அன்பார்ந்த நண்பர்களே,
வணக்கம்.அன்னை பூமி தமிழே - வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.இந்த பதிவில் எழுத்ததிகாரத்தின் இரண்டாம் பாகமான ''எழுத்துப்புணரியல்'' பற்றி காண்போம்.
(15)எழுத்துப் புணர்ச்சி ஆவது யாது?
நிலைமொழி யீறும் வருமொழி முதலும் ஒன்றுபடப் புணர்வதாம்.
(அதாவது முதல் வார்த்தையின் கடைசி எழுத்தும் அடுத்து வரக்கூடிய வார்த்தையின் முதல் எழுத்தும் ஒன்றுபட இணைந்து வருதல் ஆகும்.)
(16) அப்புணர்ச்சி (எழுத்துப்புணர்ச்சி) எத்தனை வகைப்படும்?
இயல்புப் புணர்ச்சி,விகாரப்புணர்ச்சி என இருவகைப்படும்.
(17) இயல்புப் புணர்ச்சி ஆவது யாது?
நிலைமொழியும் வருமொழியும் விகாரமின்றிப் புணர்வது இயல்புப் புணர்ச்சியாம்.
உதாரணம்;- பொன் + மணி = பொன்மணி, நிலம் + வலிது =நிலம்வலிது. போன்றவை எந்த மாற்றமும் இல்லாமல் புணர்ந்து ஒலிப்பதைக் கவனிக்கவும்.
(18)விகாரப்புணர்ச்சி ஆவது யாது?
யாதானும் ஓரெழுத்துத் தோன்றவும்,ஓரெழுத்து மற்றொன்றாகத் திரியவும்,உள்ள எழுத்துக் கெடவும் மொழிகள் புணர்வது விகாரப்புணர்ச்சியாம்.
(ஏதேனும் ஒரு எழுத்து புதியதாகச் சேர்வது அல்லது உள்ள எழுத்து வேறு எழுத்தாக மாற்றமடைந்து புணர்வது அல்லது உள்ள எழுத்து நீங்கிப் புணர்வது ஆகும்.ஏதோ ஒரு வகையில் விகாரம் அடைந்து இணைவது ஆகும்)
(19)அவ்விகாரம் எத்தனை வருகையாம்?
ஓரெழுத்துத்தோன்றவும் தோன்றல்,ஓரெழுத்து மற்றொன்றாகத்திரியவும் திரிதல்,உள்ள எழுத்துக் கெடவும் கெடுதல் அதாவது நீங்குதல் என மூன்று வகையாகும்.
உதாரணம்;- வாழை+பழம் = வாழைப்பழம் ('ப்' தோன்றல்),பொன்+குடம் =பொற்குடம் ('ன் - ற்' ஆக திரிதல்),மரம் + அவர் =மரவர் ('ம்' எழுத்து கெடுதல் )கவனிக்கவும்.
(20) உயிரெழுத்துக்குப்பின் உயிர் வந்தால் எவ்விதமாய் விகாரப்படும்?
இ,ஈ,ஐ என்னும் எழுத்துக்களுக்குப் பின் உயிர் வந்தால் ,இடையிலே யகரமெய் தோன்றும்.
உதாரணம்;- மணி +அழகு = மணியழகு, நீ + அறண = நீயறண, மலை + அருவி =மலையருவி.
ஏகாரத்திற்குப் பின் உயிர் வந்தால்,இவ்விடத்தில் ல கரமும் சிலவிடத்தில் ய கரமும் தோன்றும்.
உதாரணம்;-சே + ஏறி =சேலேறி, நீயே + அவன் =நீயேயவன்.
மற்ற உயிருக்குப்பின் உயிர் வந்தால், வ கரம் தோன்றும்.
உதாரணம்;-மக+அரிது =மகவரிது, ஆ+ உரிஞ்சி =ஆவுரிஞ்சி, திரு+ உரை =திருவுரை, பூ +அழகிது = பூவழகிது, நொ+அழகா =நொவ்வழகா, கோ+இல் =கோவில், கௌ +அழகிது =கௌவழகிது.
(21)உயிரெழுத்துக்குப்பின் '' க்,ச்,த்,ப்'' வரின் எவ்விதமாம்?
உயிரெழுத்துக்குப்பின் வரும் ''க்,ச்,த்,ப்'' பலவிடத்தில் இரட்டிக்கும்.
