத்த முடியும். இவையே மொழிக்கு உந்து சக்தியாக அமையும். இது போன்ற நிகழ்வுகள் வெறும் விளம்பரங்களாக இல்லாமல் ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்!

ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா) :
நான் முதலில் வடமொழியைக் கற்றவன். அதன் பிறகுதான் தமிழைப் படித்தவன். உங்களது மொழியில் அனைத்துத் தன்மைகளுமே இருக்கின்றன. இப்படி ஒரு வளம் வேறு எந்த மொழிக்கும் இல்லை. இந்திய அரசு எழுதிக் கேட்டபோது தமிழிச் செம்மொழியாக ஏன் ஆக்க வேண்டும் என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் எழுதி அனுப்பியவன் நான். இது போன்ற வரலாற்றையும் மொழி வளத்தின் தன்மையையும் மற்ற நாடுகளில் இருக்கும் மொழியியல் அறிஞர்கள் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. எப்படிப்பட்ட வரலாற்றுக்கு வளத்துக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள் என்று நீங்கள் மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தால் போதாது. அதை உலகமும் ஒப்புக்கொள்ளும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும். அதைச் செய்தால் தமிழகத்துக்கு வெளியில் இருந்து எங்களைப் போன்ற ஆர்வலர்கள் தமிழ்த் தொண்டு ஆற்றக் கிளம்பி வருவார்கள்!

நன்றி :- விடுதலைமலேசியாஇன்று

திங்கள், 21 ஜூலை, 2014

காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலத்தில் கண் தான விழிப்புணர்வு முகாம்.


 மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.


                         சத்தியமங்கலம்,காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் கண் தான விழிப்புணர்வு முகாம்.



               சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்கமும்,சத்தியமங்கலம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடும் இணைந்து காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் வைத்து21.7.2014அன்று காலை கண் தான விழிப்புணர்வு முகாம் நடத்தினார்கள்.
         இந்த முகாமிற்கு கல்லூரியின் செயலாளர் திருமதி P.அருந்ததி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி  துவங்கி வைத்தார்.கல்லூரியின் தாளாளர் திரு.R.பெருமாள்சாமி அய்யா அவர்கள் தலைமை தாங்கினார்கள்.கல்லூரியின் மாணவி செல்வி.A.ரோகிணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.KGR மருத்துவமனை Dr.K.G.ரங்கநாதன் அவர்களும்,கல்லூரியின் முதல்வர் திரு.K.செந்தில்குமார் அவர்களும்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர். திரு.C.பரமேஸ்வரன் அவர்களும்,ஒருங்கிணைப்பாளர் Lion.K.லோகநாதன் அவர்களும்,தலைவர் திரு.A.A.இராமசாமி அவர்களும்,கல்லூரியின் இணை செயலாளர் திருமதி.P.மலர் செல்வி அவர்களும்,சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா.K.ராஜ்குமார் அவர்களும்,செயலாளர் அரிமா.A.உலகராஜ் அவர்களும்,பொருளாளர் அரிமா,V.ஞானஸ்கந்தப்பன் அவர்களும் முன்னிலை வகித்தார்கள்.
                 சிவகாசி அரிமா சங்க பட்டய தலைவரும்,கண் தான மாவட்ட தலைவருமான  அரிமாDr.J.கணேஷ் MJF அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்தானத்தின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.கண் தானம் பற்றிய குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.கண் தான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும்,ஸ்டிக்கர்களும் விநியோகிக்கப்பட்டன.

            கண்தான மாவட்ட தலைவர் அரிமாDr.J.கணேஷ் MJF அவர்கள் கூறுகையில் அகத்துக்கு அழகு அளிப்பவை மட்டுமல்ல கண்கள் உலகத்தை நாம் காண உதவும் அற்புத உறுப்பு.கண்கள் இல்லாத வாழ்க்கை ஓர் இருண்ட உலகம்.இத்தகைய இருண்ட உலகத்தில் வாழ்பவர்களுக்கு ஒளிவிளக்காக  கிடைத்ததுதான் கண் தானம்.மனிதர்களுக்கு மரணம் உண்டு.ஆனால் கண்களுக்கு மரணம் இல்லை.எனவே மரணத்திற்குப்பிறகுஅனைவரும் கண் தானம் செய்யலாம்.கண்ணின் கருவிழியின் பாதிப்பால் ஏறக்குறைய 68லட்சம் இந்தியர் முற்றிலும் கண்ணொளி இழந்துள்ளனர்.மறைந்தவர் தானமாக கொடுக்கும் கண்களை கொண்டுஇவர்களில் பெரும்பாலானோர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்.ஆனால் நாம் ஆண்டுதோறும் பெறும் கண் கருவிழிகளோ  சில ஆயிரங்களே.சமுதாயத்தில் தொடர்ந்து விழிப்புணர்வை அதிகரிப்பதின் மூலம் இத்தகைய கண்தான சேவையை பன்மடங்கு உயர்த்த முடியும் என்றார்.

 கண்தான விழிப்புணர்வு பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.காமதேனு கலை அறிவியல் கல்லூரியின் மாணவ,மாணவியர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பின் உறுப்பினர்களும்,ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.முகாமில் பங்கு பெற்ற மாணவ,மாணவிகளுக்கு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.முகாமின்போது தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்,பயணிகள் பாதுகாப்பு சங்கம் ஆகிய சமுக நலனுக்கான அமைப்புகள் துவங்கப்பட்டன.


             அரிமா Dr.J. கணேஷ்MJF அவர்களுக்கு '' தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்'' சார்பாக ''கண்தான வழிகாட்டி - விருது'' வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவ,மாணவியர் சிறப்பாக செய்து இருந்தனர்.கல்லூரியின் மாணவி செல்வி.J.பெனசிர் ரிஸ்வானா அவர்கள் நன்றி கூற முகாம் இனிதே நிறைவடைந்தது.

மாலை 3.30 மணியளவில் ''பார்வைக்கோர் பயணம்'' கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியில் தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கமும்,நாட்டு நலப்பணித் திட்ட மாணவ,மாணவியரும் கலந்து கொண்டனர்.பேரணியை சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் (சட்டம்& ஒழுங்கு)அவர்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் அவர்கள் மற்றும் அரிமா.K.லோகநாதன் அவர்கள் துவக்கி வைத்தனர்.பேரணி சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி முன்பு துவங்கி சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு நிறைவடைந்தது.

வெள்ளி, 18 ஜூலை, 2014

தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்.

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.

           
  தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்.வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.மஞ்சள் நகரமாம் ஈரோடு மாவட்டத்தின் சந்தன நகரமாம் நம்ம சத்தியமங்கலத்தில் வருகிற 2014ஜூலை மாதம்21 ஆம் தேதி திங்கட்கிழமைஅன்று காலை 10 மணிக்குகல்விக்கொடை தந்த கடவுளாம் காமராசர் பிறந்து விருதுநகர் மாவட்டத்தின் பட்டாஸ் நகரமாம் சிவகாசி அரிமா சங்க கண் தான மாவட்ட தலைவர் விழிக்கொடை நாயகனாம் மதிப்பிற்குரிய ஐயா Ln.Dr.J.கணேஷ் MJF அவர்களின் கண்தான விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுதுங்க..அனைவரும் வாங்க...கண்ணொளி மற்றும் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு பெறுங்க..
என,
சமூக நலனில் அக்கறையுள்ள,
அன்பன் ,
  பரமேஸ்வரன்.C 
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு.
 தலைவர்,
தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்,சத்தியமங்கலம்.
செயற்குழு உறுப்பினர்,பயணிகள் பாதுகாப்பு சங்கம்.

வியாழன், 17 ஜூலை, 2014

தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.eyevisionourmission.blogspot.in வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

       தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது !
தாம்பிரம் என்னும் செம்பு, பஞ்ச பூதத்திலே ஒன்றான தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் பழக்கம் சங்ககால முதல் தமிழகத்தில் வழக்கில் உள்ளது. சித்த மருத்துவத்தில் கண் நோய்களுக்கு செய்யப்படும் அனைத்து மருந்து வகைகளில் செம்பு ஒரு பொருளாக சேர்க்கப்படுவதும், பழக்கிராம்பு பக்குவ எண்ணெய் போன்ற கண் மருந்துகளும்,செப்பு பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதும் உண்மை.
தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் போது,கண் பகுதியில் கிருமிகள் அழிக்கப்பட்டு,கண்ணுக்கு பலனளிப்பதாக நவீன ஆராய்ச்சிகள் உரைக்கின்றன.கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்யும் காலமிது. ஆனால், வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும் அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாதம் நூற்றுக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்! தமிழ்ச்சித்தர்கள் நமக்குத் தந்த அறிவியல், பகுத்தறிவு, மருத்துவமென பரந்து கிடக்கும் கட்டில்லா அறிவியலை மீட்டெடுத்தால் தமிழும் தமிழர்களும் உலகம் போற்றும் வண்ணம் வாழக் காலமது கனிந்து கைகூடும். சித்தரியலைப் போற்றிப் பாதுகாப்போம்.

வெள்ளி, 11 ஜூலை, 2014

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
      
தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

 கண் நலம் பற்றிய சில முக்கியமான செய்திகளைத் தெரிந்து கொள்வோம்:

1. கண் புரை:

இந்தியாவைப் பொறுத்தமட்டில் மிக அதிகமான பார்வையிழப்புக்குக் காரணம் கண் புரை.கண்புரை என்பது வயோதிகம் காரணமாக நமது கண்ணில் உள்ள லென்ஸின் ஊடுருவும் தன்மை குறைவதேயாகும். கண்புரை விபத்துகளினாலும், நீரிழிவு காரணமாகவும் மேலும் சில காரணங்களாலும் வரலாம். கண் புரை என்பது முற்றிலும் குணப்படுத்தகூடிய குறைபாடே.

மேலும் கண்புரையை ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும். அறுவை சிகிச்சை மட்டுமே கண் புரைக்கான தீர்வு. மேலும் கண் மருத்துவத் துறையில் தற்போது பயன்படுத்தப்படும் முன்னேறிய மிகச்சிறந்த தொழில் நுட்பம் கண் புரையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வரப்பிரசாதமாக உள்ளது.

கண்புரை ஆபரேஷன்  செய்வதற்க்கு மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் ஏழை எளியவர்களுக்கு இலவசமாகவே சிகிச்சை அளிக்ப்படுகிறது. மாதம் ரூபாய் 8,500-க்கு குறைவான குடும்ப வருமானம் உள்ளவர்களுக்கு கட்டணச் சலுகைகளில் கேட்டராக்ட் ஆபரேஷன் செய்யப்படுகிறது.

2. க்ளகோமா எனப்படும் கண்நீர் அழுத்த நோய்:

'க்ளாக்கோமா' என்பது கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்னைகளின் தொகுப்பு. உலக அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், 'க்ளாக்கோமா' இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக அதிகரிக்கும்போது ஏற்படும் பிரச்னை இது. கண்ணின் உள் நீர் அழுத்தமானது, பார்வை நரம்பினால் தாங்கக் கூடிய அளவை தாண்டும்போது, 'க்ளாக்கோமா’ ஏற்படுகிறது.  "ஆரம்பக்கட்ட நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சையை வழங்கினால், குணம் பெறலாம். ஆனால், படிப்படியாகவே இதன் பாதிப்பு ஏற்படுவதால், தங்களுக்கு இந்நோய் இருக்கிறது என்பதே தெரியாதவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் தான் மருத்துவர்கள் 'க்ளாக் கோமா'வை 'நமக்கே தெரியா மல் நம் கண்ணுக்குள் மறைந்திருந்து தாக்கும் கள்வன்' என்கிறார்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மரபுக் காரணங்களால், ஏற்கெனவே 'க்ளாக்கோமா’ நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த சொந்தங்களுக்கும், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் மற்றும் அதிக கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கும் 'க்ளாக்கோமா’ பாதிப்பு ஏற்படலாம்.

தலைவலி, கண்வலி, சிவந்த கண்கள், குமட்டல், பக்கவாட்டுப் பார்வை பாதிப்பு, படிப்படியான பார்வை இழப்பு போன்ற கண் பிரச்னைகள், 'க்ளாக்கோமா'வுக்கான அறிகுறிகள். பொதுவாக நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
அடிக்கடி கண் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், கண்ணின் உட்பகுதிகளை முழுமை யாக அறியும் சில சிறப்புப் பரிசோதனையின் மூலம், 'க்ளாக்கோமா' பாதிப்பை அறியலாம். நோயின் படிநிலையைப் பொறுத்து சொட்டு மருந்தில் இருந்து அறுவை சிகிச்சை வரை இதற்கான சிகிச்சைகள் விரிகின்றன. எனவே, கண் மருத்துவருடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் பார்வையை பாதுகாக்க முடியும்.

3. நீரிழிவு விழித்திரை நோய்:

பாரதம் நீரிழிவின் தலைநகரமாக உள்ளது. நீரிழிவின் தாக்கத்திற்குள்ளானவர்கள், வருடம் ஒரு முறை கண்டிப்பாக முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வதன்மூலம் நீரிழிவு விழித்திரை நோயினால் பார்வையை இழப்பதைத் தடுக்க முடியும். மேலும் பெற்றோர்களுக்கு அல்லது பெற்றோர்களில் யாரேனும் ஒருவருக்கு நீரிழிவு  இருக்குமேயானால், அவர்களது சந்ததியினர் தமது முப்பது வயது முதல்,  வருடம் ஒரு முறையேனும், தமக்கு நீரிழிவு பிரச்னையிருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மருத்துவர்கள் ஆலோசனைப்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் நீரிழிவு விழித்திரை நோய் உட்பட நீரிழிவு சார்ந்த உடல் நலப் பிரச்னைகளை தவிர்க்க வாய்ப்புள்ளது.

4. சுய மருத்துவம் :

கண்களில் அடிபட்டாலோ அல்லது ஏதாவது தொற்றுக் கிருமிகளால் கண்கள் சிவந்து போனாலோ,  மருந்துக்கடையில் "கண் சொட்டு மருந்து கொடுங்கள்" என்று ஏதாவது மருந்தினைப் போடுவது கண்களுக்கு ஆபத்து. குறிப்பாக மழைக்காலங்களில் பொதுவாக "ஹலோ" சொல்லும் "மெட்ராஸ் ஐ"க்கு இப்படி மருந்துக்கடையில் சொட்டு மருந்து கேட்டு வாங்கிப்போடுவதும் ஆபத்து.

5. உணவுப்பழக்கம் :

சரியான உணவுப்பழக்கம் கண் நலத்துக்கு மிக மிக அவசியம். இது குழந்தைப் பருவத்திலிருந்தே கவனிக்க வேண்டிய குறிப்பு. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மிஞ்சிய வேறேதுமில்லை. மற்ற உணவுகள் கொடுக்க ஆரம்பித்தவுடன் கவனிக்க வேண்டிய முக்கியமான குறிப்புகள்:
* ஜெராஃப்தால்மியா எனப்படும் குழந்தைகளின் கண்கள் உலர்ந்து போகச் செய்யும் பிரச்னைக்கும் மாலைக் கண் நோய்க்கும் முக்கியமான காரணம் வைட்டமின் ஏ சத்துக்குறைபாடுதான்.

வைட்டமின் ஏ - பால், கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள்,பப்பாளி, முட்டை மற்றும் கேரட் போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.

* வைட்டமின் பி : பார்வை நரம்பின் செயல் பாட்டிற்க்கு காரணமாக இருப்பது வைட்டமின் பி.வைட்டமின் பி - அரிசி, கோதுமை, முளை கட்டிய தானியங்கள், பீன்ஸ் மற்றும் முட்டை போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.

* வைட்டமின் சி - நமது கண்ணில் உள்ள ரத்தக்குழாய்களின் ஆரோக்கியத்திற்க்கு வைட்டமின் சி மிகவும் அவசியம்.வைட்டமின் சி ஆரஞ்சு, நெல்லி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, கொய்யா, எலுமிச்சை மற்றும் தக்காளி போன்றவறில் தேவையான அளவு இருக்கிறது.

6. குழந்தைகளும் கண்ணாடியும்:

உங்கள் குழந்தை கண்ணாடி அணிய வேண்டிய நிலையிலிருந்தால் அவர்கள் கண்ணாடி அணிவதை ஊக்குவியுங்கள். அய்யோ நம் குழந்தை இந்த வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டியதாகிவிட்டாதே என்று  நீங்களே புலம்பாதீர்கள்.

குழதைகளுக்கும் காய்ச்சல் வரும், வயதானவர்களுக்கும் காய்ச்சல் வரும் என்பதை மறந்து விடாதீர்கள். கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக வருடம் ஒரு முறை கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எனெனில் பார்வைத் திறன் மாறியிருக்கலாம். தவறான கண்ணாடியை அணிவதும் கண்களை பாதிக்கும்.

7. கண்களுக்கான முதல் உதவி ஏற்பாடுகள் :

அ) கண்களில் தூசி போன்ற ஏதேனும் விழுந்துவிட்டால், அவற்றை எடுப்பதற்க்காக கண்களைக்  கசக்காதீர்கள். கண்களை லேசாக திறந்து மூடினாலே கண்ணீர் பெருக்கெடுத்து அவற்றை தானே  வெளியேற்றிவிடும். உறுத்தல் அதிகமாக இருக்குமேயானால் சுத்தமான தண்ணீரினால் கண்களை சுத்தம் செய்வதன் மூலம் தூசுகளை அகற்றிவிடலாம்.

ஆ) கண்களில் ஏதேனும் ரசாயனப் பொருட்கள் அல்லது ஆசிட் தெறித்துவிட்டால், கண்ணில் சுத்தமான தண்ணீரினால் கண்களின் எரிச்சல் நிற்க்கும் வரை அலம்ப வேண்டும். பின் உடனடியாக கண் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
இ) வெடி விபத்தினால் முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது. சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். மேலும் தீக்காயம் ஏதேனும் கண்ணில் பட்டுவிட்டால் மஞ்சள் தூள், பர்னால், பேனா மை, ஜெர்ஷியன் வைலட், பக்கத்துவீட்டார் சொல்லும் ஆயின்ட்மெண்ட் ஆகியாவற்றைப் போடக்கூடாது. இதனால் எந்த அளவுக்குக் காயம் ஏற்ப்பட்டுள்ளது என்பதை சரியாகத்ச் தெரிந்து கொள்ளமுடியாமல் போய்விடும், மேலும் அவற்றைச் சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்பபடும்.

ஈ) தொழிற்சாலை கண் விபத்துக்கள்:


தொழிற்ச்சாலைகளில் பணியாற்றும் போது கண்களில் ஏதேனும் துரும்புகள் விழுந்துவிட்டால். அவற்றை நாமே எடுக்க முயற்சி செய்யக்கூடாது. கண் மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு அதிகமாவதற்க்கு வாய்ப்பு உண்டு. ஈரமான துணி ஒன்றினை கண்ணை அழுத்தாதவாறு வைத்து மூடிக்கொண்டு உடனடியாக கண் மருத்துவரைச் சந்திக்க வேண்டும். அப்போது கண்ணில் விழுந்த பொருளின் மாதிரி இருந்தால் அதனையும் எடுத்டுச் செல்ல வேண்டும். கண்ணில் சுற்றுப்பகுதி மரத்துப்போவதற்கு மருந்து போட்டுவிட்டு கண்ணில் விழுந்த பொருளை மிகவும் இலாகவகமாக கண் மருத்துவர் எடுத்துவிடுவார்.

8. கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்:

கணிணியில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பணியாற்றுபவர்கள் 20 - 20 - 20 ஃபார்முலா வினை  பயன்படுத்தினால் சில பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதாவது கணிணியில் தொடர்ந்து 
பணியாற்றும்போது 20 நிமிடத்துக்கு ஒரு முறை 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை 20 நொடிகள் பார்ப்பதும், அல்லது 20 நொடிகள் கண்களை மூடி ரிலாக்ஸ் செய்வதும், 20 நொடிகளுக்கு ஒருமுறை  கண்களை இமைப்பதும் மிக உதவியாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு அடிக்கடி தலைவலி, வாந்தி, குமட்டல் இருக்குமேயானல் உடனடியாக கண் மருத்துவரிடம் முழுமையான கண் பரிசோதனை செய்வதன்மூலம் பர்வையிழப்பைத் தடுத்துக் கொள்ளலாம்.

9. நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால் குறிப்பாக பகல் நேரங்களில் வாகனம் ஓட்டுபவராகவும் இருந்தால் புற ஊதாக்கதிர்களைத் தடுக்கக்கூடிய குளிர் கண்ணாடியை அணிந்து கொள்வது நல்லது. முக்கியமான விஷயம், ஒரு கண் மருத்துவரிடம் அல்லது கண்ணியலாளரிடம் கண் பரிசோதனை செய்து கொண்டபின் அவர் பரிந்துரைக்கும் புற ஊதாக்கதிர்களைத் தடுக்கக்கூடிய கண்ணாடியை அணிந்து கொள்வது நல்லது.

கண்தானம் செய்வீர்:

10. தானத்தில் சிறந்தது கண் தானம். கார்னியல் பார்வைக்கோளாரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்கள் தானமாகக் கிடைத்தால் மட்டுமே செய்யக்கூடிய கார்னியா மாற்று ஆபரேஷன் மூலமே மீண்டும் பார்வை கிடைக்க முடியும். அப்படிப்பட்டவர்களுக்கு பார்வை கிடைப்பதற்க்காக கண்கள் தானமாக தேவைப்படுகிறது.

நமக்கு தெரிந்தவர்கள் யாரேனும் மரணமடைந்துவிட்டால், மரணமடைந்தவரின் உறவினரைச் சந்தித்து,  மரணமடைந்தவரின் கண்களை தானமாக வழங்குமாறு ஊக்குவித்து ஆறு மணி நேரத்துக்குள் அவர்களது கண்களை தானமாக வழங்கினால் அது ஒரு புண்ணியமான காரியமாகும்.

திங்கள், 7 ஜூலை, 2014

தாளவாடியில் இலவச கண் சிகிச்சை முகாம்-2014ல் 2

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                    வருகிற 21-ஜூலை -2014 திங்கள் கிழமை அன்று தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கத்தை துவக்கி வைத்தவுடன் முதல் கண் சிகிச்சை முகாம் வருகிற 2014 ஆகஸ்டு மாதம் 2ஆம் தேதி சனிக்கிழமை அன்று நம்ம தாளவாடியில் காலை 8-00 மணி முதல் மதியம் 1-00 மணி வரை இலவச கண் சிகிச்சை முகாம் ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழு,தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்  இணைந்து இலவச சிகிச்சை நடத்த உள்ளது.சத்தி நகர அரிமா சங்கமும் இணைந்து கொள்ள சம்மதம் கொடுத்து உள்ளனர்.
            மக்களிடையே நன்கு விளம்பரம் செய்து கொடுத்து கடந்த முறை தவற விட்டவர்களை இந்தமுறை வரவழைத்து பயன்பெற செய்வது நமது பொறுப்பு .
               கடந்த 31.5.2014 சனிக்கிழமை தாளவாடி அஸிசி ஆஸ்பத்திரியில் நடந்த கண் சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் மீண்டும் பரிசோதனை செய்துகொள்ளலாம்.அதோடு கண் சிகிச்சை பெறாத தேவையுள்ள மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு இலவச கண் சிகிச்சை பெற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.மறவாதீங்க.இது இரண்டாவது சிகிச்சை முகாம் இலவசத்தை பயன்படுத்துங்க,பயனடையுங்க....என சமூக நலப்பணியில் 


ஞாயிறு, 29 ஜூன், 2014

கண்கள் பற்றிய பாடல்-05

மரியாதைக்குரியவர்களே,
                              வணக்கம். கண்கள் பற்றிய திரைப்படப் பாடல்கள் தொடர்ச்சியாக  இதோ உங்களுக்காக .......

உன்னக் கண்டு நானாட

படம் : கல்யாணப் பரிசு
குரல் : சுசீலா
பாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை : ஏ.எம்.ராஜா
நடிகை : சரோஜாதேவி


பாடல்

உன்னக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து
உறவாடும் நேரமடா...
உறவாடும் நேரமடா...

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா..
வளர்ந்தாலே போதுமடா..

சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
வேறேன்ன வேண்டுமடா...
வேறேன்ன வேண்டுமடா...

(உன்னைக்) 

-------------------------------------------------------------------
 

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

படம் - பாபு

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
தந்து பொழி பொழிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

---------------------------------------------------------------
 

ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்

படம் : ஆயிரத்தில் ஒருவன்
குரல் : பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி.
பாடல் : வாலி
நடிகை : ஜெயலலிதா

ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா
நான் ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா

(ஆடாமல்)

விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்
யார் கூடுவார்..

(ஆண்டவனை)

குயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார்
மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்
இளம்பெண்ணின் கண்ணீரை யார் மாற்றுவார்
எரிகின்ற நெஞ்சத்தை யார் தேற்றுவார்
யார் தேற்றுவார்

(ஆண்டவனை)

------------------------------------------------
 

அடி ஆத்தாடி... நீ போகும் பாதை எங்கே..

படம்: கடலோரக்கவிதைகள்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்


அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அடி அம்மாடி...
நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே
விழி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது
அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே....
அடி ஆத்தாடி....

சொந்தம் என்ன சொந்தம் என்று
சொல்லவில்லை அப்போது
பக்கம் வந்து பார்த்துச் சொல்ல
இறக்கை இல்லை இப்போது
காதல் வந்து சேர்ந்த போது..
வார்த்தை வந்து சேரவில்லை
வார்த்தை வந்து சேர்ந்த போது
வாழ்க்கை ஒண்ணு சேரவில்லை
பூசைக்காகப் போன பூவு
பூக்கடைக்கு வாராது...
கற்றுத் தந்த கண்ணே
உன்னைக் குற்றம் சொல்லக் கூடாது...
மனம் தாங்காது..... ஓஓஒ...

அடி அம்மாடி...
நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே!
அடி ஆத்தாடி நீ போகும் பாதை
எங்கே பொன்மானே!

கண்ணே! இது ஊமைக்காதல்
காத்திருந்து நொந்தேனே!
தண்டனைக்குப் பின்னே நீயும்
சாட்சி சொல்ல வந்தாயே!
காத்திருந்து ஆனதென்ன
கண்ணீர் வற்றிப் போனதென்ன
தேர் முறிஞ்சு போனபின்னே...
தெய்வம் வந்து லாபமென்ன
என்ன சொல்லி என்ன பெண்ணே!
என்னைச்சுற்றி வேதாந்தம்
பாறாங்கல்லில் முட்டிக்கொண்டு
முட்டைக்கென்ன வேதாந்தம்
இனி பூகம்பம்... ஓஓஓ...

அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அடி அம்மாடி...
நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே..
விழி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது

அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே....
அடி ஆத்தாடி.... 

-------------------------------------------------------------------------
 

அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா

படம் - பாமா விஜயம்

ஏன்னா, நீங்க சமத்தா? இல்ல அசடா?
சமத்தா இருந்தாக் கொடுப்பேளாம்,
அசடா இருந்தா மறுப்பேளாம்,

ஏண்டி, புதுசாக் கேக்குறே என்னப் பாத்து

அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா? அவ
ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா?

அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவைய வாங்கிக்கறா பட்டுப் பொடவைய வாங்கிக்கறா

அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி அவன்
சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்குறாண்டி - பட்டு

உங்களுக்குத்தான் வாழ்க்கைப்பட்டு
என்னத்தைக் கண்டா பட்டு
பட்டு கிட்டு பேரைச்சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு
நாளுங்கிழமையும் போட்டுக்க ஒரு
நகை நட்டுண்டா நேக்கு
எட்டுக்கல்லு பேசரிபோட்டா
எடுப்பா இருக்கும் மூக்கு
சட்டியிலிருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு
எப்போ இருந்தது இப்போ வரதுக்கு
எதுக்கெடுத்தாலும் சாக்கு
ஹுக்கும்

ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு
பேசினா என்ன வெப்பேளோ ஒரு குட்டு
ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு

என்னத்த செய்வேள் - ஹாங்
சொன்னதச் செய்வேன்
வேறென்ன செய்வேள் -
அடக்கி வப்பேன்
அதுக்கும் மேலே -
ஆங் பல்ல உடப்பேன்

அடுத்தாத்து அம்புஜத்தெப் பாத்தேளா

---------------------------------------------------
 

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

படம் : பட்டணத்தில் பூதம்
குரல் : T.M.S., சுசீலா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசை :M.S.V.
நடிகர்கள் : ஜெய்சங்கர்+கே.ஆர்.விஜயா


அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன்
இல்லாமல் தோகை ஏதடி

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...

கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை

நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று
நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும்
கண்ணில் நின்றாடச் சொல்லடி

மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ
மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்
மாறாது மாறாது இறைவன் ஆணை

இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி - இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - தோகை
இல்லாமல் வேலன் ஏதடி...

ஆ......ஆ......ஆஆஆஆ

அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
சேதி சொல்லடி... என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி....

-----------------------------------------------------------------------
 

ஊருக்கும் வெட்கமில்லை

படம்: யாருக்கும் வெட்கமில்லை
பாடியவர்: ஜேசுதாஸ்
எழுதியவர் - தெரியவில்லை


ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன..!
ஏ சமுதாயமே....

மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று
தெரிந்தவர் இல்லையடா..!
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்
அதுதான் தொல்லையடா..!

அத்தனை பழமும் சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே..!
அத்திப்பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெக்கமில்லை..!
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்..!
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்..!

சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில்..!
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினை காட்டுதடா..!
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்..!
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்..!

அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை..!
அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை..!
இப்போதிந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை..!
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும் வெட்கமில்லை..! 

---------------------------------------------------
 

எத்தனை கோடி பணமிருந்தாலும்

படம் : அன்பு எங்கே
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : வேதா


எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே

உத்தமமான மனிதர்களைத்தான்
உலகம் புகழுது ஏட்டிலே
உலகம் புகழுது ஏட்டிலே

அர்த்த ராத்திரி பனிரெண்டு மணிக்கு
ஆடிக்கொண்டே நுழைவதை
அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து
ஆர்ப்பாட்டங்கள் செய்வதை
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
வெட்கம் வருவது இல்லையா
சின்னையா நீ சொல்லையா

எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே

அன்னமிட்டுத் தாலாட்டி
ஆசையோடு வளர்த்தாள் - அந்த
அன்னையரின் எண்ணம் தன்னைக்
கனவினிலே வளர்த்தே
முன்னவர் போல பெயரெடுத்து
முறையோடு வாழும்
முடிவு கொள்வீர் வாழ்வினில் நாளும்
துணை புரிவேன் நானும்

எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே

கண்கள் பாடல்கள் -04

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். இதோ உங்களுக்காக திரைப்படப்பாடல்கள் தொடர்ச்சி .....

கண்களால் நான் வரைந்தேன்

படம்: மங்கள நாயகி
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா
இசை: வி.குமார்


ஜேசுதாஸ்:
கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை

கண்களால் நான் வரைதேண்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை

மார்கழி மாதம் என்றால்
ஆஆஆஆஆஆ ..
மார்கழி மாதம் என்றால்
போர்வை போல் நானிருக்க
சித்திரை மாதம் என்றால்
வாடை போல் நீயிருக்க
நான் சூடும் மாலைகள் நீ கொண்ட கைகள்
நெய் கொண்ட தீபங்கள் மை கொண்ட கண்கள்
பூவும் பொட்டும் மேவும் பெண்மை
பூவைப் போலே நாளும் மென்மை

கண்களால் நான் வரைதேண்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை

உன் நலம் நினைப்பதெல்லாம் என் நலம் நானறியேன்
உன்னை நான் வாழ வைக்க என்னையே நான் கொடுப்பேன்
சொந்தங்கள் பந்தங்கள் உண்டான பின்பு
மென்மேலும் வளர்கின்ற நிலவாகும் அன்பு
உன்னைப் பாடும் எந்தன் உள்ளம்
என்றும் பொங்கும் கங்கை வெள்ளம்

சுசீலா:
கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை

காலங்கள் கனியும் வரை கன்னி நான் காத்திருப்பேன்
கண்னனின் வரவுக்கென்றே கண் மலர் பூத்திருப்பேன்
கல்யாண வைபோகம் ஊர்கோலம் யாவும்
நன் நாளில் உன்னோடு நான் காண வேண்டும்
எண்ணம் எல்லாம் கண்ணில் மின்ன
சொல்லில் சொல்ல மிச்சம் என்ன

ஜேசுதாஸ்:
கண்களால் நான் வரைதேண்
அன்பெனும் ஓர் கவிதை
சுசீலா: தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை 

------------------------------------------------------------
 

கண் போன போக்கிலே கால் போகலாமா?

படம்: பணம் படைத்தவன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா
?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?


நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?


பொய்யான சில பேர்க்குப் புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?


திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?

-------------------------------------------------------------------------------------------
 

என்ன பார்வை உந்தன் பார்வை

படம் : காதலிக்க நேரமில்லை
குரல் : ஜேசுதாஸ், சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : வி.ரா
நடிகர்கள் : முத்துராமன், காஞ்சனா


என்ன பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்ல பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா....ஆ..


என்ன பார்வை உந்தன் பார்வை
எனை மறந்தேன் இந்த வேளை
வண்ண வண்ணச் சேலை தொட்டுக்
கண்ட சுகம் அம்மம்மா....ஆ...

தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா
சின்னச் சின்ன நெஞ்சில் உன்னை
எண்ண எண்ண அம்மம்மா... ஹோய்..

கன்னங்கள் என்னும் தங்கத் தட்டு
கை பட்டு சின்னங்கள் கொண்டதோ
சொல்லச் சொல்ல உள்ளம் துள்ளும்
இன்பம் என்ன சொல்லம்மா... ஹோய்

( என்ன )

மை கொண்ட கண்கள் மெல்ல மூடும்
பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ
பிஞ்சுத் தென்றல் நெஞ்சைத் தொட்டுக்
கொஞ்சக் கொஞ்ச அம்மம்மா...ஹோ

ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்
ஏன் மிச்சம் கண்ணல்ல ஓடி வா
அக்கம்பக்கம் யாரும் இல்லை
வெட்கம் என்ன சொல்லம்மா.. ஹோ..

( என்ன )

-----------------------------------------------------
 

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்

இசை: வேதா
நடிகை: ஜெயலலிதா
படம்: யார் நீ
வருடம்: 1966
பாடல்: கவியரசு கண்ணதாசன்
குரல்: பி. சுசீலா


என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா?
உலகமே மாறி மாறி பார்க்கும்
போது மயக்கமேன் கண்ணா?
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது
அழுவதேன் கண்ணா?

நேற்று வந்தேன் இன்று வந்தேன்
உன்னிடம் நாளை நான் வருவேன்
ஒரே நாளில் இங்கும் அங்கும்
உன் முகம் காண நான் வருவேன்
உன் பாதையிலே உன் பார்வையிலே
என் மேனி வலம் வரும் கண்ணா

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா?

துன்ப மழையில் நின்ற போது
கண்களில் உன்னை நான் கண்டேன்
அதே வழியில் அதே மழையில்
என் வாழ்வை காண செல்கின்றேன்

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா?
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது
அழுவதேன் கண்ணா?

கால தேவன் வாசல் வழியே
போகிறேன் இன்று நீ யாரோ
போகும் வழியில் அன்பு முகத்தை
பார்க்கிறேன் நாளை நான் யாரோ
உன் மாளிகையில் என் நினைவிருந்தால் என்
நெஞ்சை மன்னிப்பாய் கண்ணா

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா? 

-------------------------------------------------------------------
 

என் கண்மணி உன் காதலி

படம்: சிட்டு குருவி
பாடல்: என் கண்மணி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பி. சுசீலா
இசை: இளையராஜா

ஆண்: என் கண்மணி.. உன் காதலி.. இளமாங்கனி,
உனைபார்ததும் சிரிக்கின்றதே..சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

பயணி: நன்னா சொன்னேள் போங்கோ..

பெண்: என் மன்னவன்.. உன் காதலன்
எனை பர்த்ததும்.. ஓராயிரம்..
கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

ஆண்: என் கண்மணி

ஆண்: இரு மான்கள் பேசும் போது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்க்கும் வழி ஏதம்மா

பெண்: ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்

ஆண்: இளமாமயில்..

பெண்: அருகாமையில்..

ஆண்: வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று,
அனுபவம் சொல்லவில்லையோ

கண்டக்டர்: இந்தாம்மா கருவாட்டு கூடை முன்னாடி போ

பெண்: என் மன்னவன்..உன் காதலன்
எனை பர்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

ஆண்: என் கண்மணி..

கண்டக்டர்: தேனாம்பேட்டை சூப்பர்மாக்கெட் எறங்கு..

ஆண்: மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே

பெண்: அதற்காக நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாள சின்னம் அன்று தரவேண்டுமே

ஆண்: இரு தோளிலும்.. மண்மாலைகள்

பெண்: கொண்டாடும் காலம் என்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

ஆண்: என் கண்மணி, உன் காதலி, இளமாங்கனி,
உனைபார்ததும் சிரிக்கின்றதே..சிறிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

பெண்: என் மன்னவன், உன் காதலன்
எனை பர்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான்..
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூன்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
ஆண்: என் கண்மணி

என் கண்மணி.. உன் காதலி
இள மாங்கனி...எனைப் பார்த்ததும்..
சிரிக்கின்றதே.. சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ

..... நன்னா சொன்னேள் போங்கோ..

என் மன்னவன்.. உன் காதலன்
எனைப் பார்த்ததும்..ஓராயிரம்..
கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
அம்மம்மா.. இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

(என் கண்மணி)

இரு மான்கள் பேசும்போது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்
இளமாமயில்.. அருகாமையில்
வந்தாடும் காலம் என்று கூடும் என்று
அனுபவம் சொல்வதில்லையோ..

... இந்தம்மா கருவாட்டுக் கூடை.. முன்னாடி போ..

(என் மன்னவன்)

.. தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு...

மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொட வேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் பட வேண்டுமே
அதற்காக நேரம் ஒன்று வர வேண்டுமே
அடையாளச் சின்னம் ஒன்று தர வேண்டுமே
இரு தோளிலும் மண மாலைகள்
வந்தாடும் நேரம் என்று கூடும் என்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

(என் கண்மணி)

---------------------------------------------------------------------------------------
 

கண்கள் பாடல்கள்-03

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். திரைப்படப் பாடல்கள் தொடர்ச்சி...........

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே

படம்:கர்ணன்
பாடியவர்: பீ.சுசீலா
இசை: எம். எஸ்.விஸ்வனாதன் -T.K.ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
நடிகை: தேவிகா


ஒலிவடிவில்

கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

கால்கள் இங்கே நெளியும் இங்கே
கால்கள் இங்கே நெளியும் இங்கே
காவலின்றி வந்தன இங்கே ஆஆஆ...

குழுவினர்:
ஆஆஆஆஆ

சுசீலா:
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

குழுவினர்:
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅ

சுசீலா:
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்

குழுவினர்:
ஆஆஆஆஆ

சுசீலா:
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கொண்டு துடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கொண்டு துடிக்கும்
துணை கொள்ள அவனின்றித்
தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு
ஏனிந்த மயக்கம் ஆஆஆஆஆஆஅ...
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே ஏஏஏஏஏஏஏ

குழுவினர்:
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅ

சுசீலா:
இனமென்ன குலமென்ன
குணமென்ன அறியேன்
குணமென்ன அறியேன்

குழுவினர்:
ஆஆஆஆஆ

சுசீலா:
ஈடொன்றும் கேளாமல்
எனையங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மதயானை
உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு
நானிங்கு மெலிந்தேன்
ஆஆஆஆஆஆஆ

குழுவினர்:
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே

சுசீலா:
கண்டபோதே சென்றன அங்கே
குழுவினர்: கண்கள் எங்கே 

------------------------------------------------------------

கண்ணில் என்ன கார்காலம்

படம் - உன் கண்ணில் நீர் வழிந்தால்
வரிகள் - வைரமுத்து
இசை - இளையராஜா
பாடியவர்கள்-எஸ்.பி.பாலசுப்ரமணியம்+ ஜானகி



கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு
விழியில் விழும் துளி என் மார்பில்
வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே

கண்ணில்...

நான் ஏங்கும் சுமையாக ஏன் வந்தேன்
சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும்

கண்ணில்...

இருள் மூடும் கடலோடு நான் இங்கே
என் தோணி கரை சேரும் நாள் எங்கே
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்
நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம்

கண்ணில்...
 -----------------------------------------------------------

கண்ணின் மணியே கண்ணின் மணியே

படம் - மனதில் உறுதி வேண்டும்.
பாடியவர் – சித்ரா
நடித்தவர் - சுகாசினி




கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன
கண்களில் என்ன
நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம்
வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா
அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும்
ஊமைகள் தானா

கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன

கண்களில் என்ன
நீரோட்டமா
சாத்திரங்கள் பெண் இனத்தை
மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும்
மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண் இனத்தை
மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும்

மீசை துடித்ததம்மா

வீடாளும் பெண்மை இங்கே
நாடாளும் காலம் வந்தும்
ஊமைகள் போலவே என்றும்
ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கத்தான்
இப்போதும் ஆளில்லை
சமநீதி சேர்க்கின்ற
சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடியவில்லை

கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன
கண்களில் என்ன
நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம்
வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா
அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும்
ஊமைகள்தானா

கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன

கண்களில் என்ன
நீரோட்டமா
பாய் விரிக்கும் பாவை என்ன
காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு
காதல் அடிமைகளா
பாய் விரிக்கும் பாவை என்ன
காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு

காதல் அடிமைகளா

பொன் அள்ளி வைத்தால்தான்
பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏழையர்க்கெல்லாம்
பொல்லாத தனிமைக் கோலம்
எரிகின்ற நேரத்தில்
அணைக்கின்ற கையில்லை
சொல்கின்ற வார்த்தைகள்
ஒவ்வொன்றும் பொய்யில்லை
கனவுகளில் மிதந்த படி
கலங்குது மயங்குது பருவக்கொடி

கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன
கண்களில் என்ன
நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம்
வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா
அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும்
ஊமைகள்தானா

கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன

கண்களில் என்ன
நீரோட்டமா

---------------------------------------------------------------

 

கண்ணால் பேசும் பெண்ணே

படம் : மொழி
பாடல் : கண்ணால் பேசும் பெண்ணே
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம்

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவைசெய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறுதவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா

எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி
எனது சாபங்களை தீரடி
(கண்ணால்)

நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே
பெண்ணே அறிந்துகொண்டேன் இயல்பே அழகு என்றே
பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன்
மௌனம் பேசும்போது சப்தம் கேட்கமாட்டேன்
மூன்றாம் பிறையின் உள்ளே நிலவைத் தேடமாட்டேன்
வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி
O I'm Sorry I'm Sorry I'm Sorry (4)
(கண்ணால்)

எங்கே குறுநகை எங்கே குறும்புகள் எங்கே கூறடி
கண்ணில் கடல்கொண்ட கண்ணில் புயல்சின்னம் ஏசோ தெரியுதடி
செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும்
பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும்
காரப்பார்வை வேண்டாம் ஓரப்பார்வை போதும்
வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்
வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி
O I'm Sorry I'm Sorry I'm Sorry (4)
(கண்ணால்)

கண்கள் பற்றிய பாடல்கள்-02

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.
               இதோ உங்களுக்காக கண்கள் பற்றிய திரைப்படப் பாடல்கள்.

கல்லை மட்டும் கண்டால்

படம்: தசாவதாரம்
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு எண் அறியாது

அஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அட்சரம் பார்க்காது

ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்

(கல்லை மட்டும் கண்டால்)

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாது

வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கே சூரியன் உதிக்காது

இராஜலஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன்தான்
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன்தான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன்தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்

(கல்லை மட்டும் கண்டால்)

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

வீசும் காற்று வந்து விளக்கை அணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா?

கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா?

சைவம் என்று பார்த்தால தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது 


--------------------------------------------------------------------------
 

கனாக் காணும் காலங்கள்

பாடியவர்:மதுமிதா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: நா முத்து

கனாக் காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாது கோலம் போடுமா

விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமா

இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகள் இன்னொரு நரகம்
இளமையின் அதிசயம்

இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும்
கடவுளின் ரகசியம்

உலகில் மிக இனித்திடும் பாஷை
இதயம் இரண்டு பேசிடும் பாஷை
மெதுவாய் இனி மழை வரும் ஓசை...

நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறென்றால் நட்பு என்று பெயரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவையென்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை

தனிமையில் கால்கள் எதைத் தேடிப் போகிறதோ?
திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ?

தாயோடும் சில தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழியில்லையே....

இது என்ன காற்றில் இன்று ஈரப்பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசிக் கொண்டு அந்திவேளை அழைக்கிறதே
அதிகாலை நேரம் எல்லாம் தூங்காமல் விடிகிறதே
விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே

நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்
படபடப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனித்துளியாய் அது மறைவது ஏன்
நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மன நடுக்கம் அது மிகக் கொடுமை 

--------------------------------------------------------------------------

 

கனாக் காணும் கண்கள் மெல்ல

படம் - அக்னி சாட்சி
குரல்கள் - S.P பாலசுப்ரமணியம், சரிதா
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் - வாலி




கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே!

கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே!
உலாப் போகும் நேரம் கண்ணே!

குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ!

குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ!

நொடியில் நாள் தோறும் நிறம் மாறும் தேவி
விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி!
விளக்கு ஏற்றி வைத்தால் கூட,
நிழல் போலத் தோன்றும் நிஜமே!
நிழல் போலத் தோன்றும் நிஜமே!

“நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்
உன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால்தான்,
உன் நிழல் விழுந்த நிலத்தின் மண்ணைக்கூட
என் நெற்றியில் நீறு போல்,
திருநீறு போல் இட்டுக்கொள்கிறேன்”


கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல

புதிய கவிதை புனையும் குயிலே
நெஞ்சில் உண்டான காயம் என்ன?
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று,
நிகழ்காலம் கூறும் கண்ணே!
நிகழ்காலம் கூறும் கண்ணே!

கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே!


-------------------------------------------------


கண்ணே கலைமானே

படம் மூன்றாம் பிறை
குரல் கே. ஜே. ஜேசுதாஸ்
பாடல் கண்ணதாசன்
இசை இளையராஜா


கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு..
பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே.. கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்..
எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி...
நீதானே என் சந்நிதி...

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ... 

------------------------------------------------------------------
 

கண்ணிழந்த மனிதன் முன்னே ஓவியம்...

படம்: ஆடிப் பெருக்கு
இசை: ஏ.எம்.ராஜா
பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா + பீ.சுசீலா
நடிகர்கள்: ஜெமினி + சரோஜா தேவி


சுசீலா:
கண்ணிழந்த மனிதன் முன்னே
ஓவியம் வைத்தார்
கண்ணிழந்த மனிதன் முன்னே
ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன் முன்னே
பாடல் இசைத்தார்...
பாடல் இசைத்தார்

ராஜா:
கண்ணிருந்தும் ஓவியத்தைக்
காட்டி மறைத்தார்
இரு காதிருந்தும் பாதியிலே
பாட்டை முடித்தார்
பாட்டை முடித்தார்

சுசீலா:
ஆட வந்த மேடையிலே
முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்கு
தடையை விதித்தார்
ஆட வந்த மேடையிலே
முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்கு
தடையை விதித்தார்
காய்ந்து விட்ட மரத்தினிலே
கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்கிளியின்
சிறகை ஒடித்தார்

கண்ணிழந்த மனிதன் முன்னே
ஓவியம் வைத்தார்

ராஜா:
கண்ணிருந்தும் ஓவியத்தைக்
காட்டி மறைத்தார்...
காட்டி மறைத்தார்

சுசீலா:
பெண் பெருமை பேசிப் பேசிக்
காலம் கழிப்பார்
தன் பெருமை குலையும் என்றால்
பெண்ணை அழிப்பார்
பெண் பெருமை பேசிப் பேசிக்
காலம் கழிப்பார்
தன் பெருமை குலையும் என்றால்
பெண்ணை அழிப்பார்

ராஜா:
முன்னுமில்லை பின்னுமில்லை
முடிவுமில்லையே
மூடன் செய்த விதிகளுக்கு
தெளிவுமில்லையே

சுசீலா:
கண்ணிழந்த மனிதன் முன்னே
ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன் முன்னே
பாடல் இசைத்தார்...
பாடல் இசைத்தார்
கண்ணிழந்த மனிதன்
முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன்
முன்னே பாடல் இசைத்தார்...
பாடல் இசைத்தார் 

--------------------------------------------
 

பூங்காற்றிலே உன் சுவாசத்தை...

படம்: உயிரே
குரல்: உன்னிமேனன், சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து


ஓ...கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா

பூங்காற்றிலே...

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா

காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே
ஓடோடி வா...

பூங்காற்றிலே...

கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை

வானம் எங்கும் உன் விம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா

பூங்காற்றிலே...

கண்கள் பற்றிய திரைப்பாடல்கள் - 01

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். உங்களுக்காக , கண்கள் சம்பந்தமான இனிய பாடல்கள்,



விழியே விழியே உனக்கென்ன வேலை

படம் : புதிய பூமி
குரல் : டி.எம்.எஸ், பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி.

விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக - நீ
தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக

விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
மருந்து தந்தாலும் தரலாம்
இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன
இங்கு நான்கு கண்களூம் உறவாட...
இங்கு நான்கு கண்களூம் உறவாட...

கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே
கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
கரும்புச் சாறு கொண்டு வருவாயோ
கிளியே கொஞ்சம் தருவாயோ
கேட்டுத் தருவது சரிதானா
கிளியின் சொந்தம் என்ன அதுதானா
பாலும் பழமும் தேனும் தினையும்
நாலும் தருவேன் மேலும் தருவேன்
என்ன வேண்டும் இன்னும் சொல்லலாமா

(விழியே)

காவேரிக் கரையின் ஓரத்திலே
தாலாட்டும் தென்றல் நேரத்திலே
கலந்து பேசிக் கொள்ள வருவாயோ
கனியே கொஞ்சம் தருவாயோ
ஆற்றங்ரை என்ன அவசியமா
அதிலும் சொந்தம் என்ன ரகசியமா
தேதி குறித்து ஊரை அழைத்து
காலம் அறிந்து மாலை அணிந்து
தர வேண்டும் தந்து பெற வேண்டும்

(விழியே) 

----------------------------------------------------------------------
 

விழியும் விழியும் நெருங்கும் பொழுது

படம் : சதுரங்கம்
இசை : வித்தியாசாகர்
கவிதை : அறிவுமதி

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

காதலினால் காதல் தொட்டு விடு
ஆதலினால் நாணம் விட்டு விடு

முத்தம் ஒன்று தந்தவுடன் மூடி கொள்ளும் கண்கள்
மொத்தமாக கூந்தல் அள்ளி மூடி கொள்ளும் கைகள்

உடல் இறங்கி நீந்தும் என்னை உயிர் இழுத்து செல்லும்
ஒய்வு தந்த காரணத்தால் உடைகள் நன்றி சொல்லும்

விரலும் விரலும் இறுகும் பொழுது
முதுகின் சுவரில் வழியும் விழுது

உறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு...

புயல் முடிந்து போன பின்னே
கடல் உறங்க செல்லும்

கண் விழித்த அலை திரும்ப
களம் இறங்க சொல்லும்

உயிர் அணுக்கள் கோடி நின்று ஓசை
இன்றி கிள்ளும்

ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை
இங்கு துள்ளும்

இமையின் முடியால் உடலை உழவா
இளமை வயலில் புயலை நடவா

இசைத்திடாமல் இசைத்திடாமல் மூச்சு விடு... 

-----------------------------------------------------------------------------
 

விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்...

படம் - கிளிஞ்சல்கள்
வரிகள் -
இசை -
பாடியவர்கள் -



விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்
அரங்கில் ஏறுதாம்
ஓ.. ஓ.. ஓஓ..

July i love You
July i love You

மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும்
மன்னவனின் திருவுருவம்

மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும்
மன்னவனின் திருவுருவம்

மனவீணை என நாதமீட்டி
கீதமாகி நீந்துகின்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா

விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்
அரங்கில் ஏறுதாம்
ஓ.. ஓ.. ஓஓ..

July i love You
July i love You

நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

உன் நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

ஒரு மாலையிலே மஞ்சள் வெயில் போல வந்து
நெஞ்சமதில் நீ வீச
மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென
உள்ளமதில் நீ பொங்க

விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்
அரங்கில் ஏறுதாம்
ஓ.. ஓ.. ஓஓ..

July i love You
July i love You


-----------------------------------------------------------------------

முதல் முதலில் பார்த்தேன்

பாடியவர்கள் - சித்ரா+ஹரிகரன்
இசை - தேவா
படம் - ஆஹா

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே

நந்தவனம் இதோ இங்கேதான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்

நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்

முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே
உயிர் வாழுமே

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே

உத்தரவே இன்றி உள்ளே வா
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்
அந்த நொடி அன்பே என் ஜீவன்
வேறெங்கு போனது பாரடி உன்னில்
உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்
உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்
என் சுவாசக் காற்றில் எல்லாம்
உன் ஞாபகம்.. உன் ஞாபகம்

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே 

----------------------------------

 

பார்த்த ஞாபகம் இல்லையோ

படம் : புதிய பறவை
பாடல் : பார்த்த ஞாபகம் இல்லையோ
பாடலாசிரியர் : கவியரசர் கண்ணதாசன்
இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வனாதன்


பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே என் நெஞ்சமோ? (பார்த்த)

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்திநேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சிலகாலம்! (பார்)

இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்! (பார்)

அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை (பார்)

---------------------------------------------------------

 
 

சுட்டும் விழிச் சுடரே

படம் : கஜினி
பாடல் : நா.முத்துக்குமார்
பாடியவர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி, பாம்பே ஜெயஸ்ரீ
இசை : ஹரிஸ் ஜெயராஜ்


பல்லவி
======
ஆ: சுட்டும் விழிச் சுடரே சுட்டும் விழிச் சுடரே
என் உலகம் உன்னைச் சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம் தொட்டுத் தொட்டு உரச
என் இதயம் பற்றிக் கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன்
கண் விழித்து சொப்பனம் கண்டேன் உன்னாலே
கண் விழித்து சொப்பனம் கண்டேன்
(சுட்டும் விழிச் சுடரே ...)

சரணம் - 1
=========
ஆ: மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்
பெ: தூக்கத்தில் உளறல் கொண்டேன்
தூறலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவைக் கொண்டேன்
ஆ: கருப்பு வெள்ளைப் பூக்கள் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன் (உன் கண்கள்)
பெ: சுட்டும் விழிச் சுடரே..

சரணம் - 2
==========
பெ: மரங்கொத்திப் பறவை ஒன்று
மனங்கொத்திப் போனதென்று
உடல் முதல் உயிர்வரை தந்தேன்
ஆ: தீயின்றித் திரியும் இன்றி
தேகங்கள் எரியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்
பெ: மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும் போது மழை அழகு
கண்ணாலே கோபப்பட்டால் வெயில் அழகு (கண்ணாலே)
ஆ: சுட்டும் விழிச் சுடரே...... 


--------------------------------------------------------------------------------

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே

படம் : சித்தி
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : M.S.V

நடிகை : பத்மினி

பாடல் ஒலிவடிவில்

பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் ஒரு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கம் இல்லை
என்னரிய கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு

ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளுதமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி
தீராத தொல்லையடி

(காலமிது)

மாறும்..
கன்னி மனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும்போது
தூக்கம் என்பதேது
தான் நினைத்த காதலனை
சேர வரும்போது
தந்தை அதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது..
கண்ணுறக்கம் ஏது..

மாலையிட்ட தலைவன் வந்து
சேலை தொடும்போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது..
கண்ணுறக்கம் ஏது

(காலமிது)

ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும்போதும்
அன்னை என்று வந்தபின்னும்
கண்ணுறக்கம் போகும்
கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து
காலம் வந்து சேரும்
காணாத தூக்கமெல்லாம்
தானாகச் சேரும்
தானாகச் சேரும்

(காலமிது)

ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ
 

புதன், 25 ஜூன், 2014

சத்தியில் இருதின முப்பெரும்விழா-2014

மரியாதைக்குரியவர்களே,

               வணக்கம்.தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
          இருதின முப்பெரும் விழா 
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.அமைப்பின் சார்பாக (1)போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு தின விழா,(2)அனைத்திந்திய ஓட்டுநர்கள் தினவிழா,(3)தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் துவக்க விழா என முப்பெரும்விழா நடைபெற உள்ளது.

முதலாம் நாள் 20 ஜூலைமாதம் 2014 ஞாயிறு அன்று 
 போலீஸ் பொதுமக்கள் நல்லுறவுக்கான விளையாட்டுப்போட்டி நடைபெறும்.
                                                 அறிமுக கூட்டம்
தலைமை; 
முன்னிலை;
வரவேற்புரை;
நன்றியுரை;
 இடம்;சத்தியமங்கலம்,        நேரம்; காலை 7.00 மணிக்கு துவக்கம்
(1)இறகுப்பந்தாட்டப் போட்டி
துவக்கி வைப்பவர்;திரு.
 நடுவர் திரு.
கலந்துகொள்ளும் அணிகள்;
காவல்துறை அணிகள் கலந்து கொள்ளும் எண்ணிக்கைக்கு ஏற்ப பொதுமக்கள் அணிகள் அனுமதிக்கப்படும்.



 இரண்டாம் நாள் 21 ஜூலை மாதம் 2014 திங்கள் அன்று 
                   மழைநீர் சேமிப்போம் மற்றும்

 கண்தானம் செய்வோம் என விழிப்புணர்வு ஊர்வலம்.
சத்தியமங்கலம் நகரம். நேரம் காலை 10 மணி
ஊர்வலம் புறப்படும் இடம்;
சேரும் இடம்;
தலைமை; 
முன்னிலை;
 ஊர்வலம் துவக்கி வைப்பவர்; 


 முப்பெரும் விழா
இடம்;

 (1) போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு தினவிழா
துவக்கிவைத்து உரை; திரு.

(2)அனைத்திந்திய ஓட்டுநர்கள் தினவிழா
துவக்கிவைத்து உரை; திரு.

(3)தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் துவக்கவிழா
துவக்கி வைத்து உரை;திரு.

சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கல் நிகழ்ச்சி

போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாராட்டுச்சான்றும் பரிசும் வழங்குதல்.

(அ)இறகுப்பந்தாட்டம்.
முதல் பரிசு வழங்கி பாராட்டுரை;
திரு.
 இரண்டாம் பரிசு வழங்கி பாராட்டுரை;
திரு.


கட்டுரைப்போட்டிகள்
பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை.
முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் 
பரிசு வழங்கி பாராட்டுரை;
 கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை.
முதலிடம் மற்றும் இரண்டாமிடம்
பரிசு வழங்கி பாராட்டுரை.

சிலம்ப ஆசான் பொன்னுசாமி அவர்களுக்கு பாராட்டுரை;
சிலம்ப பயிற்சி ஆட்டம் நடைபெறும்.
கண்தானம் விழிப்புரை
அரிமா Dr.J.கணேஷ் MJF அவர்கள் அகில உலக அரிமா கண்தான மாவட்டத்தலைவர்,சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்கம்.

அனைவரின் கவனத்திற்கு
 கட்டுரைப்போட்டிகள் 
வந்து சேர கடைசி நாள்;10 ஜூலை 2014.
முடிவு அறிவிக்கும் நாள்;17-7-2014
கட்டுரை விதிமுறைகளுக்கு உட்பட்டது.
மற்றும் மாறுதலுக்கு உட்பபட்டது.
(1)பள்ளி மாணவர்களுக்கான  தலைப்பு.
(அ) ''மழைநீர் உயிர் நீர்'' - ( இளையோர் பிரிவு).
(ஆ) ''பார்வையற்றோர் இல்லாத பாரதம் படைப்போம்''(மூத்தோர் பிரிவு.)

(2)கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு.
''விபத்தில்லா சாலைப் பயணம்''

(3)

 (4)