உதாரணம்;- மற்ற+ காரியம்=மற்றக்காரியம், இந்த+சத்தம் =இந்தச்சத்தம், இனி+தருவேன் =இனித்தருவேன், அந்த+பொருள் =அந்தப்பொருள், அவனுக்கு + கொடுத்தான் =அவனுக்குக்கொடுத்தான்....... .போன்ற வார்த்தைகளை நன்கு கவனிக்கவும்..............
(22) ய்,ர்,ழ் என்னும் மெய்யெழுத்துக்களுக்குப்பின் ''க்,ச்,த்,ப்'' வரின் எவ்வாறாம்?
ய்,ர்,ழ் என்னும் மெய்யெழுத்துக்களுக்குப்பின் ''க்,ச்,த்,ப்'' வரின் அவை பெரும்பாலும் இரட்டிக்கும்.
உதாரணம்;- போய்+சொன்னான்= போய்ச்சொன்னான், கார்+பருவம் =கார்ப்பருவம், வீழ்+தூண் =வீழ்த்தூண் .......போன்ற வார்த்தைகளை நன்கு கவனிக்கவும்.........
(23) தனிக்குறிலைச் சார்ந்த மெய்யெழுத்துக்குப்பின் உயிர் வந்தால் எவ்வாறாம்?
தனிக்குறிலைச் சார்ந்த மெய்யெழுத்துக்குப்பின் உயிர் வந்தால்அந்த மெய்யெழுத்து இரட்டிக்கும்.
உதாரணம்;- மண் + அழகு= மண்ணழகு, மெய்+ அழகு=மெய்யழகு,
(24) மெல்லெழுத்து எப்பொழுது இரட்டிக்கும்?
குற்றெழுத்தைச் சேர்ந்த யகரத்திற்குப் பின்னும், தனி ஐகாரத்திற்குப் பின்னும் மெல்லெழுத்து இரட்டிக்கும்.
உதாரணம்;- செய் + நன்றி =செய்ந்நன்றி ,, கை+மாறு =கைம்மாறு இவ்வார்த்தைகளில் மெல்லின எழுத்து இரட்டித்து இருப்பதை நன்கு கவனிக்கவும்.
(25) மொழியீற்று மகரம் எப்பொழுது திரியும்?
மொழியீற்று' ம'கரம் அடுத்து 'க'கரம் வரின் 'ங'கரமாம்.உதாரணம்;-மனம்+களித்தது =மனங்களித்தது.
ச'கரம் வரின் ஞ'கரமாம்.
உதாரணம்;-மரம்+சாய்ந்தது=மரஞ்சாய்ந்தது.
ந'கரம் வரின் ந'கரமாம்.
உதாரணம்;-செம்+நெல் =செந்நெல்,
சிலவிடங்களில் மொழியீற்று ம'கரம் கெடுவதும் உண்டு.
உதாரணம்;-மனம்+நலம் =மனநலம்.
(26)மொழியீற்று 'ண'கரம் எப்பொழுது திரியும்?
மொழியீற்று 'ண'கரம் வருமொழி முதலில் க'கரம்,ச'கரம்,ப'கரம் வரின் 'ட'கரம் ஆகும்.
உதாரணம்;-மண்+குடம்= மட்குடம், மண்+சாடி =மட்சாடி, மண்+பானை =மட்பானை.
(27) மொழியீற்று 'ன'கரமும்,'ல'கரமும் எவ்வாறு திரியும்?
மொழியீற்று 'ன'கரமும்,'ல'கரமும் வருமொழி முதலில்,'க'கரம்,'ச'கரம்,'ப'கரம் வரின், 'ற'கரமாய்த் திரியும்.
உதாரணம்;-பொன்+குடம்= பொற்குடம், பொன்+சாடி =பொற்சாடி, பொன்+பானை=பொற்பானை, கல்+கூடம்=கற்கூடம்,வரல்+சிறிது=விரற்சிறிது, விரல்+புரம்=விரற்புரம்.ஆகிய வார்த்தைகளை கவனிக்கவும்.
(28)மொழியீற்று 'ள'கரம்,'க'கரம்,'ச'கரம்,'ப'கரம் வரின் எவ்வாறாம்?
மொழியீற்று 'ள'கரம்,'க'கரம்,'ச'கரம்,'ப'கரம் வரின்,'ட'கரமாகும்.
உதாரணம்;-முள்+கூர்மை=முட்கூர்மை, கள்+சொறிந்தான் = கட்சொறிந்தான், முள்+புறம் = முட்புறம்.
(29)மொழியீற்று 'ல'கரம்,'ம'கரம் வரின் எவ்வாறாம்?
மொழியீற்று'ல'கரம் 'ம'கரம் வரின் 'ன'கரமாகும்.
உதாரணம்;-கல்+மலை =கன்மலை.
(30)மொழியீற்று 'ள'கரம்,'ம'கரம் வரின் எவ்வாறாம்?
மொழியீற்று 'ள'கரம்,'ம'கரம் வரின் ,'ண'கரமாகும்.
முள்+முடி=முண்முடி.
(31) மொழியீற்று 'ண'கரம்,'ன'கரம் வரின் எவ்வாறாம்?
மொழியீற்று 'ண'கரம்,'ன'கரம் வரின் பின்வரும் 'த'கரம் முறையே,'ட'கரமாகவும்,'ற'கரமாகவும் திரியும்.
உதாரணம்;-கண்+திறந்து=கண்டிறந்து, பின்+தொடர்ந்து=பின்றொடர்ந்து.
(32) 'ண'கரத்திற்கும் 'ன'கரத்திற்கும் பின்வரும் 'ந'கரம் எவ்வாறாம்?
'ண'கரத்திற்கும் 'ன'கரத்திற்கும் பின்வரும் 'ந'கரம் முறையே 'ண'கரமாகவும்,'ன'கரமாகவும் திரியும்.
உதாரணம்;-கண்+நெறிது=கண்ணெறிது.,பின்+நெடிது=பின்னெடிது.
(33)'ல'கரமும்,'த'கரமும் புணரும்போது எவ்வாறாம்?
'ல'கரமும்,'த'கரமும் புணரும்போது இரண்டும் 'ற'கரமாகும்.
உதாரணம்;-கடல்+திரை=கடற்றிரை., வில்+தழும்பு= விற்றழும்பு.
ஒரு 'ற'கரம் கெடுதலும் உண்டு.
உதாரணம்;-பால்+தீது=பாறீது.
(34) 'ல'கரமும் 'ந'கரமும் புணரும்போது எவ்வாறாம்?
'ல'கரமும் 'ந'கரமும் புணரும்போதுஇரண்டும் 'ன'கரமாகும்.
உதாரணம்;-கல்+நன்று=கன்னன்று.,நல்+நெறி=நன்னெறி.
ஒரு 'ன'கரம் கெடுதலும் உண்டு.
உதாரணம்;-விரல்+நீண்டது=விரனீண்டது.
(35) 'ன'கரத்திற்கு பிறகு 'த'கரம் வரின் எவ்வாறாம்?
'ன'கரத்திற்கு பிறகு 'த'கரம் வரின் அவையிரண்டும் 'ட'கரமாகும்.
(36)'ள'கரமும் 'ந'கரமும் புணரும்போது எவ்வாறாம்?
'ள'கரமும் 'ந'கரமும் புணரும்போது இரண்டும் 'ண'கரமாகும்.
உதாரணம்;-முள்+நுனி=முண்ணுனி.,கள்+நாற்றம்=கண்ணாற்றம்.
ஒரு 'ண'கரம் கெடுதலும் உண்டு.
உதாரணம்;-அருள்+நலம்=அருணலம்.
(37)தனிக்குறில் அணையாத 'ண'கரத்திற்குப் பின்னும்,'ன'கரத்திற்குப்பின்னும் மொழி முதல் 'ந'கரம் எவ்வாறாம்?
'ண'கரத்திற்குப் பின்னும்,'ன'கரத்திற்குப்பின்னும் மொழி முதல் 'ந'கரம் கெடும்.
உதாரணம்;- கலண்+நெடிது=கலணெடிது., கலன்+நெடிது=கலனெடிது.
(38) மொழியீற்றுக்குற்றியலுகரம் உயிரெழுத்துக்குப்பிறகு எவ்வாறாம்?
மொழியீற்றுக்குற்றியலுகரம் உயிரெழுத்துக்குப் பின் கொடும்.
உதாரணம்;-காடு+அலர்ந்தது=காடலர்ந்தது.
(39)வேறு விகாரம் உண்டோ?
பல விகாரங்களும் உண்டு.
உதாரணம்;-பனை+காய்=பனங்காய்., அரசு+கோடு=அரசங்கோடு.,என வரும்.இன்னும் பலவற்றை சேகரித்து கவனிக்கவும்.
இத்துடன் எழுத்ததிகாரம் நிறைவுற்றது.அடுத்தது சொல்லதிகாரம் தொடரும்..............

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக